கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில் காலியாக உள்ள கல்வி இயக்குநர் / கல்வி ஆணையர் பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிப்பதற்கான நேர்காணல் 2025 செப்டம்பர் 09, 10, 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் காலை 9.00 மணி முதல் நடைபெறும். அதன்படி, நேர்காணலுக்கான தேதிகள் மற்றும் நேரங்கள் மற்றும் நேர்காணலில் கலந்து கொள்ளும்போது கொண்டு வர வேண்டிய ஆவணங்களைக் குறிக்கும் ஆவணம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு, கீழே பதிவிறக்கம் செய்யலாம்.
-
“இந்தக் கல்வி முறைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ள வேறுபாட்டினை மாற்றுவது எமது பிரதான குறிக்கோள்.”
– பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய
புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களுடன் கல்வி அமைச்சில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இதன்போது புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக அதிபர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் புதிய சீர்திருத்தங்களின் பாட தொகுதிகள் (மொடியுள்) தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம் மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழு உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இடையே காணப்பட வேண்டிய பரஸ்பர உறவின் முக்கியத்துவம் மற்றும் அதன் மூலம் கல்வித் துறையில் ஏற்படும் முன்னேற்றம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
“இந்தக் கல்வி முறைமையில் நிலவும் வேறுபாட்டினை மாற்றுவது எமது பிரதான நோக்கங்களில் ஒன்றாகும். அதற்கமைய, ஒரு பிள்ளைகள் குழுவினருக்கு மட்டுமல்ல, சகல பிள்ளைகளுக்கும் நமது கல்வி முறைமையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய இடத்தை அடையக்கூடிய ஒரு கல்வி முறைமையை உருவாக்குவதே எங்கள் முதன்மை நோக்கமாகும்” என பிரதமர் மேலும் தெரிவித்தார்.
மேலும், இந்தப் புதிய கல்விச் சீர்திருத்தங்களின்போது அதிபர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் மிகவும் முக்கியமானவை என்றும், எதிர்காலத்தில் கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து மாவட்ட மட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுடனும் கலந்துரையாடுவது அவசியம் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் திரு. நாலக களுவெவ, கல்வி அமைச்சு மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தின் உத்தியோகத்தர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஊடகப் பிரிவு
-
கொழும்பு சுதேச மருத்துவ பீடத்தின் பல பிரச்சினைகளுக்கு உயர் கல்வி பிரதி அமைச்சரிடமிருந்து தீர்வுகள்…
கொழும்பு சுதேச மருத்துவ பீடத்தின் மாணவ மாணவிகளின் வதிவிடப் பயிற்சிகள் தாமதமடைவதைத் தவிர்த்தல், விடுதி முகாமைத்துவம், வளப்பற்றாக்குறை போன்ற பல பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகளை முன்வைப்பதற்கும், அது தொடர்பிலான அடுத்தகட்ட கலந்துரையாடல்களை நடாத்துவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக உயர் கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனெவிரத்ன அவர்கள் தெரிவித்தார்.
2025.08.12ஆம் திகதி கொழும்பு சுதேச மருத்துவ பீடத்தின் மாணவர் பிரதிநிதிகள் குழுவுடன் கொழும்பு 07, வோர்ட் பிரதேசம், உயர் கல்விப் பிரிவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
மாணவர்களின் வதிவிடப் பயிற்சியை தாமதமின்றி மேற்கொள்வதற்காக கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன இணைந்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கிறது. அதேவேளை, தற்போது பொரல்லை சுதேச மருத்துவ பீடத்திற்குரியதான விடுதி சரியான வகையில் முகாமைத்துவம் செய்யப்படாமை, விடுதி உரிய முறையில் பராமரிப்பு செய்யப்படாமை, விடுதியில் இருக்கும் மாணவர்கள் எதிர்கொள்ளும் நலனோம்புகை பிரச்சினைகள் மற்றும் விடுதி வசதிகளை வழங்கக் கூடிய நிலைமை இருக்கின்ற போதிலும் வாடகை விடுதிகளுக்காக அதிகளவு பணம் செலவிடப்படுவது போன்ற பல பிரச்சினைகளை மாணவர் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். அதற்கமைய, பீடத்தின் நிர்வாகத்தினருடன் கலந்துரையாடி அவசியமான ஆலோசனைகளை வழங்க எம்மால் முடிந்தது. இது தொடர்பாக மேலும் தலையீடு செய்வதன் மூலம் மாணவர்களின் நலனோம்புகை மற்றும் ஏனைய பிரச்சினைகளையும் மிக விரைவில் எம்மால் தீர்க்க முடியும்.
அதிகரித்து வரும் மாணவர் பதிவுகளுக்கு அமைவாக பௌதீக மற்றும் மனித வள மேம்பாட்டின் அவசியத்தை மாணவர்கள் சுட்டிக் காட்டியதோடு குறுகிய காலத்தில் அரசாங்கத் தரப்பிலிருந்து அதற்கான தீர்வுகளை நாம் முன்வைக்க முடியும். குறிப்பாக ஆய்வுகூட வசதிகள், நூலக வசதிகள், கற்றல் மண்டப வசதிகள், உணவக வசதிகள் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்குத் தேவையான தலையீட்டினைச் செய்வதற்கும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இதற்கு மேலதிகமாக பாடத்திட்டத்தில் காணப்படுகின்ற சிக்கல் நிலைமைகள், மருத்துவப் பயிற்சி தொடர்பான சிக்கல்கள் மற்றும் வதிவிட மருத்துவப் பயிற்சி தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பீடத்தின் பிரதிநிதிகள் , மாணவர் பிரதிநிதிகள் உள்ளிட்ட சகல தரப்பினரின் பங்கேற்புடன் கலந்துரையாடலொன்றை நடாத்த நாம் எதிர்பார்க்கிறோம். இது தொடர்பாக ஒரு விரிவான கலந்துரையாடல் கண்டிப்பாக அவசியம். எனவே, எதிர்காலத்தில் அந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எங்களால் பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட மேலும் சில அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
-
தொழிலொன்றினை இலக்காகக் கொள்வதனை விட அதற்கு அப்பாற்பட்ட விரிவான அர்த்தப்பாட்டுடன் கூடியதான ஓர் இலக்கு கல்வித் துறைக்கு அவசியம்
– கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய-
தொழிலொன்றினை இலக்காகக் கொண்டு கல்வியைப் பெற்றுக் கொடுப்பதனை விட அதற்கு அப்பாற்பட்ட விரிவான ஓர் குறிக்கோள் கல்வித் துறைக்கு அவசியம் என கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
கல்வி நிர்வாகச் சேவை உத்தியோகத்தர்களின் திறன் மேம்பாடு தொடர்பில் கடந்த ஜூன் மாதம் 08ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரையில் இந்தியாவில் நடைபெற்ற பயிற்சி அமர்வினை நிறைவு செய்து நாட்டுக்கு வருகை தந்த கல்வி நிர்வாகச் சேவை உத்தியோகத்தர்களுடன் கல்வி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் சகல மாகாணங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இரண்டு உத்தியோகத்தர்கள் வீதம் இப்பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதோடு பொதுநலவாய நாடுகளின் ஆசிய கற்றல் ஊடக மையத்தினால் இப்பயிற்சி அமர்வு நடாத்தப்பட்டது.
இதுவரையில் எதுவிதமான வெளிநாட்டுப் பயிற்சிகளையும் பெற்றிராத நாடு முழுவதும் சேவையில் ஈடுபட்டுள்ள கல்வி நிர்வாகச் சேவையின் உத்தியோகத்தர்கள் இப்பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.
இந்தியாவில் பெற்றுக்கொண்ட பயிற்சியின் அடிப்படையில் இந்நாட்டின் கல்வித் துறையில் இடம்பெறவேண்டிய மாற்றங்கள் மற்றும் குறித்த பயிற்சியைப் பெற்ற உத்தியோகத்தர்களின் பண்புத்தரம் மிக்க சேவையை கல்வித் துறையின் முன்னேற்றத்திற்காக ஈடுபடுத்துதல் இதன் குறிக்கோளாகும்.
கல்வி அமைச்சின் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டுக் கல்விக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி நிகழ்ச்சிக்கு கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் அமல் எதிரிசூரிய, பரீட்சைகள் திணைக்களம், தேசிய கல்வி நிறுவகம், கல்விச் சீர்திருத்தக் கிளையின் சார்பில் அதன் உத்தியோகத்தர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.ஊடகப் பிரிவு.
-
கடற்றொழில் , விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற தொழில்முயற்சியாளர்களை உருவாக்கும் கல்வி சீர்திருத்தத்தை மேற்கொள்ளுங்கள்.
– பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித்
பிள்ளைகளிடம் விழுமியங்களை வளர்ப்பதும், பாடசாலை கல்வியை இடையில் நிறுத்திய பிள்ளைகளை தொழிற்கல்விக்கு வழிநடத்துவதுமே கல்வி சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கம்.
– பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
பிள்ளைகளிடம் விழுமியங்களை வளர்ப்பதும், பாடசாலை கல்வியை இடையில் நிறுத்திய பிள்ளைகளை தொழிற்கல்விக்கு வழிநடத்துவதும் அதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பை உறுதி செய்வதும் கல்வி சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கமாகும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடலொன்று பேராயர் மேன்மைதங்கிய கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையிலான ஆயர்களுடன் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் கொழும்பு பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஆகஸ்ட் 7 ஆம் திகதி நடைபெற்றது.
இதன்போது பிரதமரும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவவும் கல்வி சீர்திருத்தங்கள் குறித்த முழுமையான விளக்கத்தை முன்வைத்தனர்.
எல்லா பிள்ளைகளுக்கும் உயர்தரமாகக் கருதப்படும் வேலைகளில் ஈடுபட வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதுடன், கடற்றொழில், மின் கைத்தொழில் துறை மற்றும் வாகன பழுதுபார்ப்பு போன்ற தொழிற்கல்வித் துறைகளின் பெறுமதியை விளக்கி, அத்துறைகளில் நிபுணர்களை உருவாக்குவதற்கான அடித்தளத்தை பாடசாலைக்குள்ளேயே எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதில் பாடத்துறை நிபுணர்களைத் தேர்ந்தெடுப்பதன் முக்கியத்துவம், அந்த தேர்வு செயல்முறையை முறைப்படுத்துதல் மற்றும் பிள்ளைகளுக்கு சிறந்த தரமான கல்வியை வழங்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்த நிகழ்வில் இலங்கை ஆயர் பேரவையின் தலைவர் மேன்மைதங்கிய ஆயர் ஹரோல்ட் அந்தோணி உள்ளிட்ட ஆயர்கள் கலந்து கொண்டனர்.
ஊடக அலகு.
-
2025 ஆம் ஆண்டில் இரண்டாம் பள்ளி தவணை முடிவடைந்து மூன்றாம் பள்ளி பருவத்தின் ஆரம்பம்
“2025ம் ஆண்டில் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான இரண்டாவது பாடசாலைத் தவணை 2025.08.07ம் திகதி வியாழக் கிழமை நிறைவடைவதுடன் மூன்றாவது தவணை 2025.08.18ம் திகதி திங்கட் கிழமையன்று ஆரம்பமாகும்.
முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாவது தவனை 2025.08.19ம் திகதி செவ்வாய்க் கிழமை நிறைவடைவதுடன், மூன்றாம் தவணை 2025.08.25ம் திகதி திங்கட் கிழமை ஆரம்பமாகும்.”
-
கல்வி அமைச்சின் விசாரணை அலகினை வலுப்படுத்தி புலனாய்வுகளை துரிதப்படுத்துங்கள்.
– கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி
ஹரினி அமரசூரிய-பாடசாலைகள் தொடர்பில் கிடைக்கின்ற முறைப்பாடுகளைச் சரியாகவும் செயற்றிறன் மிக்கதாகவும் மேற்கொள்வதற்காக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் விசாரணை அலகிற்கு அவசியமான உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையை முழுமைப்படுத்தி வலுப்படுத்துமாறும், நிலவும் விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் குழு அறை இலக்கம் ஒன்றில் நேற்று (06) இடம்பெற்ற கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் பாராளுமன்ற அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்தில் அதன் தவிசாளராக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
பத்தாவது பாராளுமன்றத்தில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் சார்பில் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்தின் இரண்டாவது கூட்டம் பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது.
அதன்போது கல்விச் சீரமைப்பு தொடர்பான ஆசிரிய பயிற்சி மற்றும் அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்தல், தற்காலிக கட்டிடங்களில் நடாத்திச் செல்லப்படும் பாடசாலைகளை நிரந்தர இடங்களில் தாபித்தல், விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு தொழிற்றுறைக் கல்வி அணுகலை பெற்றுக் கொடுத்தல் மற்றும் பல்கலைக்கழக அணுகலைப் பெற்றுக் கொடுத்தல், ஆசிரிய, அதிபர் மற்றும் ஆசிரிய கல்விச் சேவையின் நியமனங்கள் மற்றும் இடமாற்றக் கொள்கையை உரிய முறையில் நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
நியமனங்களைப் பெற்றுக் கொடுக்கும் போது மனிதாபிமான தேவைப்பாடுகள் தொடர்பிலும் அத்துடன் நிலவும் வெற்றிடங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டுமெனவும், இடமாற்றங்கள் மற்றும் இணைப்புச் செயற்பாடுகளின் போது கல்விக் கட்டமைப்பில் பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம் அவற்றை மேற்கொள்வது அவசியமெனவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார். கல்வித் துறையுடன் தொடர்புடையதாக கிடைக்கின்ற முறைப்பாடுகளை துரிதமாக விசாரணை செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய கல்வி அமைச்சின் விசாரணைப் பிரிவில் நிலவும் வெற்றிடங்களை பூரணப்படுத்தி துரிதமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் கூடியதாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் விடயப் பொறுப்பு அமைச்சராக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
கல்விச் சீரமைப்பு தொடர்பில் நியமிக்கப்பட்ட உப குழுக்களின் முன்னேற்றம் தொடர்பிலும் இதன்போது உரிய குழுக்களின் தவிசாளர்கள் விடயங்களை முன்வைத்தனர்.
கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனெவிரத்ன, தொழிற் கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ, கல்வி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இக்கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர்.
ஊடகப் பிரிவு
-
“ஒட்டுமொத்த நாட்டிலும் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய கல்விச் சீர்திருத்தச் செயற்பாட்டுக்கு பங்களிப்பது மகா சங்கத்தினரின் தேசிய கடமையாகும்…”
“விடயப் பொறுப்பு அமைச்சரோ அல்லது செயலாளரோ இந்தளவு தெளிவுடன் இங்கு வந்து விளக்கமளிக்கும் இதுபோன்ற விழிப்புணர்வூட்டல் அனுபவம் இதற்கு முன்னர் கிடைத்ததில்லை…”
“அந்த அர்ப்பணிப்பு தொடர்பில் மகா சங்கத்தினர் என்ற வகையில் நாம் பாராட்டுகின்றோம்…”
-அமரபுர, ராமண்ய மகா நிகாயங்களின் மகா சங்கத்தினர் பிரதமரிடம் தெரிவித்தனர்-
புதிய கல்விச் சீர்திருத்தம் என்பது வெறும் கல்வித் துறையில் மேற்கொள்ளப்படும் மாற்றம் மாத்திரமன்றி, அதனூடாக ஒட்டுமொத்த நாட்டிலும் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதால் அதற்கு பங்களிப்பது மகா சங்கத்தினரின் தேசிய கடமையாகும் என இலங்கை அமரபுர நிகாயத்தினதும் ராமண்ய நிகாயத்தினதும் மகா சங்கத்தினர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிடம் தெரிவித்தனர்.
புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக அமரபுர, ராமண்ய நிகாயங்களின் தலைமைத்துவ மகா சங்கத்தினரை தெளிவூட்டும் விசேட கலந்துரையாடல் பிரதமரின் பங்குபற்றலுடன் ஆகஸ்ட் 04ஆம் திகதி இலங்கை ராமண்ய மகா நிகாயத்தின் மகா சங்கத் தலைமையகத்தில் நடைபெற்றது.
இதன்போது புதிய கல்விச் சீர்திருத்தங்களின் தேசிய தேவைப்பாடு, பாடத்திட்டங்கள், மதிப்பீட்டுச் செயற்பாடுகள் இடம்பெறும் விதம் மற்றும் சீர்திருத்தங்களின் எதிர்பார்ப்புகள் தொடர்பிலான விரிவான விளக்கம் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ ஆகியோரினால் மகா சங்கத்தினருக்கு வழங்கப்பட்டது. அதன்போது மகா சங்கத்தினரால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்களுடன் கலந்துரையாடி அவற்றுக்கான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.
புதிய கல்விச் சீர்திருத்த செயற்பாட்டின் போது கல்வி அமைச்சு. தேசிய கல்வி நிறுவகம், தேசிய கல்வி ஆணைக்குழு, கல்வி வெளியீட்டுத் திணைக்களம் மற்றும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் ஆகிய நிறுவனங்களுக்குரித்தான விசேட பொறுப்புக்கள் மற்றும் அந்நிறுவனங்களுக்கிடையில் காணப்பட வேண்டிய சிறந்த தொடர்புகள் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மகா சங்கத்தினர் இதன்போது பிரிவொனாக் கல்வி, தம்ம பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிக் கல்வி முறைமையில் இடம்பெற வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டதுடன், முன்மொழிவு சீர்திருத்தம் மூலமாக பாடசாலையில் இரண்டாம் மொழிக் கற்றலுக்கு கூடுதல் சந்தர்ப்பமளித்தலின் முக்கியத்துவம் தொடர்பிலும் சுட்டிக்காட்டினர்.
அத்துடன் ஒரு அமைச்சுக்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் என்ற வகையில் இந்த சீர்திருத்தம் தொடர்பில் விரிவான தெளிவுடன் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ ஆகியோர் மேற்கொள்ளும் இந்த தெளிவுபடுத்தல் மற்றும் அர்ப்பணிப்பு தொடர்பில் கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும் எனத் தெரிவித்து இதன்போது மகா நிகாயங்களின் மகா சங்கத்தினரால் ஆசிர்வாதம் அளிக்கப்பட்டது.
இலங்கை அமரபுர மகா நிகாயத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி மகா விஹார வங்ஷிக அமரபுர மகா நிகாயத்தின் மகோபாத்யாய இலக்கிய மேதை கந்துனே அஸ்ஸஜி மகா நாயக்க தேரர், அமரபுர தர்மரக்ஷித தரப்பின் மகா நாயக்க அக்க மஹா பண்டித திரிகுணாமலே ஆனந்த மகா நாயக்க தேரர், இலங்கை அமரபுர மகா சங்க சபையின் மகா பதிவாளர் தத்துவஞானி பலபிட்டியே சிரிசீவலி மகா நாயக்க தேரர், இலங்கை ராமண்ய மகா நிகாயத்தின் நீதி அதிகரண சங்கநாயக்க அக்ர மஹா பண்டித பேராசிரியர் அத்தன்கனே ரதனபால மகா நாயக்க தேரர், ராமண்ய மகா நிகாயத்தின் அனுநாயக்க வலேபொட குணசிரி மகா நாயக்க தேரர், ராமண்ய மகா நிகாயத்தின் அனுநாயக்க ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் தீவெல மஹிந்த மகா நாயக்க தேரர், ராமண்ய மகா நிகாயத்தின் மகா பதிவாளர் முதுகலைமானி அத்தன்கனே சாசனரதன மகா நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர்களும் தெனிகாயே மகா நாயக்க தேரர்கள் மற்றும் கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன, கல்வி அமைச்சின் கல்விச் சேவைகள் மேலதிக செயலாளர் கமல் ஆரியசேன உள்ளிட்ட பல அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
-
பல்கலைக்கழகங்களுக்கு உள்நுழையும் பிள்ளைகளின் பாதுகாப்பு, நலனோம்புகை வசதிகளைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் கற்றல் வசதிகள் தொடர்பில் பல்கலைக்கழகங்கள் பொறுப்புடன் செயற்படுதல் வேண்டும்.
– கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய
பல்கலைக்கழகங்களுக்கு உள்நுழையும் பிள்ளைகளின் பாதுகாப்பு, நலனோம்புகை வசதிகளைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் கற்றல் வசதிகள் தொடர்பில் பல்கலைக்கழகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உள்ளிட்ட கல்வி மற்றும் கல்விசாரா பணியாளர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களுடன் இன்று (03) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
பல்கலைக்கழக மாணவர்கள் முகம்கொடுக்கும் விடுதி வசதிகள், நீர், மின்சாரம் உள்ளிட்ட நலனோம்புகை வசதிகள் தொடர்பில் இங்கு பிரதமரின் கவனம் செலுத்தப்பட்டதோடு, இதுவரையில் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்காத மாணவர்களின் குடிநீர்ப்பிரச்சினையை ஒரு மாத காலப்பகுதிக்குள் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் மாவட்ட அபிவிருத்திக் குழு தொடர்ச்சியான மேற்பார்வையை இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டுமெனவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் ஹரினி அமரசூரிய,
உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து ஒரு வருடத்திற்கு 40,000 மாணவர்கள் அரசாங்க பல்கலைக்கழங்களுக்கு தெரிவு செய்யப்படுகின்றனர். அப்பிள்ளைகளுக்கான பாதுகாப்பு, நலனோம்புகை மற்றும் கற்றல் வசதிகளை உரிய முறையில் பெற்றுக் கொடுப்பதற்கு பல்கலைக்கழங்கள் பொறுப்புடன் செயற்படுதல் வேண்டும்.
சம்பிரதாய முறையிலான பட்டத்தைப் பெற்று பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறுகின்ற பிள்ளைக்கு எதிர்கால வாழ்க்கை பற்றிய நம்பிக்கை ஏற்பட வேண்டும். அத்துடன் பல்கலைக்கழகங்களை பண்புத்தரம் கொண்ட பட்டப்பின் பட்டத்தை வழங்கும் ஆராய்ச்சி நிறுவனமாக முன்னேற்றுவது மிக அவசியம்.
பல்கலைக்கழங்களில் பிள்ளைகளுக்கு எதிரான துன்புறுத்தல்கள், பாலியல் சேட்டைகள், குற்றங்கள், அழுத்தங்கள் என்பவற்றைப் போன்று வன்முறைகளும் உடனே நிறுத்தப்பட வேண்டும். அது தொடர்பாக அரசாங்கம் என்ற வகையில் எடுக்கக் கூடிய உச்சகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நாம் தயார்.
பல்கலைக்கழக மாணவர்கள் ஒழுக்கத்துடன் தமக்கு கிடைக்கின்ற சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பது மிக முக்கியம். எனினும் அவர்களது சுதந்திரத்தை அவசியமற்ற வகையில் வரையறுப்பதும் பொருத்தமானதல்ல.
எமது பல்கலைக்கழக கட்டமைப்பில் பீடங்களினது ஏனைய வசதிகள் பல்வேறு வகையில் மேம்படுத்தப்படுவதை நாம் காண்கிறோம். எனினும், பிள்ளைகளுக்கு தமது கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உரியதாக பீடங்களின் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகின்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் குடிநீர்ப் பிரச்சினை தொடர்பில் துரித நடவடிக்கை எடுப்பது அவசியம்.
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் பரஸ்பர ஒத்துழைப்புடனும் இணக்கப்பாட்டுடனும் செயற்படுவதில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்ஹ, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிவக்கொழுந்து சற்குணராஜா உள்ளிட்ட பீடாதிபதிகள், கல்வி மற்றும் கல்விசாரா பணியாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஊடகப் பிரிவு
-
புதிய கல்விச் சீர்திருத்தம் என்பது ஜனாதிபதி அநுரவினதோ அல்லது பிரதமர் ஹரினியினதோ சீர்திருத்தம் அல்ல.
சகலரும் தெளிவுடன் பெற்றுக் கொடுக்கும் கருத்துக்கள் மற்றும் பிரேரணைகளுக்கமைய சாதகமான மாற்றங்களை மேற்கொண்டு பிள்ளைகளுக்காக ஒற்றுமையாக நிறைவேற்ற வேண்டிய கடமையாகும்.– கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய
புதிய கல்விச் சீர்திருத்தம் என்பது ஜனாதிபதி அநுரவினதோ அல்லது பிரதமர் ஹரினியினதோ சீர்திருத்தம் அல்ல, சகலரும் தெளிவுடன் பெற்றுக் கொடுக்கும் கருத்துக்கள் மற்றும் பிரேரணைகளுக்கமைய சாதகமான மாற்றங்களை மேற்கொண்டு பிள்ளைகளுக்காக ஒற்றுமையாக நிறைவேற்ற வேண்டிய கடமையாகும் என கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் வட மாகாண பிரதம செயலாளரின் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று (02) இடம்பெற்ற தெளிவூட்டல் நிகழ்வில் உரையாற்றும் போது பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் ஹரினி அமரசூரிய இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது நிலவும் கல்வி முறைமையினுள் முதலாம் தரத்திற்கு சேர்க்கப்படும் பிள்ளை தனது பாடசாலைக் கல்வியை நிறைவு செய்வது, எதிர்காலம் பற்றிய நம்பிக்கையுடனோ அல்லது மகிழ்ச்சியுடனோ அல்ல. பிள்ளைகளுக்கு நட்பு ரீதியான பாடசாலைச் சூழல் மற்றும் கற்றல் முறைமையை உருவாக்குதல் வேண்டும். பாடசாலையிலிருந்து வைத்தியர்கள் மற்றும் பொறியியலாளர்கள் போன்று முயற்சியாளர்களும் கலைஞர்களும் தொழிற்றுறை நிபுணர்களும் உள்ளிட்ட சகல தொழிற்றுறை சார்ந்த தரப்பினரும் பாடசாலையில் இருந்து உருவாக்கப்பட வேண்டும்.
புதிய கல்விச் சீர்திருத்தத்தில் ஒரு மாகாணமோ ஒரு மாவட்டமோ அல்லது ஒரு வலயமோ மாத்திரமன்றி சகல மாகாணங்களும், மாவட்டங்களும், வலயங்களும் முக்கியமானவை. சமத்துவம் அங்கிருந்து தான் ஆரம்பமாகிறது. எமது நாட்டின் சகல பிள்ளைகளுக்கும் சமமான சந்தர்ப்பங்களைப் பெற்றுக கொடுக்க வேண்டிய தேவைப்பாடு எமக்கு அவசியமெனில், சகல வளங்களையும் ஒரு வலயத்திற்கு, ஒரு மாவட்டத்திற்கு மாத்திரம் ஈடுபடுத்த முடியாது. அது நியாயமான வகையில் பகிரப்படுதல் வேண்டும்.
அதன்போது கடினமான மற்றும் பற்றாக்குறையுடைய பிரதேசங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.
ஆசிரிய பற்றாக்குறைக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதைப் போன்றே பாடசாலைகளுக்கு டிஜிட்டல் வசதிகள், கற்பதற்கு வசதியான வகுப்பறைகள், துப்பரவேற்பாட்டு வசதிகள், நீர், விளையாட்டு மைதானங்கள், விஞ்ஞான ஆய்வுகூடங்கள், புத்தாக்கத்திற்கான சூழமைவுகள், அழகியல் அலகுகள் உள்ளிட்ட சகலதும் பாடசாலைகளில் அபிவிருத்தி செய்யப்படுதல் வேண்டும்.
அதற்கான சிறந்த திட்டம் எம்மிடம் உள்ளது. அதேவேளை, கணிப்பீடு மற்றும் மதிப்பீடு ஆகியனவும் மிகவும் முக்கியமானவை. பிள்ளைக்கு அவசியமான சிறுவர் நேய கற்றல் முறைமை, கற்றல் மற்றும் கற்பித்தல் சூழல் ஆகியவற்றை பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுத்து சமூகத்திற்கு பொறுப்புக் கூறும் ஒரு பிரஜையை பாடசாலையிலிருந்து உருவாக்குவதே எமது தேவையாக உள்ளது.
அதற்காகவே நாம் இந்த மக்கள் விவாதங்களை, இவ்வாறான கலந்துரையாடல்களை நடாத்துகின்றோம். ஏனெனில் இது கல்வி அமைச்சினதோ அல்லது ஹரினி அமரசூரியவினதோ அல்லது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின சீர்திருத்தம் அல்ல. இது இலங்கையின் தேசிய கல்விச் சீரமைப்பாகும். எம் அனைவரிடத்திலும் இதைப் பற்றிய கருத்து இருக்க வேண்டும். நாம் அனைவரும் இதில் பங்குகொள்ள வேண்டும்.
இவ்வாறான கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும். ஏனெனில் இதனை நாம் கட்டம் கட்டமாகவே நகர்த்தவுள்ளோம். அனைத்தையும் தயார் செய்துகொண்டு இந்த சீரமைப்பினை ஆரம்பிக்கச் சென்றால் நாம் இன்னும் 10 வருடங்களாவது பார்த்துக்கொண்டிருக்க வேண்டி வரும். எனவே 2026இல் தரம் ஒன்று மற்றும் தரம் ஆறு ஆகியவற்றில் இந்த சீர்திருத்தங்கள் ஆரம்பிக்கப்படும்.
நாம் தொடர்ச்சியாக உங்களது பின்னூட்டங்கள், கருத்துக்கள் மற்றும் யோசனைகளை செவிமடுத்து, நெகிழ்வானதுமான இணக்கப்பாடுகளுடன் சாதகமான வகையில் மேற்கொள்ளக்கூடிய மாற்றங்களைச் செய்வோம். ஆனால் எம்மிடம் இதற்கென ஒரு குறிக்கோள் உள்ளது.
எமது நாட்டிலுள்ள சகல பிள்ளைகளுக்கும் மிகச் சிறந்த கல்வியை வழங்க வேண்டுமென சகலரும் ஏற்றுக்கொள்கின்றனர். எனவே நீங்கள் சீர்திருத்தச் செயற்பாட்டில் ஒரு தூணைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம். இது ஒட்டுமொத்த கல்விக் கட்டமைப்பிற்கான முழுமையான ஒரு பெக்கேஜ் ஆகும்.
நிரல் அமைச்சின் பாடசாலைகள், மாகாண பாடசாலைகள் என தரம்பிரித்து வைத்து இதனைச் செய்ய முடியாது. நாட்டிலுள்ள சகல பிள்ளைகளும் நமது பிள்ளைகளாவர். எனவே, எம்மால் தரம் பிரித்து பணியாற்ற முடியாது. நாம் ஒன்றாக பணியாற்று வேண்டும். எதிர்வரும் ஐந்து வருட காலப்பகுதியில் நாம் ஒவ்வொருவருடனும் மிக நெருக்கமாக இடைத் தொடர்புகளை மேற்கொண்டு பணியாற்ற வேண்டிவரும். பிள்ளைகளுக்காக நாம் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்.
கல்விச் சீர்திருத்தம் பற்றிய கலந்துரையாடலை ஏற்படுத்துங்கள். நாம் இதுவரையில் ஆசிரிய சங்கங்களுடன், தொழிற்றுறையாளர்களுடன், பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் கலந்துரையாடியுள்ளோம். எதிர்காலத்திலும் அதனைச் செய்வோம்.
பெற்றோர்கள் உள்ளிட்ட சமூகத்திலுள்ள சகல தரப்பினரும் இதில் இணைந்துகொள்ள வேண்டுமென கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன், வட மகாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ, கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம், பரீட்சைகள் திணைக்களம் ஆகிவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள், வடக்கு மாகாண கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
-
புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தினருக்கு தெளிவூட்டல்
புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட சகல பல்கலைக்கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விரிவுரையாளர்களைத் தெளிவூட்டும் வகையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஜூலை 30ஆம் திகதி கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் பிரதமர், கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக இதன்போது பிரதமர் அவர்களினால் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கான தெளிவூட்டல் மேற்கொள்ளப்பட்டது.
புதிய கல்விச் சீர்திருத்தத்தினூடாக மேற்கொள்ளப்படும் பாட விதான மறுசீரமைப்பு, டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாடு, மொடியுள் மற்றும் செயற்பாடுகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தமது கருத்துக்களை முன்வைத்தது.
இதன்போது முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் யோசனைகள் தொடர்பில் பிரதமர் தனது கவனத்தைச் செலுத்தியதோடு, புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக முன்வைத்த புதிய கருத்துக்கள் தொடர்பில் பிரதமர் தமது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ உள்ளிட்ட அரச அதிகாரிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஊடக பிரிவு
-
புதிய கல்விச் சீர்திருத்தம் மூலமாக அறிவுடனும் நல்லிதயத்துடனும் வளர்ச்சியடைந்த பிள்ளைகளை உருவாக்குவதில் கரிசனை செலுத்துங்கள்
-அஸ்கிரி, மல்வத்து மகா விகாரைகளின் அனுநாயக்க தேரர்கள் பிரதமரிடம் தெரிவித்தனர்அறிவை மாத்திரம் முன்னேற்றும் கல்வி முறைமைக்குப் பதிலாக இதயத்தாலும் வளர்ச்சியடைந்த அனுதாப மனப்பாங்குடைய போதிசத்துவ குணாம்சங்களைக் கொண்ட பிள்ளைகளை உருவாக்குவதற்கு புதிய கல்விச் சீர்திருத்தம் மூலமாக கரிசனை கொள்ளுமாறு அஸ்கிரி, மல்வத்து மகா விகாரைகளின் அனுநாயக்க தேரர்கள் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிடம் வேண்டுகோள் விடுத்தனர்
புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் அஸ்கிரிய மற்றும் மல்வத்து தரப்பைச் சேர்ந்த மகா சங்கத்தினர் மற்றும் சங்கசபை அங்கத்தவ மகாசங்கத்தினரை தெளிவூட்டும் முகமாக கண்டி தலதா மாளிகை வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் பங்கேற்புடன் ஜூலை 31ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மகா சங்கத்தினர் இதனைத் தெரிவித்தனர்.
புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் சமூகத்தில் எழுந்துள்ள தவறான கருத்துக்கள் தொடர்பிலும் புதிய கல்விச் சீர்திருத்தத்தில் நிலவும் நிலைமைகள் மற்றும் அதன் உண்மைத் தன்மை தொடர்பாகவும் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் திரு நாலக்க களுவெவ ஆகியோரால் அஸ்கிரிய மற்றும் மல்வத்து தரப்பைச் சேர்ந்த மகா சங்கத்தினரைத் தெளிவூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்போது உபதேசமளித்த அஸ்கிரி, மல்வத்து மகா சங்கத்தினர் புதிய கல்விச் சீர்திருத்தச் செயற்பாட்டினுள் நன்னெறிக் கல்வியை கற்பித்தல் முக்கியம் எனவும், தொழிற்றுறை ரீதியிலும் மனிதாபிமான ரீதியிலும் பிள்ளைகளிடத்தில் முன்னேற்றப்பட வேண்டிய துறைகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டுமென சுட்டிக்காட்டினர்.
புதிய கல்விச் சீர்திருத்தச் செயற்பாட்டுக்கு இணையாக பிரிவெனாக் கல்வியினுள் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பிலும் இதன்போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இந்நிகழ்விற்கு அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய வெண்டருவே ஸ்ரீ உபாலி நாயக்க தேரர், மல்வத்து பீடத்தின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய திம்புல்கும்புரே ஸ்ரீ சரணங்கர விமலதம்ம நாயக்க தேரர், மல்வத்து பீடத்தின் அநுநாயக்க தேரர் கலாநிதி சங்கைக்குரிய நியங்கொட விஜிதசிறி நாயக்க தேரர், பிரதான சங்கசபையின் அங்கத்தவ மகாசங்கத்தினர், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன, மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.
ஊடக அலகு.
-
தற்போதைய உலகில் எமது மகா சங்கத்தினருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள விசேட கடமையை மிகச் சிறப்பாக நிறைவேற்றக் கூடியதான கல்வியை பிரிவெனாக் கல்வியில் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.
– கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய
பிரிவெனாக் கல்வியானது நிண்ட வரலாற்றைக் கொண்டது எனவும், வரலாறு மற்றும் சம்பிரதாயங்களைப் பாதுகாத்தவாறு தற்போதைய உலகில் மகா சங்கத்தினர் தமது விசேட கடமைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளதாகவும், அந்தக் கடமையை முறையாக மேற்கொள்வதற்கு அவசியமான பிரிவெனாக் கல்வியைக் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
பத்தரமுல்ல, இசுறுபாய கல்வி அமைச்சில் ஜூலை 30ஆம் திகதி இடம்பெற்ற, பிரிவெனாக் கல்விச் சபையினால் அனுமதிக்கப்பட்ட 203ஆவது புதிய பிரிவெனா ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டபோதே கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.
இதன்போது 273 பிரிவெனா ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இங்கு கருத்துத் தெரிவித்த கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,
“இன்றைய தினம் எமது மகா சங்கத்தினருக்கு பௌத்த சமயத்தின் சார்பில் மாபெரும் கடமை ஒப்படைக்கப்பட்டுள்ளது. மரபுகள் மற்றும் சம்பிரதாய முறைப்படி நாம் மேற்கொண்டுவந்த அந்த பணிகள், அம்மாபெரும் சேவைகளைப் போன்று இன்று நாம் உலகுடன் வெளிப்படையாக இணைந்து கொண்டிருக்கின்றோம். பௌத்த சமயத்தைக் கற்பது, அதன் தத்துவம் மற்றும் உள்ளடக்கம் தொடர்பில் முழு உலகமும் கவனம் செலுத்தியுள்ளது.
ஆகவே எமது மகாசங்கத்தினர் உலகுடன் தொடர்புகொள்ள வேண்டும். உலகில் தற்பொழுது ஏற்பட்டு வரும் மாற்றங்கள் மற்றும் சமூக பொருளாதார நிலைமைகளுடன் பௌத்த சமயத்தின் கடமைகள் என்றுமில்லாதவாறு விசேடத்துவம் பெறுகின்றதோடு தேவைப்பாடாகவும் உள்ளது.
இந்த சூழ்நிலையில் நாம் எவ்வகையான ஆசிரியர்களை, எவ்வாறான பிரிவெனாக் கல்வியை உருவாக்க வேண்டுமென்பது தொடர்பாக நன்று சிந்திக்க வேண்டும். அத்துடன், அது எமது வரலாறு மற்றும் சம்பிரதாயங்களைப் பாதுகாக்கும் அதேவேளை இன்றைய உலகிற்கு பொருந்தும் வகையில் அதனை மகா சங்கத்தினரிடம் ஒப்படைக்கும் கடமைக்கும் நாம் தயாராக வேண்டும்.
மகா சங்கத்தினராகிய உங்கள் அனைவருக்கும் முக்கியமான சவாலொன்று உள்ளது. கற்பித்தல் மாத்திரமன்றி எமது பௌத்த சமயத்தைப் பாதுகாக்கின்ற அந்த மகா சங்கத்தினரை உருவாக்கும் விசேட கடமையே அது. பௌத்த சமயத்தில் கற்பிக்கப்படுகின்ற அந்த தத்துவத்தில் அடங்கியுள்ள நடைமுறைச் சாத்தியம், ஒழுக்கம், கட்டுப்பாடு என்பவற்றை கற்றுக் கொடுப்பது மாத்திரமன்றி அதனை நாம் நடைமுறையில் நிறுபித்துக் காட்டவும் வேண்டும். அதன்போது அறிவு மற்றும் கல்விக்கு அப்பாற்சென்ற ஒரு பொறுப்பு உங்கள் அனைவரிடமும் காணப்பட வேண்டும்.
தற்பொழுது பாரிய பேசுபொருளாக மாறியுள்ள எமது கல்வி முறைமையை மாற்றத்திற்கு உட்படுத்துவதற்கு நாம் தயாராகின்ற இவ்வேளையில் அதனை எந்த வகையில் பிரிவெனாக் கல்வியுடன் ஒன்றிணைப்பது என்பது தொடர்பாக நாம் கலந்துரையாடுவது அவசியம், எனவும் பிரதமர் தெரிவித்தார்.
இந்த நிகழ்விற்கு பிரிவெனாக் கல்விப் பணிப்பாளர், சங்கைகுரிய ராஜகீய பண்டித கலாநிதி கும்பல்கொட தம்மாலோக தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ அவர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
ஊடகப் பிரிவு
-
சீர்திருத்தம் 2026 இல் நடைமுறைப்படுத்தப்படுவது தரம் ஒன்று மற்றும் தரம் ஆறு ஆகியவற்றுக்கே, அடிப்படை முன்னுரிமை அதற்காக பெற்றுக் கொடுக்கப்படும்.
ஆசிரியர் பேசுகின்ற பிள்ளைகள் அதனைக் கேட்டுக்கொண்டிருக்கின்ற சம்பிரதாய முறைக்கு 50 நிமிட காலப்பகுதி என்று பார்த்திருக்க வேண்டாம்.
திசைகாட்டி அரசாங்கத்திற்கு மொடியுள்களுக்கான பேடன்ட் உரிமையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் இல்லை.– கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,
2026ஆம் ஆண்டில் தரம் ஒன்று மற்றும் தரம் ஆறு ஆகியவற்றுக்கு மாத்திரம் புதிய கல்விச் சீர்திருத்தம் அறிமுகம் செய்யப்படுவதால் அடிப்படை முன்னுரிமை அதற்காக பெற்றுக் கொடுக்கப்படும் எனவும், ஆசிரியர் பேசுகின்ற பிள்ளைகள் அதனைக் கேட்டுக்கொண்டிருக்கின்ற சம்பிரதாய கற்றல் செயற்பாட்டில் இருந்துகொண்டு 50 நிமிட காலப்பகுதி தொடர்பாக விமர்சனம் செய்ய வேண்டாம் எனவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் சபரகமுவ மாகாண கல்வி அதிகாரிகளைத் தெளிவூட்டும் வகையில் இன்று (26) இரத்தினபுரி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது பிரதமர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், கலாநிதி ஹரினி அமரசூரிய பின்வருமாறு தெரிவித்தார்.
தற்போதுள்ள கல்வி முறைமை நூற்றுக்கு நூறு விதம் தவறானது என்று நாம் கூறவில்லை. இந்தக் கல்வி முறைமையினுடாக திறமையானவர்கள் உருவாக்கப்பட்டார்கள். எனினும் வருடந்தோறும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் இடைவிலகிச் சென்றார்கள். அவர்கள் தொடர்பில் யாரும் கரிசனை கொள்ளவில்லை. புதிய கல்விச் சீர்திருத்தமானது இதுவரையில் காணப்பட்ட பாடவிதான மேம்பாட்டுக்கு அப்பாற் சென்று ஒட்டுமொத்த கட்டமைப்பினையே மறுசீரமைக்கின்றது.
2026ஆம் ஆண்டில் இந்த முறைமை அறிமுகம் செய்யப்படுவது தரம் ஒன்று மற்றும் தரம் ஆறு ஆகியவற்றுக்கே. அதற்கான அடிப்படை முன்னுரிமை பெற்றுக் கொடுக்கப்படும். படிப்படியாக அடுத்தகட்ட சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். கல்விச் செயற்பாட்டினுள் இருக்கும் தீர்மானமிக்க காரணியாகத் திகழ்பவர் ஆசிரியரே. ஆசியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு முறையான ஆசிரிய இடமாற்றக் கொள்கையை நடைமுறைப்படுத்துதல் மற்றும் ஆசிரிய சமநிலையை உரிய முறையில் பேணுதல் வேண்டும்.
சபரகமுவ மாகாணத்தில் பிள்ளைகளின் எண்ணிக்கை 10ஐ விடவும் குறைவாக உள்ள பாடசாலைகளும் உள்ளன. சில பாடசாலைகளில் ஒரு ஆசிரியருக்கு உள்ள மாணவர்களின் எண்ணிக்கை 5 ஆகும். இந்த நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஆசிரிய இடமாற்றம் தொடர்பிலான பேச்சுவார்த்தை தற்பொழுது அமைச்சில் இடம்பெற்று வருகின்றது. எதிர்காலத்தில் அது பற்றிய தீர்மானத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
2024ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் போது தெரியவந்த ஒரு விடயம், 20,000 பிள்ளைகள் கல்வி நடவடிக்கைகளில் இருந்து இடைவிலகியுள்ளனர். இன்றும் அந்த பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய எந்தவொரு தகவலும் இல்லை. அதேவேளை 80,000 மாணவர்கள் முறையாக பாடசாலைக்கு வருகை தருவதில்லை. இதுவும் பாரியதொரு பிரச்சினை ஆகும்.
தற்பொழுது கல்விக் கட்டமைப்பானது ஒரு சிலரின் அர்ப்பணிப்பின் மீதே ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு நபரின் தோளின் மீது கல்விக் கட்டமைப்பு செயற்பட முடியாது. ஒரு கட்டமைப்பாக வலுவான நிலையில் அது இயங்க வேண்டும்.
தற்பொழுது காலஅட்டவணையை 50 நிமிடங்கள் வரையில் நீடித்தமை தொடர்பில் இடம்பெறுகின்ற ஒரு கலந்துரையாடல் உருவாக்கப்பட்டுள்ளது. சம்பிரதாய கற்றல் முறைமைகளில் இருந்து கொண்டு இந்த நேரத்தைப் பற்றிய தீர்மானத்தை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டாம். ஆசிரியர்கள் பேசுகின்ற பிள்ளைகள் கேட்டுக்கொண்டிருக்கின்ற முறைமையல்ல புதிய கல்விச் சீர்திருத்தத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. செயற்பாட்டு ரீதியில் பிள்ளைகளை பங்குகொள்ளச் செய்யும் ஒரு முறைமையாகும்.
மொடியுள் முறைமையை அறிமுகம் செய்வது திசைகாட்டி அரசு மொடியுள்களுக்கான பேடன்ட் உரிமையைப் பெற்றுக் கொள்வதற்காகவல்ல, அது இன்றைய உலகம் பயன்படுத்துகின்ற ஒரு முறைமையாகும்.
இதுவரை காலம் ஆட்சி செய்த அரசாங்கங்கள் தமது பெயரைப் பிரசாரம் செய்து கொள்வதற்காகவே கல்வியை பயன்படுத்தியுள்ளதாகவும், வாக்குகளைப் பெறும் குறிக்கோளுடன் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு இணைத்துக் கொண்டதன் காரணமாக கல்வியானது மேலும் குழப்பகரமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், அந்த நிலைமை தற்பொழுது மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனெவிரத்ன அவர்கள்,
யாரோ ஒரு தரப்பினருடைய தேவையின் பொருட்டு நாம் கல்விச் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் புத்திஜீவிகளின் அறிவினைப் பயன்படுத்தவில்லை எனவும் சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். நாம் அதனை முழுமையாக நிராகரிக்கின்றோம். நாம் யாருடைய தேவைக்காகவும் அல்ல, தேசிய தேவைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம். அவர்கள் சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்யும் தகவல்களுக்கும் புதிய கல்விச் சீர்திருத்தத்திற்கும் இடையில் எதுவிதமான தொடர்பும் இல்லை என்ற விடயத்தினை நாம் பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந்த நிகழ்விற்கு சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, இரத்தினபுரி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் சாந்த பத்மகுமார உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம், பரீட்சைகள் திணைக்களம் ஆகியவற்றை பிரதிநிதித்துவம் செய்து உத்தியோகத்தர்களும் மாகாணத்தின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
ஊடகப் பிரிவு
-
மாணவர் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் சாதகமான முன்மொழிவுகளை புதிய கல்விச் சீர்திருத்தத்தில் உள்ளடக்குவதற்கு நாம் தயார்.
எனது பிள்ளைப் பருவத்தைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியான பிள்ளைப் பருவத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
– கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,
மாணவர் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் சாதகமான முன்மொழிவுகளை புதிய கல்விச் சீர்திருத்தத்தில் உள்ளடக்குவதற்கு தாம் தயார் எனவும், தமது பிள்ளைப் பருவத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியான பிள்ளைப் பருவத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார்.
இன்று (26), இரத்தினபுரி, சீவலி மத்திய கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வை பார்வையிட்ட பிறகே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
“தற்போதைய பாடசாலைக் கல்விச் சீர்திருத்தம் மூலமாக உலகைக் காணும் பிள்ளைகள் எதிர்காலத்தில் புவியியல் சார்ந்த சவால்களை வெற்றிகொள்ளத் தயாரா?” எனும் தலைப்பின் கீழ் மாணவர் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதோடு, பாராளுமன்ற அமர்வுகள் நிறைவுபெற்றதன் பின்னர் பிரதமரின் கரங்களால் பிள்ளைகளுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
அதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,
புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக பெரியவர்களை விடவும் கூடிய தெளிவினை மாணவர் பாராளுமன்றப் பிள்ளைகள் புரிந்துகொண்டுள்ளனர். அவர்கள் கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் மிகச் சிறப்பாக பகுப்பாய்வு செய்திருந்தனர். அதிலுள்ள நன்மை-தீமைகள், சவால்கள் தொடர்பில் மாணவர் பாராளுமன்றத்தில் மிகச் சிறப்பான வகையில் நீங்கள் விடயங்களை முன்வைத்தீர்கள். உண்மையில் நான் ஒரு விடயத்தை முன்மொழிகிறேன். நீங்களும் இதைப் பற்றி பேசுங்கள், இந்த கல்விச் சீர்திருத்தம் என்பது அமைச்சிலுள்ள உத்தியோகத்தர்கள் அல்லது அமைச்சர்கள் மாத்திரம் இணைந்து தயாரிக்கும் ஒன்றாக இருக்க முடியாது. இக்கல்விச் சீர்திருத்தம் என்பது ஒரு நாட்டில் இடம்பெறும் கலந்துரையாடலினூடாக நாம் இணைந்து உருவாக்கிக்கொள்ள வேண்டிய ஒன்றாகும். இதற்கு நேரடியாக இளம் சந்ததியினர், மாணவ மாணவிகள் இணைந்து கொள்ள வேண்டும். எனவே நான் உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். நீங்கள் விசேட பாராளுமன்ற அமர்வொன்றினை நடத்தியேனும் கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக உங்களது வயதினைச் சார்ந்த ஏனைய மாணவ மாணவிகளிடம் கருத்துக்களைப் பெற்று எங்களுக்கு அனுப்பி வையுங்கள். அது எங்களுக்கு மிகவும் முக்கியமானது.
எனக்கு பாடசாலை மாணவியொருவர் சூழல் நேயமிக்க கருத்திட்ட முன்மொழிவொன்றினை ஒப்படைத்தார். அந்த முயற்சி மிகவும் வரவேற்கத்தக்கது.
மாணவர் பாராளுமன்றத்தின் இன்றைய விவாதத்தில் அமைச்சர் ஒருவர் ஆற்றிய உரை என்னை மிகவும் கவர்ந்தது. அதுதான் பிள்ளைப் பருவத்தினரின் மகிழ்ச்சியைப் பற்றிப் பேசுகின்ற பெரியவர்கள் எமது பிள்ளைப் பருவத்தை அழித்து விடுகின்றனர் எனத் தெரிவித்தார். நான் இன்று ஒரு தீர்மானத்தை எடுத்தேன், இனிமேல் எனது பிள்ளைப் பருவத்தைப் பற்றி நான் பிள்ளைகளுடன் கதைப்பதில்லை, அதற்குப் பதிலாக இந்நாட்டின் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியான பிள்ளைப் பருவத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.
அதேபோல் நீங்கள் அனைவரும் மாணவர் பாராளுமன்ற அமர்வினை முகாமைத்துவம் செய்த விதம், அதேவேளை உரையாற்றி விதம் என்பவற்றைப் பார்க்கின்ற போது, அவற்றைக் கேட்கின்ற போது மனதுக்கு பெரும் மகிழ்ச்சியும் பெருமையும் தோன்றியது. எதிர்கால நாட்டைப் பற்றிய ஒரு நம்பிக்கை எழுந்தது. எதிர்கால சந்ததியினர் முன்னேற்றகரமானவர்கள், எதிர்கால சந்ததியினர் மிகவும் திறமையானவர்கள் என்று.
அதிபர் உள்ளிட்ட ஆசிரிய குழாத்தினருக்கும், பெற்றோர்களுக்கும் இத்தகையதொரு பிள்ளைச் சமூகத்தை உருவாக்கியமை தொடர்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி, சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்த பத்மகுமார, சுனில் ராஜபக்ஷ, வைத்தியர் ஜனக, மாகாண கல்விப் பணிப்பாளர், மாவட்டத்தின் கல்வி அதிகாரிகள், சீவலி மத்திய கல்லூரியின் அதிபர் நீல் தம்மிக வத்துகாரவத்த உள்ளிட்ட அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
ஊடகப் பிரிவு
-
இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் கணிய அளவையியல் மற்றும் ஆங்கில டிப்ளோமாக்களுக்கு NVQ 6 சான்றிதழை வழங்க அங்கீகாரம்
இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (SLIATE) நடத்தும் இரண்டு உயர் தேசிய டிப்ளோமா கற்கைகளான கணிய அளவையியல் உயர் தேசிய டிப்ளோமா (HNDQS) மற்றும் ஆங்கிலத்தில் உயர் தேசிய டிப்ளோமா (HNDE) ஆகியவற்றிற்கு NVQ மட்டம் 6 இற்கு சமமான தரச் சான்றிதழை வழங்க அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
2025 ஜூலை மாதம் 8ஆந் திகதி நடைபெற்ற 2025/05/303ஆம் இலக்க ஆணைக் குழு கூட்டத்தின் போது, மேற்படி இரண்டு கற்கைகளும் NVQ மட்டம் 6 தரநிலைகளுக்கு இணங்குவதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கணிய அளவையியல் மற்றும் ஆங்கில டிப்ளோமா கற்கைகளை வெற்றிகரமாக நிறைவுசெய்கின்றவர்களுக்கு NVQ மட்டம் 6 இற்கு சமமான சான்றிதழை வழங்குவதற்கு, விண்ணப்பதாரர்கள் SLIATE பணிப்பாளர்/அதிபர்/பணிப்பாளர் நாயகம் ஆகியோரால் சான்றுப்படுத்தப்பட்ட இறுதிச் சான்றிதழின் பிரதியுடன் ரூ. 1000.00 கட்டணத்துடன் தங்கள் கோரிக்கைகளை சமர்ப்பிக்கலாம். இது தொடர்பான சுற்றறிக்கை 2025.07.09 ஆந் திகதி முதல் நடைமுறைக்கு வரும்.
-
ஆசிரியர் பயிலுனர்களுக்கு அழுத்தமற்ற கற்றல் சூழலை உருவாக்கத் துரித நடவடிக்கை!
-கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன.
தேசிய கல்விப் பீடங்களில் கல்வி கற்கும் ஆசிரியர் பயிலுனர்களுக்கு அழுத்தமற்ற கற்றல் சூழலை உருவாக்குவதற்கும், கல்வி பீடங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கும்மான ஒரு செயல் திட்டத்தைச் செயல்படுத்துவதைப் பற்றித் தனது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகக், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர சேனவிரத்ன தெரிவித்தார். பத்தரமுல்லை, கல்வி அமைச்சு வளாகத்தில், தேசிய கல்வி பீடங்களின் பீடாதிபதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில் நாடு முழுவதிலுமுள்ள அனைத்து கல்வி பீடங்களின் பீடாதிபதிகளும் கலந்துகொண்டனர். ஒவ்வொரு கல்விப் பீடத்திற்கும் தத்தமது கல்வி மற்றும் கல்வி சாரா பிரச்சினைகள், உட்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான பிரச்சினைகள் ஆகியவற்றைப் பற்றி கலந்துரையாட வாய்ப்பு கிடைத்தது. ஆசிரியர் பயிலுனர்களுக்கு தரமான கல்விச் சூழலை உருவாக்குவதற்காக இதுவரை கவனம் செலுத்தப்படாத பிரச்சினைகளுக்குத் நமது விசேட கவனத்தை செலுத்துவதாகவும், முக்கியமான பிரச்சினைகள் காணப்படுகின்ற கல்விப் பீடங்களுக்குக் தனது கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டு துரித தீர்வுகளைப் பெற்றுத் தர இருப்பதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர்,
ஆசிரியர் பயிலுனர்களுக்கு சுதந்திரமான கற்றல் சூழலை உருவாக்குவதும், அவர்களின் மனநல நல்வாழ்வுக்காக நடவடிக்கை எடுப்பதும் எதிர்காலத்திற்கான முதலீடாகும். ஏனெனில் எதிர்காலத்தில் அவர்களே பாடசாலை ஆசிரியர்களாக மாணவர்களிடையே செல்லவுள்ளார்கள். அவர்களின் மனநலத்தை மேம்படுத்துவதற்காக ஆலோசனை சேவைகளை வலுப்படுத்த நாம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருகிறோம், எனத் தெரிவித்தார்
இந்த நிகழ்வில் ஆசிரியக் கல்விக்கான பிரதம ஆணையாளர் திருமதி இரோஷினி கே. பரணகம மற்றும் கல்வி அமைச்சின் உத்தியோகஸ்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
-
அரச மற்றும் அரசாங்கத்தின் உதவிகளைப்
பெறும் அனைத்துப் பாடசாலைகளுக்குமான 2025 ஆம் ஆண்டுக்குரிய சீருடைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான சான்றிதழ் பரிமாற்றம்
2025 ஆம் ஆண்டுக்கான5,171 மில்லியன் ரூபாய் பெறுமதியான பாடசாலை சீருடைக்குத் தேவையான சீருடைத் தொகையையும், சீன அரசின் அன்பளிப்பாக வழங்கியதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு, ஜூலை 16 ஆம் திகதி பத்தரமுல்லை கல்வி அமைச்சில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் பங்கேற்பில் நடைபெற்றது.
அப்பொழுது 2025 ஆம் ஆண்டிற்குத் தேவையான மொத்த சீருடைத் தேவையும் வழங்கப்பட்டு முடிந்ததை அறிவிப்பதற்கான சான்றிதழ் பரிமாற்றம் பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong ஆகியோருக்கிடையே இடம்பெற்றது.
ஏற்கனவே, 2026 ஆம் ஆண்டிற்குத் தேவையான பாடசாலை சீருடைத் தொகையையும் அன்பளிப்பாகப் பெற்றுத் தருமாறு சீனாவிடம் தமது கோரிக்கையை வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் ஊடாக மக்கள் சீனக் குடியரசின் இலங்கை சீனத் தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த பிரதமர்,
“இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே இருந்து வருவது ஒத்துழைப்புடன் கூடிய நீண்டகால நட்பாகும். எனது நாட்டின் பாடசாலை மாணவர்களுக்குப் பெற்றுக்கொடுக்கப்பட்ட இந்த சீருடையும் அந்த நீண்டகால நட்பின் ஓர் அங்கமே ஆகும்.2023 – 2024 ஆண்டுகளிலும் சீன அரசு எமது பாடசாலை சீருடைத் தேவையில் கணிசமான பகுதியைக் கொடுத்ததோடு, 2025 ஆம் ஆண்டின் முழு சீருடைத் தேவையையும் எமது நாட்டின் ஒட்டுமொத்தப் பாடசாலை மாணவர்களுக்கும் பெற்றுக் கொடுத்திருக்கிறது.
இலங்கைக்கு மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் இருந்தபோது, எமது மாணவர் சமுதாயத்தின் கல்வியை முன்னெடுப்பதற்காக சீன அரசிடமிருந்து கிடைக்கப் பெற்ற அந்த நன்கொடையானது எமக்குப் பெரும் மதிப்பு மிக்கதாகும்.
2026 ஆம் ஆண்டிற்காகவும் சீன அரசின் இந்த தொடர்ச்சியான உதவியை எமக்குப் பெற்றுத் தருமாறு ஏற்கனவே எமது அரசு சீன அரசாங்கத்திடம் கோரியிருக்கிறது.
இத்தருணத்தில் நான் எமது நாட்டின் பிள்ளைகளின் சார்பாகவும் பெற்றோர்களின் சார்பாகவும் சீன அரசுக்கும், மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” எனக் கூறினார்.இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த இலங்கைக்கான சீனத் தூதர் Qi Zhenhong அவர்கள்,
“இலங்கைக்கு உதவி தேவைப்படும் சகல சந்தர்ப்பங்களிலும் சீனா உங்களது நம்பிக்கைக்குரிய சகோதரனாகவும் உதவியாளனாகவும் செயல்படும். இலங்கையின் குழந்தைகள் இந்த நாட்டின் எதிர்காலம் மட்டுமல்ல, சீன இலங்கை நட்பின் வாரிசுகளும் ஆவர்.
அவர்களின் சீருடையிலுள்ள ஒவ்வொரு தையலிலும், பழமையான நமது இரு நாட்டு நாகரிகங்களுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பின் கதையும் பின்னிப் பிணைந்திருக்கும். பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அம்மையார் கொடுக்கும் பங்களிப்பையும் மேற்கொள்ளும் அர்ப்பணிப்பையும் நான் மிகவும் பாராட்டுகிறேன்,” எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் இலங்கை சீனத் தூதரக அதிகாரிகளும், கல்வி அமைச்சின் உத்தியோகத்தர்களும் பங்கேற்றனர்.
-
தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பாடத்திட்டத்தில் திருத்தங்களைச் செய்வதன் மூலம் பல புதிய சீர்திருத்தங்கள்.
– பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
2026 ஆம் ஆண்டில் புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பள்ளிக் கல்வி முறையில் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வியை மேம்படுத்துவதற்காக பாடத்திட்டத்தில் திருத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய ஜூலை 09 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்தப் புதிய திருத்தங்களின் கீழ், 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தொழிற்கல்வி பாடங்கள் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு ஒரு குழுப் பாடமாக அறிமுகப்படுத்தப்படும். அதன்படி, 10 ஆம் வகுப்பு முதல் நான்கு பள்ளி ஆண்டுகள் தொழிற்கல்வி பாடத்தைப் படித்த பிறகு மாணவர்கள் NVQ 4 சான்றிதழைப் பெற முடியும்.
இந்த நோக்கத்திற்காக பாடத்திட்டம் மற்றும் தொகுதிகளை உருவாக்கும் பணிகள் தற்போது தேசிய கல்வி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தற்போது உயர்தர தொழிற்கல்வி பாடங்கள் கற்பிக்கப்படும் 609 பள்ளிகளின் எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்த எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.
பள்ளிக் கல்விக்குப் பிறகு தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வித் துறையை மேம்படுத்துவதற்கான ஒரு மூலோபாயத் திட்டத்தைத் தயாரிப்பதற்காக, ஆசிய வளர்ச்சி வங்கியின் உதவியுடன் அந்தப் பிரிவு தொடர்பாக அந்தத் துறையுடன் தொடர்புடைய அனைத்து கூட்டாளர்களுடனும் கூட்டங்களை நடத்தி, ஆரம்ப வரைவு தயாரிக்கப்பட்டு வருகிறது. வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முழுமையான வரைவு சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வித் துறைக்கான ஆசிரியர் பயிற்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக, அந்தத் திட்டத்தின் கீழ், 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் தொழிற்கல்வி பாடங்களைக் கற்பிக்க புதிய ஆசிரியர்களை நியமித்து, ஆசிரியர் கல்லூரிகள் மூலம் அவர்களுக்குப் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை கற்பிப்பதற்காக ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, தொழில்துறை துறையின் உதவியுடன் பல்வேறு தொழிற்கல்வி துறைகளில் சமகால போக்குகள் மற்றும் அனுபவங்களை வழங்கும் வகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஆண்டுதோறும் ஆசிரியர் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதே பாடத் துறையில் தற்போதைய போக்குகளுக்கு ஏற்ப தொழிற்கல்வி பாடப் பிரிவு மீண்டும் மதிப்பாய்வு செய்யப்பட்டு, 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளுக்குள் பாடத் தொகுதிகளில் தேவையான மாற்றங்களைச் சேர்ப்பதை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஊடக அலகு.
-
பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் – 2025
பாடசாலை மாணவிகளுக்கான சுகாதார அணையாடைகள் வழங்கல் – 2025 நிகழ்ச்சித்திட்டம் பாடசாலைக்கு வருகை தரும் இலங்கைக் கட்டளைகள் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டு SLS – 1732/2022 தரச் சான்றிதழைப் பெற்றுள்ள 4 விற்பனை நிறுவனங்களூடாக மட்டுமே இந்த வருடம் செயற்படுத்தப்படவுள்ளது.
மேலே தெரிவிக்கப்பட்ட நிறுவனங்கள் பாடசாலைக்கே வருகை தந்து மாணவிகளுக்கான சுகாதார அணையாடை பக்கற்றுகளை வழங்குவதன் காரணமாக, அந்நிறுவனங்களைத் தவிர வேறெந்த நிறுவனத்திடமிருந்தும் அணையாடைகளைக் கொள்வனவு செய்ய முடியாது.
ஊடக அலகு.
-
பகிடிவதையைப் போன்றே பல்கலைக்கழகங்களில் இடம்பெறுகின்ற சகல துன்புறுத்தல்கள் தொடர்பில் ஆராய்ந்து பாருங்கள்
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரிய
பல்கலைக்கழக அமைப்பில் மற்றும் பிற உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் பகிடிவதை, துன்புறுத்தல் உள்ளிட்ட அனைத்து வகையிலுமான வன்முறைகளையும் தடுப்பதற்குத் தேவையான பரிந்துரைகள் மற்றும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். உயர்கல்வி நிறுவனங்களில் பகிடிவதை, துன்புறுத்தல் உள்ளிட்ட அனைத்து வகையிலுமான வன்முறைகளையும் ஒழிப்பதற்கான தேசிய செயணியின் உறுப்பினர்களுக்கும் அமைச்சருக்கும் இடையே இன்று (02) கல்வி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
மாணவர்களிடம் மற்றும் கல்வி மற்றும் கல்விசாரா பணியாளர்களிடம் பல்கலைக்கழக அமைப்பிலும் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களிலும் இடம்பெறுகின்ற அனைத்து வகையிலுமான வன்முறைகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கும் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்குமாக 3 வருட காலத்திற்கென நியமிக்கப்பட்ட இந்த செயலணிக்கு அவசியமான அதிகாரங்களும் அரசு அனுசரணையும் வழங்கப்படும் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
இதுபோன்ற துன்புறுத்தல் சம்பவங்கள் இடம்பெறுவதற்கு தனிப்பட்ட வகையிலும் சமூக ரீதியாகவும் தாக்கம் செலுத்தும் காரணங்கள் இருப்பதாக செயலணியின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். மேலும் கல்வி நிர்வாகம், கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையே முறையான தொடர்புகள் உருவாக்கப்படாமை, மாணவர்களிடையே பகிடிவதை தொடர்பில் நிலவும் தவறான மனப்பாங்கு, கீழ்ப்படிய வைத்தல் மற்றும் கௌரவத்தைப் பெற்றுக்கொள்வதற்காக துன்புறுத்துதலைக் கையாளுதல் உள்ளிட்ட பல காரணிகள் தொடர்பில் இதன்போது பிரதிநிதிகள் தெளிவுபடுத்தினர். பல்கலைக்கழக அமைப்பில் மாணவர்களுக்கு புள்ளிகள் வழங்கும் போதும் வகுப்புத் தேர்ச்சி வழங்கும்போது நிர்வாகம் மற்றும் விரிவுரையாளர்கள் மாணவர்கள் மீது செலுத்தும் அழுத்தம் காரணமாக மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக்கின்றமை போன்ற விடயங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
அனைத்து வகையிலுமான துன்புறுத்தல்களை நிறுத்துவதற்கு அவசியமான குறுகிய கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அதற்குத் தேவையான வழிமுறைகள் மற்றும் பொறிமுறைகளை உருவாக்குமாறும், சட்டரீதியான செயற்பாடுகளால் மாத்திரம் இதனை முடிவுக்குக் கொண்டுவர முடியாதென்பதால் நிலவும் சட்டங்களை இற்றைப்படுத்துவதோடு மனப்பாங்கு விருத்திச் செயற்பாடுகள் போன்றவற்றையும் ஒழுங்கமைக்க வேண்டுமெனவும் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இங்கு தெரிவித்தார்.
பல்வேறு வகையிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் மாணவர்கள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதோடு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று கல்வி மற்றும் உயர்கல்விப் பிரதி அமைச்சர் டாக்டர் மதுர செனவிரத்ன இதன்போது தெரிவித்தார்.
ஊடக அலகு.
-
இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சரை சந்தித்தார்.
இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் திருமதி மியோன் லீ (Miyon Lee) மற்றும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் டாக்டர் மதுர செனெவிரத்ன ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று ஜூன் 24 ஆம் திகதி இசுருபாய, கல்வி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பிற்காக பிரதி அமைச்சரால் தூதுவர் வரவேற்கப்பட்டதுடன், இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது
நாட்டின் உழைக்கும் படையணிக்குப் பொருந்தக்கூடிய வகையில் தொழிற்கல்வித் துறையை வலுப்படுத்துதல், இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் தொழில்நுட்பக் கல்விக்காக மேற்கொள்ளப்படும் பரிமாற்றுத் திட்டங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் குறித்து இச்சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், இலங்கையின் பாடசாலைக் கட்டமைப்பினுள் கொரிய மொழியைக் கற்பதற்கான சந்தர்ப்பங்களை மேம்படுத்துதல் மற்றும் இலங்கையில் கொரிய கலாச்சார நிலையமொன்றினை நிறுவுதல் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
ஊடக அலகு
-
தொழிற்கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்காக கற்றல் சூழலை உருவாக்கிக் கொடுப்பதற்காக “க்ளீன் ஸ்ரீ லங்கா” உடன் இணைந்ததான செயற்பாடு..!
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் நடாத்தப்படுகின்ற தொழிற்கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு கவர்ச்சிகரமான கற்றல் சூழலை உருவாக்குவதற்காக “கிளீன் ஸ்ரீ லங்கா” திட்டத்தின் கீழ் “உழைப்புச் செயற்பாட்டுத்” திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முப்படையினரின் முழுமையான ஒத்துழைப்புடன், தொழில் பயிற்சி அமைச்சின் கீழ் இயங்கும் 311 தொழில் பயிற்சி நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் ஜூலை 4 ஆம் திகதி காலை 8.00 மணிக்கு இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே அவர்களின் தலைமையில் இன்று (17) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 300,000 மாணவர்கள் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்ற அதேவேளை, அதில் சுமார் 240,000 மாணவர்கள் தங்கள் பல்கலைக்கழக அனுமதியை இழக்கின்றனர். இந்த மாணவர்களுள் சுமார் 125,000 பேர் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் நுழைகின்ற அதவேளை சுமார் 50,000 மாணவர்கள் வேறு இணைந்த உயர்கல்வி நிறுவனங்களை அனுகுகின்றனர்.
அதன்படி, ஆண்டுதோறும் பல்கலைக்கழக அனுமதியை இழக்கும் சுமார் 175,000 மாணவர்களை தொழிற்கல்வியைத் தொடர்வதற்காக ஊக்குவிப்பதற்கும், அவர்களின் கல்விக்கேற்ற சூழல் மற்றும் வசதிகளை வழங்குவதற்கும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் கிளீன் ஸ்ரீ லங்கா செயலகமும் இணைந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளன.
இந்தத் செயற்றிட்டத்திற்காக தொழிற்பயிற்சி நிலையங்களில் கல்வி கற்கும் 125,000 மாணவர்கள், சுமார் 10,000 கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பிரதேசவாசிகள் உள்ளிட்ட சுமார் 160,000 பேர் இணைந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கலந்துரையாடலில் கிளீன் ஸ்ரீ லங்கா செயலகத்தின் ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.எம்.ஆர்.டி. அப்போன்சு, ஜனாதிபதி மேலதிக செயலாளர் எஸ்.பி.சீ. சுகீஸ்வர ஆகியோர் உட்பட, கிளீன் ஸ்ரீ லங்கா செயலகத்தின் உத்தியோகத்தர்களும், பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகத்தர்கள் மற்றும் முப்படைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
-
புதிய சீர்த்திருத்த நடவடிக்கைகள் பற்றிய மதிப்பாய்வை செய்து ஒழுங்குறுத்துக.
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தேசிய கல்வி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை.தேசிய கல்வி ஆணைக்குழுவின் புதிய உத்தியோகத்தர்கள் சபைக்கும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் தேசிய கல்வி ஆணைக்குழுவில் இடம்பெற்றது.
இதன்போது புதிய உத்தியோகத்தர்கள் சபை அறிமுகப்படுத்தப்பட்டதுடன், புதிய கல்விச் சீர்த்திருத்தத்திற்காக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பணிகள் பற்றியும் பிரதமர் தெளிவுப்படுத்தினார்.
2026 முதல் புதிய கல்விச் சீர்த்திருத்தத்தை தொடங்குவதற்குத் தயார் என்றும், அதற்காக கல்வி அமைச்சின் கீழ் இயங்குகின்ற நிறுவனங்கள் கூட்டிணைந்து சரியான முறையில் பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
புதிய கல்விச் சீர்த்திருத்தத்தை மேற்கொள்ளும்போது தேசிய கல்வி ஆணைக்குழுவிற்கு இருக்கும் பொறுப்பு பற்றியும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும், ஆணைக்குழுவில் நிலவுகின்ற சிக்கல்கள் குறித்தும், எதிர்காலத்தில் செய்யவேண்டிய செயற்றிட்டம் குறித்தும் இதன்போது அமைச்சர் விடயங்களை தெளிவுப்படுத்தினார்.
புதிய கல்விச் சீர்த்திருத்தத்தை முன்னெடுக்கும்போது பாடசாலைகள் பற்றிய மதிப்பாய்வினை மேற்கொள்ளல் மற்றும் ஒழுங்குறுத்தல் பணிகள் தேசிய கல்வி ஆணைக்குழுவுக்கு கையளிக்கப்படுவதாக தெரிவித்த அமைச்சர், கல்விக் கொள்கையை மேலும் தீவிரமாக முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவனங்கள் மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழு கூட்டாக நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் மேலும் தெரிவித்தார்.
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஏ.சரத் ஆனந்த, உப தலைவர் திலக் தர்மரத்ன ஆகியோரை உள்ளிட்ட ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.
-
மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கும் உலகை வெல்லவும் அறிவியலையும் அறிவியலின் முன்னேற்றத்தையும் பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்.
– வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்கல்வி அமைச்சினால் வருடந்தோறும் ஏற்பாடு செய்யப்படும் தேசிய அறிவியல் ஒலிம்பியாட் போட்டித்தொடரின் மாகாண மற்றும் தேசிய மட்ட விருது வழங்கும் விழா இன்று (20) கல்வி அமைச்சில் வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் அவர்கள் மற்றும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனெவிரத்ன ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
தேசிய ஒலிம்பியாட் போட்டித்தொடரானது அறிவியல், கணிதம், தகவலியல் மற்றும் புள்ளிவிபரவியல் ஆகிய பாடங்களை மையமாகக் கொண்டு பல பிரிவுகளூடாக நடாத்தப்படுகிறது. இந்தப் பாடங்களில் திறமைகளையுடைய மாணவர்களை அடையாளம் காணல், ஊக்குவித்தல் மற்றும் பாடவிதானம் சார்ந்த விழிப்புணர்வை அதிகரித்தல் அத்துடன் சர்வதேச அறிவியல் ஒலிம்பியாட் போட்டித்தொடரில் பங்கேற்கும் தேசிய அணியைத் தெரிவுசெய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தப் போட்டித்தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுகிறது.
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற அறிவியல் ஒலிம்பியாட் போட்டித்தொடரில் மாகாண மற்றும் அகில இலங்கைப் போட்டிகளில் வெற்றியீட்டிய 101 மாணவர்களுக்கு திறமைச் சான்றிதழ் மற்றும் விருது வழங்கல் இதன்போது இடம்பெற்றது.
இங்கு உரையாற்றிய கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனெவிரத்ன அவர்கள், இத்துடன் உங்களது பயணத்தை நிறுத்திக்கொள்ளாமல் உலகை எவ்வாறு வெல்வது என்பதனைத் திட்டமிடுமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள், மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் விருதுகளை வென்ற மாணவர்கள், அறிவியல் ஒலிம்பியாட் சர்வதேச போட்டித்தொடரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
-
சிறந்த ஒரு பிரஜை என்பதன் பொருள் வெறுமனே சிறந்தவொரு தொழிலைச் செய்வது மட்டுமல்ல, மாறாக மற்றையவர்களின் சிரமங்களையும் பெண்களின் விடயங்கள் தொடர்பிலும் கூறுணர்வுமிக்க ஒரு பிரஜையாக சமூகத்தில் வாழப் புரிந்துகொள்வதற்கான பிரஜையாகவும் இருப்பதாகும்.
யௌவனப் பருவத்தினரின் சுகாதாரம் குறித்து பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று (17) கல்வி அமைச்சில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது யௌவனப் பருவத்தினரின் சுகாதாரம் குறித்த விசேட சொற்பொழிவை சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமூக விசேடவைத்திய நிபுணர் அசாந்தி பெர்னாண்டோ பலபிட்டிய நிகழ்த்தினார்.
மேலும் உரையாற்றிய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இவ்வாறு தெரிவித்தார்.
சுகாதாரம் என்பது கல்வியுடன் நேரடியாக தொடர்புடையது என்று நாங்கள் நம்புகிறோம். கல்விக்கும் சுகாதாரத்திற்கும் இடையில் என்ன தொடர்பு உள்ளதென்று சிலர் சிந்திக்கலாம்.
சுகாதாரம் என்பது அனைவருக்கும் உள்ள உரிமை, அனைவருக்கும் அவசியமான ஒன்று என்பதுடன் சரியான சுகாதார வசதிகள் இல்லாத காரணத்தால், குறிப்பாக வசதிகள் குறைந்த பாடசாலைகளில் உள்ள பெண் பிள்ளைகள் மாதத்திற்கு ஒரு தடவையாவது கல்வியைப் பெறுவதைத் தவறவிடுகிறார்கள் என்பதை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதேநேரத்தில் சமூகத்தில் சுதந்திரமாக நடமாடும் அவர்களுக்கான உரிமையையும் கட்டுப்படுத்தப்படுகிறது. சரியான சுகாதார வசதிகள் இல்லாமையே அதற்கான காரணமாகும்.மாணவிகளாகிய நீங்கள் மாத்திரமல்ல நாம் அனைவரும் இந்த அனுபவத்தை தேவைக்கு அதிகமாகவே அனுபவித்திருக்கிறோம். பாடசாலைக்குள் மாத்திரமல்ல. பொது வசதிகள் மிகவும் குறைவாக உள்ள காரணத்தினால் சமூகத்திலுள்ள ஒட்டுமொத்த பெண்களும் இந்த சிரமத்திற்கு முகம்கொடுக்கின்றனர்.
சுகாதாரம் என்பது மிகவும் முக்கியமானது. நீங்கள் கேட்கலாம், ஆண்களாகிய நாங்கள் இங்கு எதனைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், இது பெண்களின் பிரச்சினை அல்லவா, அவர்களே அதைத் தீர்த்துக்கொண்டால் பிரச்சினை முடிந்துவிட்டது தானே என்றும். ஆனால் உங்களுக்கும் சுகாதாரப் பிரச்சினைகள் இருக்கின்றது. அதேவேளை, பெண்கள் ஏதேனும் அசௌகரியத்தை அனுபவித்தால், ஆண்கள் அதைப் பற்றி உணர்திறன் உடையவர்களாக இருப்பதற்கு புரிதலும் பச்சாதாபமும் கொண்டிருக்க வேண்டும்.
வெற்றிகரமான ஒரு பிரஜை என்பதன் அர்த்தம் சிறந்த ஒரு தொழிலைச் செய்வது மட்டுமல்ல. சமூகத்தில் எவரேனும் அசௌகரியத்துடன் இருந்தால், அதை நீங்கள் உணரக்கூடியவர்களாக இருக்க வேண்டும். பெண்களின் உணர்வுபூர்வமான பிரச்சினைகளின் போது உங்களுக்கு பச்சாதாபம் இருக்க வேண்டும். மேலும், அப்படிப்பட்ட ஒரு குடிமகனாக சமூகத்தில் வாழ்வதற்கான புரிதல் உங்களிடத்தில் இருந்தால் மட்டுமே நீங்கள் பெற்றிகரமான ஒரு பிரஜை.
இங்கிருந்து ஆரம்பித்து பாடசாலை மட்டத்தில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை நாம் ஏற்படுத்துகிறோம். கல்வி என்பது பெரிய ஒரு தலைப்பு. இந்த சமூகத்திற்கு, இந்த சமுதாயத்திற்கு முக்கியமான தலைமைத்துவத்தை வழங்கவும் வழிநடத்தக்கூடிய மற்றும் சமூகத்தில் உள்ள அனைவரையும் குணப்படுத்தக்கூடிய அடுத்த தலைமுறையை உருவாக்குதலும் கல்வியினூடாக இடம்பெறுதல் வேண்டும். ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துவதும், ஒருவருக்கொருவருடன் எவ்வாறு நடந்துகொள்வதும் உள்ளிட்ட அனைத்தும் கல்வியில் இருக்க வேண்டும்.
எனவே, சுகாதாரம் என்பது ஆரோக்கியத்திற்கு மட்டும் வரையறுக்கப்படக்கூடிய ஒன்றல்ல. சுகாதாரம் என்பது மாதவிடாய் சுழற்சியைப் பற்றி மட்டும் பேசுவது அல்ல. பாடசாலைக்குள்ளும், பொது சமூகத்திலும் சுகாதார வசதிகளுக்கான ஆகக் குறைந்த வசதிகள் கிடைப்பதை அரசாங்கம் ஒரு அடிப்படை உரிமையாகக் கருதுகிறது. சுகாதாரம் என்பது மறைக்கப்பட வேண்டிய ஓர் விடயமல்ல.
எனவே இந்த சமூகமானது ஒருவரையொருவர் மதிக்கும், சமூக நீதி மற்றும் சமத்துவம் கொண்ட ஒருவரையொருவர் பாதுகாக்கும், ஒருவரையொருவர் கவனித்துக் கொள்ளும், மனிதநேயத்திற்கு முன்னுரிமை அளிக்கும் ஓர் சமூகமாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிகழ்விற்கு கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்கள், குடும்ப சுகாதார பணியகம் மற்றும் சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.ஊடக பிரிவு
-
2026 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்படவுள்ள புதிய கல்விசார் மாற்ற நடவடிக்கைக்குரியதான வழிகாட்டுதல்கள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும்.
2026 ஆம் ஆண்டு செயற்படுத்தப்படவுள்ள புதிய கல்விசார் மாற்ற நடவடிக்கைக்குரியதான வழிகாட்டுதல்களை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடுவதற்கு அவசியமான நடவடிக்கைகள் மற்றும் அதற்குரியதாக ஆசிரியர்களைப் பயிற்றுவித்தல் தொடர்பிலான கலந்துரையாடலொன்று ஜூன் 16 ஆம் திகதி, மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
2026 ஆம் ஆண்டு தொடக்கம் தரம் 1 மற்றும் தரம் 6 ஆகியவற்றுக்கு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுமெனவும், 2028 ஆம் ஆண்டு தரம் 10 இற்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது எனவும், 2029 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையை புதிய பாடத்திட்டத்தின்படி நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், மற்றும் தரம் 9 தொடக்கம் தொழிற்கல்வி அறிமுகப்படுத்தப்படும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இதன்போது, தேசிய கல்வி நிறுவகத்தின் ஒவ்வொரு பிரிவின் தலைவர்களும் இக்கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான செயல்முறையை தங்கள் பிரிவுகள் மூலம் செயற்படுத்தும் விதம் மற்றும் அதன் தற்போதைய நிலைமை தொடர்பில் அமைச்சரைத் தெளிவுபடுத்தினர்.இது பாடத்திட்டங்களைத் திருத்துதல், ஆசிரியர் பயிற்சி, நிர்வாக மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல், முறையான மதிப்பீட்டுச் செயன்முறையொன்றினை உருவாக்குதல் மற்றும் இதற்காக பொதுமக்களின் பங்கேற்பு ஆகிய 5 தூண்களை (காரணிகளை) அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட கல்விசார் மாற்றம் எனவும், இதன்போது உயர்ந்த மனப்பான்மை கொண்ட ஆசிரியர்களை உருவாக்குவது தேசிய கல்வி நிறுவகங்களின் பொறுப்பு என்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். மேலும் இச்சீர்திருத்தங்களுடன் மாத்திரம் நின்றுவிடாது இவை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பது தொடர்பில் ஆராய்வதற்கும் முறையான மதிப்பீட்டுச் செயன்முறையொன்றினை உருவாக்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
மேற்படி கலந்துரையாடலில் கல்வி அமைச்சின் செயலாளர் திரு. நாலக களுவெவ அவர்கள், மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் திருமதி.மஞ்சுளா வித்தானபதிரன மற்றும் அந்நிறுவகத்தின் அனைத்துத் துறைகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
-
பல்கலைக்கழக மாணவர்களின் விடுதி வசதிகள் பற்றிய தரநிலைகள் அடங்கிய தேசியக் கொள்கையை உருவாக்குவதற்கான முன்மொழிவு…
அரசுப் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கான விடுதி வசதிகளை ஆராய நியமிக்கப்பட்ட குழுவுக்கும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் கல்வி அமைச்சில் இடம்பெற்றது.
இதன்போது, ஒன்பது பேர் அடங்கிய இந்தக் குழுவினால் அரசுப் பல்கலைக்கழகங்களுக்குச் சொந்தமான மாணவர் விடுதிகளில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பான அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்டது. அத்துடன், அந்த அறிக்கையை கருத்தில் கொண்டு மாணவர் விடுதிகளுக்கு தேவையான வசதிகளை விரைவாக வழங்குவதில் பிரதமர் தனது கவனத்தை செலுத்தினார்.
தவிர, கல்வி அமைச்சும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், பல்கலைக்கழக மாணவர்களையும் இணைத்துக்கொண்டு, விடுதி வசதிகள் தொடர்பான தரநிலைகள் அடங்கிய தேசியக் கொள்கையை உருவாக்குவதற்கான யோசனை இதன்போது முன்வைக்கப்பட்டது.
இச்சந்தர்ப்பத்தில், குழுத்தலைவர் பேராசிரியர் திரு. கே.எல். வசந்த குமாரவை உள்ளிட்ட குழுவின் உறுப்பினர்கள் இணைந்துக்கொண்டிருந்தனர்.
ஊடக பிரிவு
-
புதிய சீர்த்திருத்த நடவடிக்கைகள் பற்றிய மதிப்பாய்வை செய்து ஒழுங்குறுத்துக.
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தேசிய கல்வி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை.தேசிய கல்வி ஆணைக்குழுவின் புதிய உத்தியோகத்தர்கள் சபைக்கும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் தேசிய கல்வி ஆணைக்குழுவில் இடம்பெற்றது.
இதன்போது புதிய உத்தியோகத்தர்கள் சபை அறிமுகப்படுத்தப்பட்டதுடன், புதிய கல்விச் சீர்த்திருத்தத்திற்காக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பணிகள் பற்றியும் பிரதமர் தெளிவுப்படுத்தினார்.
2026 முதல் புதிய கல்விச் சீர்த்திருத்தத்தை தொடங்குவதற்குத் தயார் என்றும், அதற்காக கல்வி அமைச்சின் கீழ் இயங்குகின்ற நிறுவனங்கள் கூட்டிணைந்து சரியான முறையில் பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
புதிய கல்விச் சீர்த்திருத்தத்தை மேற்கொள்ளும்போது தேசிய கல்வி ஆணைக்குழுவிற்கு இருக்கும் பொறுப்பு பற்றியும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும், ஆணைக்குழுவில் நிலவுகின்ற சிக்கல்கள் குறித்தும், எதிர்காலத்தில் செய்யவேண்டிய செயற்றிட்டம் குறித்தும் இதன்போது அமைச்சர் விடயங்களை தெளிவுப்படுத்தினார்.
புதிய கல்விச் சீர்த்திருத்தத்தை முன்னெடுக்கும்போது பாடசாலைகள் பற்றிய மதிப்பாய்வினை மேற்கொள்ளல் மற்றும் ஒழுங்குறுத்தல் பணிகள் தேசிய கல்வி ஆணைக்குழுவுக்கு கையளிக்கப்படுவதாக தெரிவித்த அமைச்சர், கல்விக் கொள்கையை மேலும் தீவிரமாக முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவனங்கள் மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழு கூட்டாக நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் மேலும் தெரிவித்தார்.
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஏ.சரத் ஆனந்த, உப தலைவர் திலக் தர்மரத்ன ஆகியோரை உள்ளிட்ட ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.
-
பள்ளி வளாகங்களில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.
மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், தீவு முழுவதும் டெங்கு மற்றும் விகுனா நோய்கள் பரவும் அபாயம் அதிகமாக உள்ளது. மேலும், மே 31, 2025 வரை தீவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பதிவான டெங்கு நோயாளிகளில் அதிக சதவீதம் 5 முதல் 19 வயதுக்குட்பட்ட பள்ளி வயது குழந்தைகள் ஆவர்.
எனவே, பள்ளிகளைச் சுற்றி கொசுக்கள் இல்லாத மற்றும் பாதுகாப்பான சூழலைப் பராமரிப்பதற்காக, முன்னர் வெளியிடப்பட்ட 2010/22 மற்றும் 30/2017 சுற்றறிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு மேலதிகமாக கூடுதல் நடவடிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன, மேலும் மாணவர்கள் மற்றும் கல்வி/கல்விசாரா ஊழியர்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக அந்த வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பிற அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாகாணத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளின் முதல்வர்கள், பிரிவேனாக்களின் தலைவர்கள், தேசிய கல்வியியல் கல்லூரிகளின் பீடாதிபதிகள் மற்றும் பிற கல்வி நிலையங்கள் மற்றும் அலுவலகங்களின் தலைவர்களுக்கு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது
தொடர்புடைய அறிவுறுத்தல் தாள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஊடகப் பிரிவு.
-
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – 2024
பள்ளி கட்-ஆஃப் மதிப்பெண்கள்
-
நம்பகமான மற்றும் மன அழுத்தமில்லாத கல்வியை வழங்குவதன் மூலம், புதிய சகாப்தத்திற்கு ஏற்ற குடிமக்களாக மாறக்கூடிய மாணவர்களை வளர்ப்பதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
நம்பகமான மற்றும் மன அழுத்தமில்லாத கல்வியை வழங்குவதன் மூலம், புதிய சகாப்தத்திற்கு ஏற்ற குடிமக்களாக மாறக்கூடிய மாணவர்களை வளர்ப்பதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
ஜிஎஃப்டி டிஜி டி ஜிடிஎஃப் ஜிடிஎஃப் ஜிடி டி டிஎஃப் ஜி
-
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகத்தில் பணிபுரியும் கூட்டுப் பணி அல்லாத கல்விசாரா ஊழியர்களின் வருடாந்திர இடமாற்றங்கள் – 2025
- அரக்கேமி
- வளர்ச்சி சககார
- ලේඛණ සහකාර
- ஆய்வக உதவி
- மருத்துவக் கூடார
- புத்தக உதவி
- நீர்நல மின்சாரம்
- பள்ளி பாதுகாப்பு
- சம்பந்தப்பட்ட உதவி
- சேவை ஆதரவு – சுகாதார
- கிறிடா பயிற்சியாளர்
- சிஷ்ய வீட்டு அதிகாரிகள்
- தொழில்நுட்ப பீடி ஆதரவு
-
குளியாப்பிட்டியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்வியியல் கல்லூரியில் (NCOET) இளங்கலை (BEd) பட்டப்படிப்புப் படிப்புகளைப் பின்பற்றுவதற்கான சேர்க்கை – 2025
படிப்புகள் பட்டியல் (பட்டப் படிப்புகள்)
- பொறியியல் தொழில்நுட்பம் (ET)
- பயோ சிஸ்டம் டெக்னாலஜி (பிஎஸ்டி)
- தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (ICT)
- தகைமை: க.பொ.த உ/த 2023
- காலம்: 04 ஆண்டுகள்
விவரங்கள்: https://ncoe.moe.gov.lk/NcoeTechApp/
இறுதித் தேதி: 2025-01-10