கல்வி அமைச்சரிடம் இருந்து...

இந்த ஆரம்பக் குறிப்பில் பொதுக் கல்வி மறுசீரமைப்பு தொடர்பாக இதுவரை பரிசீலிக்கப்பட்ட முன்மொழிவுகள் அடங்கும். மறுசீரமைப்புவாதிகள் தங்கள் பணிகளைச் செய்வதில், கல்வியின் பொருத்தம், தர மதிப்பு, மாணவர்களின் நுழைவு, எளிமை, சமத்துவம் மற்றும் பாதுகாப்பு போன்ற அடிப்படைப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டுள்ளனர். பல தசாப்தங்களாக மறுசீரமைப்புவாதிகள் அவர்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்கு தைரியமாக தீர்வு காண முயன்றுள்ளனர். இதன்படி, அவர்களின் பல பிரச்சனைகளை மையமாக வைத்து பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது, அதில் 08 முக்கிய பிரச்சினைகள், 16 தீர்வுகள் மற்றும் சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் பெறக்கூடிய பல நன்மைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த நாட்டில் முழுமையான கல்வி மறுசீரமைப்புகள் நீண்ட காலத்திற்கு முன்பே செய்யப்பட்டிருக்க வேண்டும். புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்ட மறுசீரமைப்புகள் பல தசாப்தங்களுக்கு முன்பே செயல்படுத்தப்பட்டிருந்தால், இன்று நம் நாடு எதிர்கொள்ளும் சில பிரச்சினைகள் உருவாகியிருக்காது.

கல்வி, அறிவு உருவாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு இடையே கடுமையான இடைவெளி நிலவுகிறது. அறிவு சார்ந்த பொருளாதாரத்தில் நாம் நுழைந்திருந்தாலும், படித்தவர்களின் பொருளாதார பங்களிப்பு மிகவும் குறைந்த மட்டத்திலேயே உள்ளது.  1940களில் கலாநிதி சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரா இலவசக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தியபோது, அவர் சமூக நீதியை உருவாக்குவது மட்டுமல்லாமல், கற்று தேர்ந்த பணியாளர்களினால் வடிவமைக்கப்பட்ட பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் என்று எதிர்பார்த்தார். தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் இலவசக் கல்விக் கொள்கையின் இலக்குகளை முன்னேற்றுவதற்குத் தேவையான கொள்கைகளையும் மறுசீரமைப்புகளையும் அறிமுகப்படுத்தத் தவறிவிட்டன.

திறன் விருத்தி மற்றும் 21 ஆம் நூற்றாண்டுக்குரிய பணிபுரியும் களங்களிலும் சமூகத்திலும் முக்கியமான திறன்களை நோக்கிய கல்வியில் ஈடுபடுவது தொடர்பில் கடுமையான இடைவெளிகள் உள்ளன. கல்வி கற்றவர்கள் பெரும்பாலும் வேலையில்லாமல் அல்லது தன் திறமைசாரா வேலைவாய்ப்பில் இணைந்திருப்பதோடு,  பொருளாதாரமானது பாடசாலை இடைவிலகியோரின் உழைப்பிலும்  வியர்வையிலும் நிலைகொண்டுள்ளது. மாணவர்களின் கற்றல் சுமையை குறைக்கவும், பரீட்சைகளில் அதிக கவனம் செலுத்துவதால் ஏற்படும் விரக்திகளைத் தவிர்க்கவும் மறுசீரமைப்புகள் தேவைப்படுகின்றன. பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பௌதீக வள விநியோகத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள் காரணமாக பாடசாலைகளுக்கிடையிலான இடைவெளியை இழிவளவாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கல்வி நிர்வாக முறைமை  மற்றும் பாடசாலை முகாமைத்துவம்  கல்வியை பெற்றுக்கொடுக்கும் விளைதிறனையும் வினைத்திறனையும் மேம்படுத்த மறுசீரமைப்புகள் தேவைப்படுகின்றன.

மறுசீரமைப்பு முன்மொழிவுகளைத் தயாரிக்கும் குழுக்கள் கடைப்பிடிக்கும் அணுகுமுறையைப் பற்றியும் சில வார்த்தைகளைக் குறிப்பிட வேண்டும். இந்த அணுகுமுறையில் 06 வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டுள்ளன.

  1. 1. விளைவு நோக்குநிலை - ஆரம்பத்தில் இருந்தே, மறுசீரமைப்பு முன்மொழிவுகளை கருத்தியல் செய்யும் போது மறுசீரமைப்புகளின் நோக்கம் கொண்ட விளைவுகளில் கவனம் செலுத்துதல். (உதாரணம்: மாணவர் மற்றும் பெற்றோர் பிரச்சினைகள் மற்றும் நன்மைகள்).
  2. செயல்படுத்தும் நடவடிக்கைகளின் இயலளவை வலுப்படுத்துதல்

செயல்படுத்தலின் வெற்றியானது தங்கியிருப்பது விளைiவுகளை  அடையும் இயலுமையின் மீதாகும் என்பதால் அடையும் இடத்தின் இயலளவு குறித்து கவனம் செலுத்துவதாகும்.  (உதாரணம் வகுப்பறை அமைப்பு, அளவு மற்றும் மாணவர்களின் குழு/செயன்முறை பணிக்குத் தேவையான உபகரணங்கள்/பொருட்கள்)

  1. பங்கேற்பாளர்களின் புரிதல் மற்றும் பங்கேற்பு

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் போன்ற பங்குதாரர்கள் புதிய பாடத்திட்டம் மற்றும் வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கான மாதிரிகள் பற்றிய புரிதலை கொண்டிருக்க வேண்டும்.

  1. 4. எதிர்கால தொழில்நுட்ப போக்குகள் - எதிர்கால தொழில்நுட்ப போக்குகள் பொருளாதாரம், திறன் தேவைகள் மற்றும் பாரம்பரிய பாடசாலை, கல்வி பாடத்திட்டம் மற்றும் அதன் செயலாக்கத்தின் தன்மையை மாற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கின்றது. (உதாரணம் – google கல்வி).

எனவே, மறுசீரமைப்புகள் எதிர்காலம் சார்ந்ததாகவும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

  1. நிதி மற்றும் பிற வளங்கள்மீதான மட்டுப்பாடுகள் - மூலதன மற்றும் மீட்டெழும் பாதீடுகள் வரையறுக்கப்பட்டுள்ளதால் மறுசீரமைப்புகள் இருக்கும் வளங்களை புதிய வழிகளில் பயன்படுத்த முயல வேண்டும்.
  2. நடைமுறைச் சாத்தியம் - எமக்கு தகுதியான மறுசீரமைப்புகள்; பரந்த அளவில் இருந்தாலும், அவை உண்மையில் அடையக்கூடிய அளவு தற்போதைய பொருளாதார நெருக்கடியில் நிதி, நிறுவன, மனப்பான்மை, கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் எல்லைப்பாடுகளுக்கு உட்பட்டது. கடந்த காலங்களில் எப்போதாவது நடந்ததைப் போல, செயல்படுத்துவதில் தோல்வியுற்ற மறுசீரமைப்புகள் முன்மொழியப்படக்கூடாது.

நோக்கத்தின் அடிப்படையில்இ வரவிருக்கும் மறுசீரமைப்புக்கள் பொதுக் கல்வி, உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி, கல்வி நிர்வாகம் மற்றும் இத்துறையில் மனிதவளப் பயிற்சி மற்றும் மேம்பாட்டிற்காக உருவாக்கப்படும் நிறுவனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கும். மறுசீரமைப்பு முன்மொழிவுகளின் முக்கிய பகுதிகளை அடுத்த சில மாதங்களில் நிறைவேற்றவும் மறுசீரமைப்புகளை செயல்படுத்துவதை விரைவில் தொடங்கவும் எதிர்ப்பார்க்கிறேன். நிர்வாக மறுசீரமைப்புகளுக்கும் திறன் மேம்பாட்டிற்கும் முன்னுரிமை அளிப்பது பின்னர் பாடத்திட்டம் மற்றும் பிற மறுசீரமைப்புகளை  எளிதாக்கும்.

பொதுமக்கள் கருத்துக்களைப் பெறுவதற்கான வாய்ப்பின் மூலம் பெறப்பட்ட பங்களிப்புகள் இந்த இணையதளத்தில் சேர்க்கப்பட்டுள்ள அறிக்கையில் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்த இறுதி கட்டத்தில் கூட, மறுசீரமைப்புகளுக்கான ஆலோசனைகளை வழங்குமாறு ஆர்வமுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களைக் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

 

 

கலாநிதி சுசில் பிரேமஜயந்த  பா.உ

கல்வி அமைச்சர்

ஆகஸ்ட் 2022

TOP