logo

ஐ.எம்.கே.பீ. இலங்கசிங்ஹ

Additional Secretary - Educational Service Establishment & Educational Quality Development

சட்டத்தரணி, கலாநிதி திரு ஐ.எம்.கே.பீ. இலங்கசிங்ஹ அவர்கள் கல்வி அமைச்சில் மேலதிக செயலாளராக (கல்விச் சேவை நிறுவனம்) கடமைகளை ஆற்றுகின்றார். இவர் 1988 ஆம் ஆண்டில் இலங்கை கல்வி நிருவாகச் சேவைக்கு முதற்தடவையாக நடாத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சைக்கு தோற்றி இணைத்துக்கொள்ளப்பட்ட குழுவின் உறுப்பினராவார்.  அத்துடன், 2015 ஜுன் மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் இலங்கை கல்வி நிருவாகச் சேவையின் விசேட தர உத்தியோகத்தராகவும் கடமைகளை ஆற்றுகின்றார். மேலும், இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையின் லுதினன் கேனல் ஒருவராக, உயர்நீதிமன்ற சட்டத்தரணியாக மற்றும் கல்வி பற்றியதாக கொழும்பு பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்தையும் பெற்றுள்ள ஓர் உத்தியோகத்தராவார். இவர் நாட்டில் பிரபலமான பல பாடசாலைகளில் அதிபராக, வலயக் கல்வி அலுவலகங்களில் உதவிக் கல்விப் பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர் மற்றும் மாகாணக் கல்வி அலுவலகங்களில் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர், கல்வி அமைச்சில் கல்விப் பணிப்பாளர் ஆகிய பதவிகளில் பல வருடங்கள் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ளார். மேலும், தேசிய கல்வி நிறுவகத்தில் மேலதிக பணிப்பாளர் நாயகம் ஆசிரிய கல்வி மற்றும் பிரதிப் பணிப்பாளர் நாயகமாகவும், கல்வித் தலைமைத்துவ அபிவிருத்தி நிறுவனம் மீபே நிலையத்திலும் கடமைகளை ஆற்றியுள்ளதோடு கல்வி வெளியீட்டு ஆணையாளராகவும் சேவையாற்றியுள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதலாவது பட்டத்தினைப் பெற்றுள்ள திரு இலங்கசிங்ஹ அவர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமா, பட்டப்பின் கல்வி முதுமாணி, பட்டப்பின் கல்வி தத்துவமாணி மற்றும் அதே பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் தத்துவவியல் முதுமாணி ஆகிய பட்டங்களையும் பெற்றுள்ளார். அத்துடன் ஸ்ரீ ஜயவர்தபுர பல்கலைக்கழகத்தில் கல்வி முகாமைத்துவம் பற்றிய பட்டப்பின் கல்வி டிப்ளோமாவையும், மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தில் பட்டப்பின் கல்வி முகாமைத்துவ டிப்ளோமாவையும் பெற்றுள்ளார். இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமாணி பட்டத்தினையும்  இலங்கை சட்டக் கல்லூரியின் இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்நீதிமன்ற சட்டத்தரணியாகவும் நொத்தாரிஸ் மற்றும் சத்தியப்பிரமாணத்திற்கான ஆணையாளராகவும் பணிகளை மேற்கொள்கின்றார். பெறுகைச் செயற்பாடு மற்றும் இருப்புப் பொருள் சுற்றாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளல், இலங்கை கல்வி நிருவாக சேவை, ஆசிரியர் கல்வியியலாளர் சேவை, அதிபர் சேவை மற்றும் அதன் ஆரம்பம் மற்றும் வளர்ச்சி, அடிப்படை புலனாய்வு செயற்பாடுகளை மேற்கொள்ளல், முறையான ஒழுக்காற்று விசாரணைகள் மற்றும் சாட்சிகளை வழிநடாத்துதல் ஆகிய தலைப்புக்களின் கீழ் 04 நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ள ஓர் உத்தியோகத்தராவார்.

TOP