நிதி

திரு. டி. எல். விஜேநாயக்க

டைரக்டர் ஜெனரல் (நிதி)

பார்வை மற்றும் பணி

தூரநோக்கு

நாட்டின் பிள்ளைகளின் கல்வி அபிவிருத்திக்காக நிதியைப் பயனுறு விதத்தில் பயன்படுத்தல்.

பணிக்கூற்று

ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தின்படி செலவினத் தலைப்பு இல. 126ன் கீழ் கல்வி அமைச்சுக்காக ஒதுக்கப்பட்ட மீள் வரும் நிதிகள் மற்றும் திறைசேரியினால் துணை அலுவலகங்களுக்கு (தேசிய பாடசாலைகள், உதவி பெறும் பாடசாலைகள், பிரிவேனாக்கள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் மற்றும் தேசிய கல்விக் கல்லூரிகள்) வழங்கப்பட்ட முன்பணத்தை நிதி முகாமைத்துவ செய்முறைக்கு அமைய தேவையை நிறைவு செய்ய தங்கள் திட்டங்களை மேற்கொள்ளவும் உரியவாறு நெறிப்படுத்தலும் வழங்கலும் அத்துடன் திறைசேரிக்கு தேவையான நிதி விபரங்களை சமர்ப்பித்தலும்.

கிளையின் பணிகள்

அமைச்சுக்குச் செலவின மதிப்பீட்டைத் தயாரித்தல்.

மீள் செலவின ஒதுக்கீட்டைச் செய்தலும் பேரேட்டைப் பேணலும்.

அமைச்சின் கீழ் வரும் சகல துணை அலுவலகங்களுக்கும் முன்பணம் வழங்கலும் முன்பணப் பேரேட்டைப் பேணலும்.

மீள் வரும் செலவினத்துக்காக சரியான கணக்கைத் தயாரித்தல்.

அமைச்சுக்கும் திறைசேரிக்கும் கணக்குச் சுருகத்தைச் சமர்ப்பித்தல்.

கிளையின் பணிகள்

தேவைக்கு அமைய கல்வி அமைச்சுக்கும், அமைச்சரின் அலுவலகத்துக்குமான காகிதாதிகளையும் இதர நுகர்வுப் பொருள்களையும் கொள்வனவு செய்தல், களஞ்சியப்படுத்தல் மற்றும் பகிர்ந்தளித்தல்.

எவ்.ஆர்.66. 144க்கு அமைய அமைச்சின் சொத்துகள் பதிவேட்டை இற்றைப்படுத்தலும் பேணலும். பணியாளர் விபரங்கள்

முதலினப் பொருட்களை கொள்முதல் செய்தல், பாராமரித்தலும் பழுதுபார்த்தலும், அமைச்சின் சகல பதிப்பித்தல் செயற்பாடுகள்.

விசாரணையின் பின்னரான விரிவான ஆராய்வினை நடாத்துதல் மற்றும் தேசிய கல்விக் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் பாதிப்புகளுக்கும் பற்றாக்குறைகளுக்கும் கழிவுகள் செய்தல்.

பார்வை மற்றும் பணி

தூரநோக்கு

கல்வி அமைச்சில் இருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு திருப்திகரமான ஓய்வு காத்தை வழங்குதல்.

பணிக்கூற்று

வினைத்திறனான முறையில் கல்வி அமைச்சில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை தயார் செய்தல்.

கிளையின் பணிகள்

ஓய்வு பெறும் அலுவலர்களின் ஓய்வூதியத்தை தயாரித்தல்.

எவ்.ஆர். தொடர்பான விடங்களை விசாரணை செய்தல்.

தேசிய பாடசாலைகள், பயிற்சிக் கல்லூரிகள் மற்றும் தேசிய கல்விக் கல்லூரிகளின் நிதிக் கொடுக்கல்-வாங்கலை மேற்பார்வை செய்தல்.

கிளையின் பணிகள்

மூலதன வரவு செலவு மதிப்பீட்டில் ADB, TSEP-AUSAID(WB), UNICEF, UNESCO, Save the Children ஆகிய வெளிநாட்டு நிதியுதவி செயற்றிட்டங்களை உள்ளடக்கல், நிதிகளை விடுவித்தல்.

கல்வி அமைச்சின் கீழ் வரும் நிறுவனகங்ளின் அதாவது தேசிய கல்வி நிறுவகம், பரீட்சைத் திணைக்களம், கல்வி வெளியீட்டுத் திணைக்களம், தேசிய நூலகம் மற்றும் ஆவணமாக்கல் சேவைச் சபை போன்றவற்றின் நிதி மற்றும் கணக்கு செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல்.

எவ்.ஆர். 115 இன் கீழ் அங்கீகரிப்புகளை வெளியிடல்

செலவினங்கள் அறிக்கையை சமர்ப்பித்தல் மற்றும் சரியான கணக்குகளைக் கையாளல்.

முன்பணம் "B" கணக்கிற்கான மதிப்பீட்டைத் தயாரித்தல், நிதிகளை விடுவித்தல், அமைச்சு மற்றும் 353 தேசிய பாடசாலைகள், 19 தேசிய கல்விக் கல்லூரிகள், 109 ஆசிரிய நிலையங்கள் மற்றும் 07 ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் அலுலவர்களுக்கான ஆண்டுக்கான மற்றும் ஒன்றிணைக்கப்பட்ட ஒப்பீட்டு அறிக்கைகளை தயாரித்தல்.

கிளையின் பணிகள்

சகல மீண்டுவரும் மற்றும் மூலதனக் கொடுப்பனவுகளைச் செய்தல்

இறுதி முன்பணம் 'B' கணக்குகளைத் தயாரித்தல்

கணக்காளர் நாயகத்துக்கு பொறுப்புக்கூற வேண்டியவராக இருத்தல்

முன்பணம் 'B' கணக்குகள் மீதான கொடுப்பனவுகளைச் செய்தல்

இறுதிக் கணக்குகளுக்கு தேவையான தகவல்களை வழங்கல்

கல்வி அமைச்சின் அலுவலர்கள் சகலரினதும் சம்பளம் மற்றும் முன்பணம் தொடர்பான கொடுப்பனவுகளைச் செலுத்துதல்.

TOP