கொள்வனவு மற்றும் கட்டுமானம்

பார்வை மற்றும் பணி

தூரநோக்கு

துல்லியமான சேவைகள் மற்றும் இட முகாமைத்துவத்தை வழங்குதல் மூலம் மகிழ்ச்சியூட்டும் அலுவலக சுற்றாடலை ஏற்படுத்தல்

பணிக்கூற்று

ஒருங்கிணைவு மற்றும் முகாமைத்துவத்துடன் துல்லியமான உட்கட்டமைப்பை வழங்குவதன் மூலம் இடத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு விருப்பம் தரும் அலுவலக சூழலை வழங்கல்

கிளையின் பணிகள்

பாதுகாப்பு சேவையை வழங்கல்

கட்டிடங்களைப் பராமரித்தல்

குளிரூட்டிச் சேவையை வழங்கல்

மின்தூக்கி மற்றும் மின்னுற்பத்தி சேவையை வழங்கல்

தொலைபேசி ஒருங்கிணைப்பு சேவையை வழங்கல்

மனதில் பதியும் தரைத்தேற்றத்தை பராமரித்தல்

பார்வை மற்றும் பணி

தூரநோக்கு

கல்வி நிறுவனங்களின் சமூகத்துக்காக வசதியாகக் கட்டப்பட்ட சுற்றாடல்

பணிக்கூற்று

கல்வி நிறுவனங்களுக்குள் நிலைத்து நிற்கக் கூடிய கட்டுமானங்களுக்காக பொறியியல், கட்டிடக் கலை மற்றும் சுற்றாடல் தரங்களை நிலைநாட்ட அர்ப்பணிப்புடன் செயற்படல்

கிளையின் பணிகள்

மாகாண கல்வி மற்றும் பொறியியல் திணைக்களங்கள் மற்றும் ‘அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை’ (NSBS)யின் செயற்றிட அலுவலகம் ஆகியவற்றின் உதவியுடனான பாடசாலைகள், தேசிய கல்விக் கல்லுரிகள் (NCOE), ஆசிரியர் கல்லூரிகள் (TC) முதலியவற்றுக்கான கொள்வனவு வேலைகள்

கட்டுமானம், திருத்தம் மற்றும் பராமரிப்பு தொடர்பான சுற்றறிக்கைகளும் கையேடுகளும்

பார்வை மற்றும் பணி

தூரநோக்கு

நேரத்தோடு பாடசாலைகளுக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் கற்றல் கருவிகளை வழங்கல் மற்றும் உச்சநிலை கல்விச் சேவையை வழங்குவதில் களஞ்சியப்படுத்தல் காலத்தை குறைப்பதன் மூலம் தரத்தைப் பேணலும்

பணிக்கூற்று

மாகாண மற்றும் வலய மட்டத்திலான ஒருங்கிணைவுடன் பொதுவான கற்றல் கருவிக்கைளைச் சகல தேசிய பாடசாலைகளுக்கும் விசேட கற்றல் கருவிகளை சகல பாடசாலைகளுக்கும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் பகிர்ந்தளித்தல்

கிளையின் பணிகள்

ஒவ்வொரு பாடத்துக்கமான தேவைப்பாட்டின் அடிப்படையில் பாடப் பணிப்பாளரால் கொள்வனவு அலகின் ஊடாக கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களையும் கருவிகளையும் உரிய முறையில் களஞ்சியப்படுத்தக் கூடிய இடங்களை வழங்கல்

அதற்காக,

ஒவ்வொரு பொருளையும் அதன் தரத்தை உறுதிப்படுத்தி பொதி செய்தல்

விசேட பொருட்கள் மற்றும் உயர் பெறுமதி கொண்ட பொருட்களின் தரத்தைப் பேணும் வகையில் விசேட ஏற்பாடுகளைச் செய்தல்

வரையறுக்கப்பட்ட வளங்களைப் பயன்படுத்தி உரிய நேரத்தில் பொருட்களை கையளித்தல்

TOP