கல்வித்தர அபிவிருத்தி

பார்வை மற்றும் பணி

தூரநோக்கு

அழகியல் மனிதர்களை நாட்டிற்கு அளித்தல்.

பணிக்கூற்று

பிள்ளையானது கூட்டுறவுள்ள வினைப்படுபவராக இருந்து தன்னைச் சமூகமயமாக்கும் ஒரு முறையான சமூகத்தைக் கட்டியெழுப்புதல் அத்துடன் அது ஆசிரியர்களின் வழிகாட்டல் மற்றும் நடாத்தலுடன் கருதுள்ள மகிழ்ச்சியை அனுபவித்தல்.

கிளையின் பணிகள்

வரைதல், ஆடல் (சிங்களம், பரதம்), இசை (கீழ்நாட்டு, மேல்நாட்டு), நாட்டியமும் நாடகமும் (சிங்களம், தமிழ், ஆங்கிலம்) போன்ற பாடங்களில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதன் ஊடாக மாணவர்களின் தகுதியை வலுப்படுத்தல்.

ஆசிரியர்களின் கொள்திறனைக் கட்டியெழுப்புதல்.

மனித மற்றும் பௌதிக வளங்களை அளிக்கும் அதேவேளை பாடசாலையின் உரியவாறான கற்பித்தல் மற்றும் கற்றல் பண்பாட்டைப் பேணல்.

பாடசாலை மாணவர்களின் கல்வி அடைவுகளை அபிவிருத்தி செய்வதற்காக, நல்ல தரமான, பாடசாலை பாடத்திட்டங்களை ஆக்குவதற்கு தேவையான உதவிகளை தேசிய கல்வி நிறுவகத்துக்கு வழங்கல்.

பாடம் தொடர்பாக தேவைப்படும் உதவியை சகல அரசாங்க மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளுக்கு வழங்குதல்.

திறன் மற்றும் அனுபவம் கொண்ட சமூகத்துக்கு பொருத்தமான அடித்தளத்தை ஆயத்தம் செய்தல்.

பாடசாலை மாணவர்களின் திறமை, நோக்கம், சமூக அக்கறை, அமைத்தல் மற்றும் பற்றியிருத்தல் என்பவற்றுக்கு ஊட்டமளிப்பதற்காக அகில இலங்கை பாடசாலை வரைதல், ஆடல், இசை, நாடகம், அரங்காற்றுகைக் கலை மற்றும் மேலைத்தேய இசை என்பவற்றில் போட்டிகளை நடாத்துதல்.

அழகியற் கல்வி அபிவிருத்திப் பயனுக்காக சம்பந்தப்பட்ட மேலாண்மைகளையும் ஒருங்கிணைத்தல்.

பார்வை மற்றும் பணி

தூரநோக்கு

உலகை ஆராய்வதற்கு மொழிப் பன்முகத் தன்மை ஊடாக அறிவெல்லையை அகலமாக்கல்.

பணிக்கூற்று

இலங்கை அடையாளத்தை காட்டும் கருவியாக ஆங்கிலத்தைப் பயன்படுத்தி இலங்கையின் எதிர்கால சந்ததியினரை பன்மொழியினராக (குறைந்தது இருமொழியினராக) வலுப்படுதல்.

கிளையின் பணிகள்

இருமொழிக் கல்வி வேலைத் திட்டம் தொடர்பான கொள்கைகளை வகுக்கும்போது கவனம் செலுத்த வேண்டிய கருத்தூறல் ஆவணங்களைத் தயாரித்தல். மேலும், அத்தகைய கொள்கை தொடர்பாக தேசிய கல்வி ஆணைக்குழுவுடன் ஒருங்கிணைதல்.

இருமொழிக் கல்விக்கான உரிய நடைமுறைப்படுத்தல் முறையியல்களைத் தயாரித்தலும் அவற்றை நடைமுறைப்படுத்தலும்.

இருமொழிக் கல்வியில் ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் பணியிடம் மாற்றுகை தொடர்பான எண்ணக்கருக்களை தயாரித்தல்.

இருமொழிக் கல்வி வேலைத் திட்டம் தொடர்பான மாணவர் செயற்பாடுகளுக்கு வழிகாட்டல்.

ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட செயற்பாடுகளுக்கு வழிகாட்டல்.

பொருத்தமான ஆய்வு மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகள்.

இருமொழிக் கல்வி சம்பந்தமான தேசிய மட்ட திறமைகளை அடையாளம் காணல் மற்றும் இடைக்கால திட்டங்களைத் தயாரித்தல்.

இருமொழிக் கல்வி வேலைத் திட்டம் மீதான கிடைமட்ட மற்றும் செங்குத்தான விழிப்புணர்வு.

இருமொழிக் கல்வி வேலைத் திட்டம் மீதான தரவு அடிப்படை மற்றும் தகவலடிப்படை முறையை வடிவமைத்தலும் பராமரித்தலும்.

தேசிய கல்வி நிறுவகத்துடன் சேர்ந்து ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் வளவாளர்களுக்கான கொள்திறன் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மேற்கொள்ளல்.

இருமொழிக் கல்வி வேலைத் திட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட ஆய்வுகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அடையாளம் காணல்.

கிளையின் பணிகள்

கீழ் வரும் க.பொ.த. (சா.த) பாடங்களுக்கு பாட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்ளல்


* வணிகக் கல்வியும் கணக்கீடும்

* தொழில்முனைவுக் கல்வி

கீழ் வரும் க.பொ.த. (உ.த) பாடங்களுக்கு பாட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்ளல்


* கணக்குப் பதிவியல்

* வணிகக் கல்வி

* பொருளியல்

வணிக புள்ளிவிபரம் மீதான பாட அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மேற்கொள்ளல்.

வர்த்தக பாடங்களில் வலய, மாகாண மற்றும் அகில இலங்கை வினா-விடைப் போட்டிகளை நடாத்துதல்.

அறிமுகம் மற்றும் திருத்தங்களில் கலைத்திட்டம் மற்றும் ஆசிரியர் வழிகாட்டிகள் அபிவிருத்தி செய்வதற்கு தே.க.நி. யுடன் ஒருங்கிணைதல்.

பாடநூல்களைத் தயாரிப்பதில் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்துடன் ஒருங்கிணைதல்.

வர்த்தக பாடங்கள் மீதான பரீட்சைகளை நடாத்துவதில் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஒருங்கிணைதல்.

பாடசாலைகளில் வர்த்தக கழகங்களை நடாத்துவதற்கு வழிகாட்டலையும் அறிவுறுத்தல்களையும் வழங்குதல்.

க.பொ.த.(உ.த) வர்த்தகப் பிரிவு மாணவர்களின் தனிப்பட்ட மற்றும் குழு வேலைத் திட்டங்களுக்கு அறிவுறுத்தல்.

பார்வை மற்றும் பணி

தூரநோக்கு

தரமான கல்வி அபிவிருத்தியை நோக்கி தேசிய மற்றும் மாகாண மட்ட ஒருங்கிணைவுடன் முறையான கல்வி அபிவிருத்தி வேலைத் திட்டங்களை அறிமுகப்படுத்தல்.

பணிக்கூற்று

கலைத்திட்ட அபிவிருத்தியை நோக்கி செயற்பாடுகளை ஒன்றிணைப்பதற்காக மாகாண மற்றும் தேசிய மட்ட நிறுவனங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் தேவையான நடவடிக்கைளை மேற்கொள்ளல்.

கிளையின் பணிகள்

தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் ஒருங்கிணைப்புச் செயற்பாடுகளை பேணிவரல்.

ஒரு நாளுக்கான அலுவல்சார் பணிக்காக பணியாளர் தொகுதியினரின் போக்குவரத்து வசதிகளை வழங்குதல்.

தூரநோக்கு

தூரநோக்கு

அரசாங்க பாடசாலைகளில் உள்ள சகல மாணவர்களுக்கும் தேவையான கருவிகளைக்கொண்டு முழுதும் வளர்ச்சிபெற்ற குடிமகனாக ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் தொடர்பில் இலக்கிய மற்றும் தகைமைகளை அபிவிருத்தி செய்வதற்கு உற்பத்தித் திறனை செய்து காட்டுவதற்கு உதவுதல்.

கிளையின் பணிகள்

இலங்கைப் பாடசாலைகளில் கற்பிக்கப்படும் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் தொடர்பில் கொள்கைத் தீர்மானங்களை எடுத்தல்.

பிரதேச ஆங்கில ஆதரவு நிலையங்களுக்கு ஒதுக்கீடுகளை வழங்கலும் அவற்றைக் கண்காணித்தலும்.

வலய மற்றும் மாகாண மட்ட மட்டத்தில் இடம் பெறும் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் வேலைத் திட்டங்களை கண்காணிப்பு செய்தல்.

தேசிய மட்ட ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டிகளை நடாத்துதல்.

பார்வை மற்றும் பணி

தூரநோக்கு

கணிதத்தின் பங்களிப்பை உணர்ந்துள்ள பிள்ளைகள் பரம்பரையை உருவாக்கியவர்களாக எதிர்கால உலகின் நிலைப்புக்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் அது தொடர்பான திறன்களுடன் வலிமையுடனும் கணிதத்தை மதித்தலும் விரும்புதலும்.

பணிக்கூற்று

கல்வி அமைச்சில் இணைக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களின் ஆற்றுகையானது நாட்டின் பாடசாலைப் பிள்ளைகளுக்காக சமமான வாய்ப்புகளை வழங்குவதற்குப் பங்களிப்புச் செய்யும் அனுமதிக்கப்பட்ட கொள்கை சட்டகத்திற்குள் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் கணிதத்தில் எதிர்பார்க்கும் தகைமையை அடைவதற்காகவும் ஊக்குவித்தல் மற்றும் தொடர் கண்காணிப்பு மூலமாக உயர் கல்வித் தரத்தை அடைவதற்காக ஒருங்கிணைத்தல் மூலம் வழிப்படுத்தல்.

கிளையின் பணிகள்

தேசிய இலக்குக்கமைய கணிதப் பாடத்துக்காக தேசிய கல்வி நிறுவகம், கல்வி வெளியீட்டுத் திணைக்களம், பரீட்சைத் திணைக்களம் மற்றும் மாகாண கல்வித் திணைக்களங்கள் என்பவற்றின் ஒருங்கிணைவோடு பொதுவான நோக்கத்தின் கீழ் கலைத்திட்டம், பாடநூல்கள், மதிப்பீடு மற்றும் கற்பித்தல், கற்றல் செய்முறை என்பவற்றின் முறையான புத்தாக்கத்துக்குத் தேவையான பிரதான சட்டகத்தை உருவாக்கல்.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் மதிப்பீட்டின் ஊடாக மாணவர் அடைவை மேம்படுத்தல் அத்துடன் கணித தர அபிவிருத்தியை பிரதிபலிக்கும் இலக்கை அடைவதற்காக நாடு முழுதும் வலய மட்டத்தில் ஆசிரியர் மற்றும் மாணவர் ஊக்குவிப்பு வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தல்.


* நாடு தழுவிய பாடசாலை கணித வினா விடை மற்றும் நாடகப் போட்டிக்கான மாகாண மட்ட ஊக்குவிப்பு வேலைத் திட்டம்.

* நாடு தழுவிய பாடசாலை கணித வினா விடை மற்றும் நாடகப் போட்டிப் பதங்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கும் நிகழ்ச்சியை நடாத்துதல்.

* கணித அடைவு மட்டத்தை உயர்த்துவதற்கான ஆசிரியர் மற்றும் மாணவர் மதிப்பீட்டு வேலைத் திட்டம்.

* கணித அடைவு மட்டத்தை உயர்த்துவதற்காக மாணவர் பாசறைகள் மற்றும் நிகழ்ச்சிகளை நடாத்தலும் பரிசுகளை வழங்கலும்.

* வெளிவாரி வளங்களின் உதவியுடனாவது புதிய கண்டுபிடிப்பு தொழினுட்பத்தை நோக்கி இலங்கை மாணவர் பரம்பரையை திசைதிருப்பும் கணிதவியலாளரை உருவாக்குவதற்கு இயற்கைத் திறனுள்ள மாணவர்களுக்கான தீவிர வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தல் மற்றும் பன்னாட்டு மட்டத்திலான அனுபவத்தை வழங்கி உயர் அடைவு மட்டத்தைப் பெறுவதற்குத் தேவையான பிற்புலத்தை உருவாக்கல்.

* இயற்கைத் திறனுள்ள மாணவர்களுக்கான வேலைத் திட்டம்

நட்புடனான உறுதியான அனுபவங்கள் மூலம் கடினமான நுண்மையான கருத்துகளை அறிவதற்காக புதிய முறையியல்களைப் பயன்படுத்தி கற்பித்தல், கற்றல் செய்முறையை வலுப்படுத்தலுக்கு பல்கலைக் கழக வழங்கள் பங்களிப்பு மற்றும் தலைப்பு அடிப்படையிலான மென்பொருள் கணிதக் கற்கைத் துணைக்கருவிகள் மற்றும் கணித ஆய்வகங்கள் ஊடாக உயர் மட்ட ஆசிரியர் கொள்திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் மற்றும் கற்றல் உட்கட்டமைப்பை வழங்கல்.


* கொள்திறன் மேம்பாட்டுக்கான ஆசிரியர் அறிவுறுத்தல் கையேடுகள், ஆசிரியர் வழிகாட்டிகள் மற்றும் தேசிய பாடசாலைகளில் உள்ள சிங்கள மொழிமூல கணித ஆசிரியர்களின் பாடப் புத்தாக்க ஆசிரியர் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் என்பவற்றைத் தயாரித்தல்

* தகவல் தொழினுட்ப பிற்புலத்தின் கீழ் கற்பித்தல், கற்றல் முறையியலை அபிவிருத்தி செய்வதற்காக 1000 இடைநிலைப் பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்களை வலுப்படுத்துவதற்காக தலைப்பு அடிப்படையிலான கணித உதவி நூல்கள் (modules) வழங்குதல்.

* கணித ஆசிரிய ஆலோசகர்களுக்கு குறுங்கால உள்நாட்டு பயிற்சி வேலைத் திட்டங்கனை மேற்கொள்ளல்

* கணித ஆய்வு கூடங்கள் உள்ள 1000 இடைநிலைப் பாடசாலைகளிடையிலும் வலய மட்டத்திலும் வழங்குவதற்காக “கணித கருவிகளை பயன்படுத்துவதற்கான ஆசிரியர் மற்றும் மாணவர் அறிவுறுத்தல் கையேடு” என்ற நூலை ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் பதிப்பித்தல்.

* கொள்திறன் மேம்பாட்டுக்கான ஆசிரியர் அறிவுறுத்தல் கையேடுகள், ஆசிரியர் வழிகாட்டிகள் மற்றும் தேசிய பாடசாலைகளில் உள்ள தமிழ் மொழிமூல கணித ஆசிரியர்களின் பாடப் புத்தாக்க ஆசிரியர் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் என்பவற்றைத் தயாரித்தல்.

* 1000 இடைநிலைப் பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட ஒன்றிணைக்கப்பட்ட கணினி உதவியுடனான கணிதக் கற்றல் வேலைத் திட்டத்துக்கு தொழில்சார் உதவிகளை வழங்குதல்.

கிளை மற்றும் மாகாணங்களுக்கு ஒதுக்கப்பட்ட செயற்பாடுகளை கண்காணித்தலும் மேற்பார்வை செய்தலும் தேசிய கண்காணிப்பு வேலைத் திட்டத்தின் ஊடாக செய்யப்பட்டவைகளை சமகால கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை செய்தலும்.


* தேசிய மற்றும் மாகாண ஒன்றிணைந்த கண்காணிப்பு வேலைத் திட்டம்

* காலாண்டுக்கொரு முறை திட்டமிடல் மற்றும் முன்னேற்ற மீளாய்வைச் செய்தல்

* கணிதத்துக்கான விசேட ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் மற்றும் செயற்குழுக் கூட்டங்களை நடாத்துதல்.

பார்வை மற்றும் பணி

தூரநோக்கு

மொழி, பண்பாடு, இலங்கையர் அடையாளம் மற்றும் ஒருமைப்பாடு என்பவற்றை பேணும் அதேவேளை எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்கும் அடுத்த தலைமுறையை உருவாக்கல்.

பணிக்கூற்று

மொழித் தகைமையூடாகவும் சமூகக் கல்வியின் மூலம் மனித பண்பாட்டைக் கொண்டுள்ள தேசிய அடையாளத்தைப் பாதுகாக்கும் மற்றும் எதிர்கால சவால்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுக்கும் மொழியின் நான்கு திறன்களிலும் திறமையுடன் தேசிய பெறுமானத்தை மதிக்கும் தேசப்பற்றுள்ள மாணவ மக்கள் தொகையை கட்டியெழுப்புதல்.

அலகின் பணிகள்

6-13 தரங்களில் இருக்கும் பிள்ளைகள் தங்கள் தாய் மொழியிலும் மொழியின் நான்கு திறன்களிலும் கொண்டுள்ள தகைமையை அபிவிருத்தி செய்தல்.

தேசிய மொழிகள் மற்றும் மனிதப் பண்பாடுகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் பிள்ளைகளின் அடைவை உயர்த்துதல்.

கொள்கைகள்

தேசிய பாடசாலைகளின் கல்வித்தர அபிவிருத்தி வேலைத் திட்டங்களை வகுத்தல், பௌதிக மற்றும் மனித வளங்களின் முறையான முகாமைத்துவத்துக்குத் தேவையான நடைமுறைப்படுத்தல் கொள்கைகளை உருவாக்கல்.

கால மாற்றம் அடிப்படையிலான தேசிய பாடசாலைகளின் தேவைப்பாடுகளை அடையாளம் கண்டு அவற்றை ஈடு செய்வதற்கான கொள்கைகளை வகுத்தல்.

தேசிய பாடசாலை பணியாட் தொகுதியினரை உரியவாறு பணியமர்த்துதல் மற்றும் அவற்றின் வினைதிறனுக்குத் தேவையான கொள்கைகளை வகுத்தலும் அவற்றை நடைமுறைப்படுத்தலும்.

திட்டங்கள்

தேசிய பாடசாலைகளின் பௌதிக மற்றும் மனத வள தேவைப்பாடுகளை அடையாளம் காணல் மற்றும் அவற்றை ஈடு செய்வதற்கான திட்டங்களை வகுத்தல்.

இற்றைப்படுத்தப்பட்ட மாணவர் விபரங்களை பேணிவரத் தக்க ஒரு பொறிமுறையைத் திட்டமிடல்.

தேசிய பாடசாலைகளின் பரீட்சை பெறுபேறுகளைப் பகுப்பாய்வு செய்தல் மற்றும் பெறுபேற்றை உயர்த்துவதற்கான ஒரு முறையியலைத் திட்டமிடல்.

ஒவ்வொரு தேசிய பாடசாலையினதும் விசேட அம்சங்களை அடையாளம் காணல் மற்றும் அவற்றை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களைத் தீட்டல்.

தேசிய பாடசாலைகளில் எழும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்தை தீர்ப்பதற்கான திட்டங்களைத் தீட்டல்.

க.பொ.த.(சா.த) மற்றும் (உ.த) பரீட்சைப் பெறுபேறுகளை உயர்த்துவதற்கு ஆண்டுதோறும் தொடர் கருத்தரங்குகளை நடாத்துவதற்கான திட்டங்களை வகுத்தல்.

தேசிய பாடசாலைகளில் (தரம் 6 தவிர) தரம் 1 முதல் 11 வரையான வகுப்புகளில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதிகள் மீதான திட்டங்களைத் தீட்டல் மற்றும் பரிந்துரைகளை கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கல்.

தேசிய பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கும் சமநிலைப்படுத்துவதற்கும் திட்டமிடல்.

தேசிய பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான இற்றைப்படுத்தலை மேற்கொள்வதற்குத் தேவையான திட்டங்களை வகுத்தல் அத்துடன் இந்த வெற்றிடங்கள் தொடர்பாக ஆறு மாதங்களுக்கு முன்னரே மேலதிக செயலாளர் (கல்வித்தர அபிவிருத்தி) மற்றும் மேலதிக செயலாளர் (கல்விச் சேவை நிறுவனம்) ஆகியோருக்கு அறிவித்தல்.

மாதாந்தம் தேசிய பாடசாலை அதிபர்களின் கூட்டத்தைக் கூட்டுவதற்கு திட்டமிடலும் ஏற்பாடு செய்தலும்.

தேசிய பாடசாலை அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எதிரான முறைப்பாடுகளை விசாரித்தல், இந்த முறைப்பாடுகளை உரிய புலனாய்வுக்காக புலனாய்வுப் பிரிவுக்கு அனுப்பி வைத்தல் மற்றும் இத்தகைய நிகழ்வுகளை மட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.

பொது மக்கள் தினத்தை ஒரு திட்டமிடப்பட்ட வகையில் நடாத்துதல் மற்றும் பொது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணல்.

ஒருங்கிணைதல்

பல்வேறு கல்வி வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சின் ஏனைய கிளைகளோடு உரிய ஒருங்கிணைவைப் பேணல்.

தேசிய பாடசாலை வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது, ​தேசிய கல்வி நிறுவகம், வலய, மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளின் பணியாட்தொகுதியினருடன் நல்ல ஒருங்கிணைவைப் பேணல்.

அரசாங்க பரீட்சைகளுக்காக கருத்தரங்குகள் தொடர்பான செயற்பாடுகளில் கல்வி அமைச்சின் ஏனைய பிரிவுகள் மற்றும் பரீட்சைத் திணைக்களம் என்பவற்றுடன் உரிய ஒருங்கிணைவைப் பேணல்.

அரசாங்க கொள்கைகளுடன் நின்று அரசாங்க அமைப்புகள் மற்றும் அரசசார்பற்ற அமைப்புகளுடனான தொடர்பை பேணுவதன் ஊடாக தேசிய பாடசாலைகளை அபிவிருத்தி செய்தல்.

கொள்திறனைக் கட்டியெழுப்புதல்

ஆசிரியர்கள், உதவி அதிபர்கள், பதில் அதிபர்கள், மற்றும் தேசிய பாடசாலை அதிபர்களின் முகாமைத்துத் திறன்களை அபிவிருத்தி செய்வதற்கான பயிற்சி வேலைத் திட்டங்களை ஏற்பாடு செய்து நடைமுறைப்படுத்தல்.

கற்பித்தல், கற்றல் செய்முறையின் முன்னேற்றத்துக்காக பயிற்சிக் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தல்.

கல்விசாரா ஊழியர்களுக்கு பயிற்சி வேலைத் திட்டங்களை ஏற்பாடு செய்தல்.

கண்காணித்தல்

முகாமைத்துவம் மற்றும் தரவுறுதிக் கிளைப் பணிப்பாளரின் உதவியுடன் வலய, மாகாண மற்றும் அமைச்சு மட்டங்களில் நடைபெறும் பாடசாலை மேற்பார்வைத் வேலைத்திட்டங்களை கண்காணித்தல்.

தேசிய பாடசாலை அதிபர்களின் முகாமைத்துவ வேலைத் திட்டங்கள் மற்றும் செயலாற்றுகை அடைவுகளை கண்காணித்தல்.

தேசிய பாடசாலைகளின் ஓராண்டு மற்றும் ஐந்தாண்டுத் திட்டங்களை கண்காணித்தல்.

தேசிய பாடசாலை பணியாட்தொகுதியினரின் செயலாற்றுகையை கண்காணித்தல்.

தேசிய பாடசாலைகளின் நிதி முகாமைத்துவ செயற்பாடுகளைக் கண்காணித்தல்.

பார்வை மற்றும் பணி

தூரநோக்கு

இலங்கையின் செழுமையான கல்விப் பண்பாட்டை பாதுகாக்கும் அதேவேளை, தற்காலத்தைய தேவைக்குப் பொருத்தமான அறிவு, மனப்பாங்கு மற்றும் திறன்கள் நிறையப்பெற்ற குருமார் மற்றும் பொது நிலையினரையும் கொண்ட பொது அவையை உருவாக்குதல்.

பணிக்கூற்று

தேரவாத துறவர சபையின் நலனுக்கும் இலங்கை அடையாளத்தின் சுய உண்மைத் தன்மை கொண்ட மக்கள் அமைப்புக்கும் உதவுக் கூடிய நற்பண்பும் ஒழுக்கமும் உள்ள குருமாரைக் கொண்ட அமைப்பை உருவாக்கும் முறையாக பிரிவேனாக் கல்வி நிறுவனங்களை பராமரிப்பதற்கான பணிகளை நிறைவேற்றல்.

கிளையின் பணிகள்

1979ம் ஆணடின் 64ம் இலக்க பிரிவேனாக் கல்விச் சட்டத்தின் குறிக்கோள்களையும் நோக்கங்களையும் நிறைவேற்றல், மேற்படி சட்டத்தின் ஒழுங்கு விதிகளுக்கு அமைய நாடு முழுதும் பிவேனாக்களுக்கு அனுமதி அங்கீகரித்தல், பிரிவேனா ஆசிரியர்கள், பிரிவேனாத் தலைவர்களின் சம்பளத்துக்கான ஆ​ண்டு மானியம் மற்றும் பரீட்சைக் கொடுப்பனவு என்பவற்றை அனுமதித்தல் மற்றும் வளங்களை வழங்கல், நூலகங்களை அங்கீகரித்தலும் அபிவிருத்தி செய்தலும், நிறுவனங்களை வகைப்படுத்தல், கலைத்திட்ட அபிவிருத்தி, பாட ஆலோசனை, ஆசிரியர் பயற்சி, ஆசிரியர் ஓய்வூதியத்தை அங்கீகரித்தல், ஆசிரியர்களின் சேவையை முடிவுறுத்தல் போன்ற கல்வி நிர்வாக மற்றும் முகாமைத்துவ கடமைகளைச் செய்தல்.

பிரிவேனா சட்டத்தின் வாசகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஒழுங்கு விதிகளுக்கு அமைய அபிவிருத்தி போன்ற கடமைகளை நிறைவேற்றல், தேசிய மட்டத்தில் ஆண்டிறுதி பிரிவேனா பரீட்சைகளை நடாத்துதல், சீத்தாவாக்கை மற்றும் வேனமுல்லையில் இருக்கும் பிரிவேனா பயிற்சி நிறுவனங்க நிர்வகித்தல், அபிவிருத்தி செய்தல், முகாமைத்துவம் செய்தல், வித்யோதயா மற்றும் வித்தியாலங்கார மகா பிரிவேனாக்களுக்கு மானியங்கள் வழங்கல் மற்றும் ஆசிரியர் சம்பளத்தை அங்கீகரித்தல் மற்றும் வழங்குதல் போன்றவைகளைச் செய்தல்.

தொடரான ஒழுங்குவிதிகளுக்கும் பிரிவேனா சட்டத்துக்கும் திருத்தங்களை முன் வைத்தல்.

கல்விக் கொள்கைக்கு அமைய இரு மொழிக் கல்விச் செயற்பாடுகளைத் திட்டமிடலும் நடைமுறைப்படுத்தலும்.

பிரிவேனா பாடநூல்களைத் தயாரிப்பதில் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்துக்கு உதவுதலும், பிரிவேனாக்களுக்கு பாடநூல்களை பகிர்ந்தளிப்பதற்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்குதல்.

பிரிவேனா சீருடைகளை கையளிப்பதற்குத் தேவையான உதவியை வழங்கல்.

பரீட்சைத் திணைக்களத்துடன் சேர்ந்து பிரிவேனாப் பரீட்சைகள் சம்பந்தமான கடமைகளைச் செய்தல்.

தேசிய கல்வி நிறுவகத்துடன் சேர்ந்து பிரிவேனா பாடத் திட்டம் மற்றும் ஆசிரியர் பயிற்சி, ஆசிரியர் கைநூல் தொடர்பில் செயல்படுதல்.

பிரிவோனாக் கிளையின் “சம்பாஷா’ சஞ்சிகை மற்றும் ஏனைய வெளியீடுகளை மேற்கொள்ளல்.

பிரிவேனாக்களுக்கு ஆண்டுக்கான மதிப்பீட்டைச் செய்தல், ஆண்டுக்கான செயற்திட்டத்தை ஆக்கலும் நடைமுறைப்படுத்தலும், அரசாங்க நிறுவனங்களான ஜனாதிபதி செயலகம், சமய அலுவல்கள் அமைச்சு, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் ஒருங்கிணைவுடன் பிரிவோனா தொடர்பான கடமைகளை நிறைவேற்றல்.

பிரிவேனா விடயங்கள் தொடர்பான சட்டச் செயற்பாடுகளை மேற்கொள்ளல்.

பிரிவேனாக் கல்விச் சபையின் அறுவுறுத்தல்கள் மற்றும் அழைப்புகளை பொருத்தமாக நடைமுறைப்படுத்தல்.

பார்வை மற்றும் பணி

தூரநோக்கு

சமயத்தில் நம்பிக்கையும் மதிப்பும் நிறைந்த மற்றும் அத்தகைய ஒழுக்க விழுமிய நடத்தைகொண்ட சந்ததியை உருகாக்கல்.

பணிக்கூற்று

சொந்த சமயத்துக்கு ஏற்ற வகையில் வாழ்க்கை முறையை கட்டியெழுப்பவும் மற்றவர்களினதும் தனதும் சொந்த வாழ்க்கைப் பேற்றுக்கான பொறிமுறையை காண்பதற்கு நல்ல சமூகத்தை உருவாக்கவும் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபுகளையும் விழுமியங்களையும் பாதுகாக்கவும் அவர்கள் சமய போதனைகளையும் நடைமுறைகளையும் விளங்கிக்கொள்ளவும் ஆதரவு நல்குதல்.

கிளையின் பணிகள்

பாட அபிவிருத்தி வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தல்.

மாணவர் ஒழுங்கங்களை அபிவிருத்தி செய்வதற்கு கொள்திறனைக் கட்டியெழுப்புதல்.

விசேட சமய விழக்களை ஏற்பாடு செய்தல்.

பார்வை மற்றும் பணி

தூரநோக்கு

திறமையான குழந்தைகளை வளர்ப்பதற்காக பாடசாலை முறைமையின் சீரான தன்மையை பராமரிக்க தேவையான வழிகாட்டுதலை வழங்குவதுடன் நமது தாய்நாட்டிற்கு பயனுள்ள வருங்கால தலைமுறையை உருவாக்கும் கல்விச் சட்டங்களை உறுதிப்படுத்தல்.

பணிக்கூற்று

பரவலாக திறந்த கல்வி வாய்ப்பினைக் கொண்ட எங்கள் தாய் தேசத்தின் திறமையான குழந்தைகளுக்கு புலமை பரிசில்களை வழங்குவதற்கான ஒழுங்குகளைச் செய்தல்.

கிளையின் பணிகள்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் சித்தியடைந்தவர்களுக்கு பாடசாலைகளை வழங்குதல்

பிற புலமைப்பரிசில் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்

பாடசாலை மேம்பாட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்

பாடசாலை மட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல்

Dr. C.W.W. கன்னங்கர நினைவு தின நிகழ்ச்சிகளை நடாத்துதல்.

பார்வை மற்றும் பணி

தூரநோக்கு

ஆரோக்கியமான மற்றும் செயலூக்கமான தலைமுறையை தேசத்திற்கு உருவாக்கல்.

பணிக்கூற்று

பாடசாலை பிள்ளைகளை ஆரோக்கியமாக வாழச்செய்ய, தனது குடும்பத்தில் மற்றும் சமூகத்தில் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதற்காக சுய-திறனுடன் அதிகாரம் அளித்து கிடைக்கக்கூடிய கல்வி வாய்ப்புகளிலிருந்து அதிகபட்ச பலனை பெற்றுக்கொள்வதற்காக அவர்களை தயார் செய்தல்.

விஷேட குறிக்கோள்கள்.

கிளையின் பணிகள்

பார்வை மற்றும் பணி

தூரநோக்கு


- அன்றாட வாழ்க்கைக்கான விஞ்ஞான அறிவு, அணுகுமுறை மற்றும் தேர்ச்சிகளை வழங்குதல்.

- நவீன உலகிற்கு பொருத்தமான குடிமக்களை உருவாக்குதல்.

- எதிர்கால உயர் கல்வி தேவைக்கான வாய்ப்புகளை வழங்குதல்.

- சுற்றுச்சூழல் நட்பு குடிமக்களை உருவாக்குதல்.

பணிக்கூற்று

தொழில்நுட்பவியல் சமுதாயத்திற்கு தேவையான விஞ்ஞான அறிவை வழங்குதல்.

கிளையின் பணிகள்

இந்த கீழ் அமைந்த கிளைகள்

கல்வி கிளையின் தேசிய கல்லூரிகள்

ஆசிரியர் கல்வி நிர்வாகக் கிளை

பார்வை மற்றும் பணி

தூரநோக்கு

'ஆசிரியர் - மாணவர்' உயர்நிலையை அடைவதற்காக ஆசிரியர்களை நிலைப்படுத்தல்.

பணிக்கூற்று

பாடசாலைகளின் மனித வளத்தை சமநிலையடையச்செய்ய ஆசிரிய இடமாற்றங்களை முகாமை செய்தல்.

கிளையின் பணிகள்

தேசிய பாடசாலைகள் மத்தியில் ஆசிரியர் இடமாற்றங்கள்


- தேசிய பாடசாலையிலிருந்து மற்றொரு தேசிய பாடசாலைக்கு இடமாற்றங்கள் பெறப்படலாம். இத்தகைய இடமாற்றத்திற்காக விண்ணப்பப்படிவத்தின் (சிங்களம் / தமிழ் மொழியில் மட்டுமே இந்த விண்ணப்பம் உள்ளது ) 7 பிரதிகளை பூர்த்தி செய்து பதிவுத்தபாலில் பணிப்பாளர் / ஆசிரியர் இடமாற்ற பிரிவிற்கு அதிபரின் பரிந்துரையுடன் சமர்ப்பித்தல் வேண்டும்.

தேசிய பாடசாலைகளில் பரஸ்பர ஆசிரியர் இடமாற்றம்


* பரஸ்பர இடமாற்றத்திற்காக விண்ணப்பிக்கும் இரு ஆசிரியர்களும் பின்வரும் தகுதிகளைக் கொண்டிக்கவேண்டும்

- நியமனம் கடிதத்திலுள்ள பாடம் ஒன்றாக இருக்க வேண்டும்.

- அந்தந்த ஆசிரியர்களின் அதிபர்கள் ஒப்புதல் கடிதங்களை சமர்ப்பிக்க வேண்டும்

- ஆசிரியர் இடமாற்றத்திற்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் அதிபரினுடாக சமர்ப்பிக்க வேண்டும்

மாகாண பாடசாலைகளுக்கு தேசிய பாடசாலை ஆசிரியர்களை விடுவித்தல்


- குறித்த ஆசிரியர் குறைந்தபட்சம் 7 வருடம் பணியாற்றி இருத்தல் வேண்டும்.

- குறித்த ஆசிரியர் ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் தணிக்கை விசாரணைகளுக்கு உற்படாதவராக இருத்தல் வேண்டும்.

- இந்நோக்கத்திற்காக விண்ணப்பப்படிவத்தின் (இணைப்பு II) 4 பிரதிகளை பூர்த்தி செய்து பதிவுத்தபாலில் பணிப்பாளர் / ஆசிரியர் இடமாற்ற பிரிவிற்கு அதிபரின் பரிந்துரையுடன் சமர்ப்பித்தல் வேண்டும்.

- கல்வி அமைச்சின் செயலாளரால் மாகாண சேவைக்கு விடுவிப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்படல் வேண்டும்

- குறித்த மாகாண அரச சேவை ஆணைக்குழுவானது இடமாற்றத்தை ஏற்றுக்கொள்வதற்கான அங்கீகாரத்தை வழங்கல் வேண்டும்.

மாகாண பாடசாலை ஆசிரியர்களை தேசிய பாடசாலைக்கு உள்வாங்கல்.


- மாகாண சேவையிலிருந்து தேசிய சேவைக்கு இடமாற்றம் பெற குறித்த மாகாணத்தில் அதிபர் சிபாரிசுடன்அனுமதிக் கடிதத்தின் ஐந்து பிரதிகளை வலயக்கல்விப் பணிப்பாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

- வலய/மாகாண கல்விப் பணிப்பாளர் / மாகாண செயலாளரின் சிபார்சுடன் மாகாண அரசாங்க சேவை ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

- குறிப்பிட்ட ஆசிரியரை கல்வி அமைச்சுக்கு விடுவிப்பதற்கு சம்பந்தப்பட்ட மாகாண அரச சேவை ஆணைக்குழு ஒரு சம்மதத்தை சமர்ப்பிக்க வேண்டும்

- குறிப்பிட்ட ஆசிரியரை இடமாற்றுவதற்கு கல்வி அமைச்சின் செயலாளர் ஒப்புக் கொண்டால், சம்பந்தப்பட்ட மாகாணத்திற்கு அது குறித்து அறிவிக்க வேண்டும். ஆசிரியர் அந்தந்த மாகாணத்திலிருந்து விடுவிக்கப்பட்டவுடன், பணிப்பாளர் / ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பாக தேசிய பாடசாலைக்கு ஒரு இடமாற்றல் கடிதத்தை வெளியிடும்

தேசிய பாடசாலைகளில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை இடமாற்றல்.


* தற்காலிக அடிப்படையில் ஆசிரியர் இடமாற்றம் வழங்கப்படுவது பின்வரும் நிபந்தனைகளுக்கு மாத்திரம்

- பிள்ளைப்பேற்றை எதிர்பார்க்கும் குறித்த ஆசிரியையின் வீடடிற்கும் பணிபுரியும் இடத்திற்கும் தூரம் அதிகமாயின் வதிவிடத்திற்கு அண்மையிலுள்ள தேசிய பாடசாலைக்கு இடமாற்றம் பெற முடியும்.

- இந்த வசதி பெற, அந்தந்த ஆசிரியைகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை மருத்துவ பதிவேட்டுடன் (கர்ப்பப் பதிவு அட்டை) சமர்ப்பிக்க வேண்டும்.

குறிப்பு:

Organizing and implementation of school based agricultural programs according to the national agricultural policies


1. பிரசவத் திகதியிற்கு கிட்டிய 3 மாதங்களுக்கு இடமாற்றம் வழங்கப்படும்.

2. இருப்பினும், அந்த ஆசிரியை மற்றும் குழந்தையின் சுகாதார நிலைமையை பொறுத்து பிள்ளை ஒரு வயதை அடையும் வரை தற்காலிக அடிப்படையில் ஒரு ஆண்டு இணைப்பிற்கு விண்ணப்பிக்கலாம். மருத்துவ அறிக்கைகள், குழந்தை பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் இணைக்கப்பட வேண்டும்

பார்வை மற்றும் பணி

தூரநோக்கு

கல்வியினூடாக எண்சார் நிகர்நிலையை ஏற்படுத்தல்

பணிக்கூற்று

தகவல் தொடர்பாடல் தொழினுட்பக் கல்வியினூடாக அறிவு அடிப்படையிலான சமூகம்

கிளையினுடைய பணிகள்

தகவல் தொடர்பாடல் தொழினுட்ப கொள்கைகளை சிபாரிசு செய்தல்

தகவல் தொடர்பாடல் தொழினுட்ப ஆசிரியர்களை கல்வி முறைமைக்குள் ஆட்சேர்ப்பு செய்தல்

தேசிய கல்வியற்கல்லூரி மாணவர்களினுடைய அறிவினை வலுவூட்டுதல்

அனைத்துப்பாட அபிவிருத்தி செயற்பாடுகளையும் எடுத்துக்காட்டாக கலைத்திட்ட தயாரிப்பு , திறன்விருத்தி செயற்பாடு , பாடநூல்தயாரிப்பு போன்றவற்றினை இணைப்பாக்கம் செய்தல்

தகவல் தொடர்பாடல் தொழினுட்பபாட விருத்திக்காக தேவையான பௌதீக , மனித வளங்களை செயற்படுத்தல்

”தகவல் தொடர்பாடல் தொழினுட்ப பாசாலை வெற்றியாளர்களை” தேசியமட்ட போட்டிகளை நடைமுறைப்படுத்தல்

பாடசாலை முறைமையினுள் இலத்திரனியல் கற்றல் செயற்பாடுகளை அறிமுகம் செய்து விருத்தி செய்தல்- இந்த நோக்கத்திற்காக பாடரீதியான மென்பொருட்களை உருவாக்கலும் ”e-thaksalawa" போன்ற கற்றல் உள்ளடக்க முகாமைத்துவ முறைகளை நடைமுறைப்படுத்தல்

பாடசாலை தகவல் தொடர்பாடல் தொழினுட்ப நிலையங்களை விருத்தி செய்தல்

பாடரீதியான இலத்திரனியல் உள்ளடக்கங்களை விருத்தி செய்தல்

பாடசாலை தகவல் தொடர்பாடல் தொழினுட்ப நிலையங்களை விருத்தி செய்தல்

பாடசாலை மட்டத்தில் தகவல் தொடர்பாடல் தொழினுட்ப பாடத்தை மேற்பார்வை செய்தலும் மதிப்பிடலும்

தகவல் தொடர்பாடல் தொழினுட்ப முகவருடன் (ICTA) உயர்மட்ட இணைப்பை ஏற்படுத்தல்

தகவல் தொடர்பாடல் தொழினுட்ப வணிக வெளிவழங்கல் செயற்பாடுகளை பாடசாலை மாணவர்களுக்கு ICTA நிறுவனத்தினுடைய பங்களிப்புடனும் தனியார்துறை நிறுவனங்களுடைய பங்களிப்புடனும் மேற்கொள்ளல்

உரிமம் பெறப்படாத மென்பொருள் பாவனையினை கட்டுப்படுத்துவதற்காக திறந்த இலவச மென்னெபாருள் பாவனையினை ஊக்கப்படுத்தல்

வன்பொருள் வலையமைப்பு தீர்வு அணியினரின் உதவிடன் பாடசாலை கணினி ஆய்வுகூடங்களிலுள்ள கணினிகளையும் உபகரணங்களையும் பராமரித்தல்

வன்பொருள் வலையமைப்பு தீர்வு குழாம் மூலம் பாடசாலை மட்ட வன்பொருள் வலையமைப்பு தீர்வு அணியினரை வலுவூட்டலும் மேற்பார்வை செய்தலும்

விசேட செயற்றிட்டங்களை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்தில் பொருத்தமான நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து நடாத்துதல்

பாடசாலையிலிருந்து விலகும் மாணவர்களுக்காக தகவல் தொடர்பாடல் தொழிநுட்பபாட செயற்றிட்டங்களை திட்டமிடலும் அவர்களது தொழிற்சந்தை தேவைகளுக்காக தயார்ப்படுத்தலும்

மாகாண, வலயக்கல்வி அலுவலகங்களுக்கு தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப உட்கட்டமைப்பு வசதிகளையும் மனித வளங்களினையும் விருத்தி உதவி செய்தல்

கிளையினுடைய பணிகள்

கல்வியமைச்சினுடைய வலையமைப்பை பராமரித்தல்

மாகாண ,வலய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிலையங்களை மேற்பார்வை செய்தல்

அலகினுடைய தொழிற்பாடுகள்

TOP