சம்பிரதாய கல்வியைப் போலவே தொழிற்துறைக் கல்விக்கும் எமது அரசாங்கம் சமமான முன்னுரிமையை வழங்குகிறது-கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்
Friday, 16 July 2021
சம்பிரதாய கல்வி முறைமையை மேம்படுத்துகின்ற அதேவேளை திறன்கள் அபிவிருத்தி தொடர்பிலும் அரசாங்கம் கூடுதல் கவனத்தினை செலுத்துகின்றதெனவும் சம்பிரதாய பல்கலைக்கழகங்களையும் அபிவிருத்தி செய்வதோடு தொழிற் பயிற்சியினை இரண்டாம் நிலைத் தேவையாக கருதாமல் சகல தரப்பினரதும் எதிர்காலத்திற்கு நேரடியாக தாக்கத்தினை ஏற்படுத்துகின்ற ஒரு விடயமாகவே தற்போதைய அரசாங்கம் கருதுகின்றதெனவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். ஒருகொடவத்தை, கைத்தொழில் ஒத்துழைப்பு பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி நிலையத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ‘தொலைத்தொடர்பு தொழில்நுட்ப கற்கை’ பாடநெறியினை ஆரம்பித்து வைக்கும்
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
No Comments
பாடசாலைகளை ஆரம்பிக்கும் வேலைத்திட்டம் கண்டிப்பாக ஆகஸ்ட் மாதம் இடம்பெறும்.
Wednesday, 14 July 2021
-கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சுகாதாரப் பிரிவினரின் உடன்பாடுகளுக்கமைவாக படிமுறை படிமுறையாக கூடியளவு சீக்கிரம் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது எனவும் அதன் முதற் கட்ட நடவடிக்கைகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். 2021/07/12 ஆம் திகதி ‘நாட்டின் சகல ஆசிரியர்களுக்குமான தடுப்பூசி வழங்கும் நாடு தழுவிய வேலைத்திட்ட’ ஆரம்ப நிகழ்வில் இணைந்து கொண்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஆசிரியருடன் வகுப்பறையில் பெற்றுக்கொள்கின்ற கல்விக்கு பதிலாக மகழ்ச்சிகரமான
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
இணையவழி வசதிகள் இல்லாத பிள்ளைகளுக்காக ‘பிரதேச கற்றல் நிலையங்கள்’ நிறுவப்படும்-அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்.
Tuesday, 22 June 2021
கொவிட் தொற்று நோய் நிலைமை காரணமாக தற்போது பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் இணையவழி தொலைக்கல்வி வழிமுறையினூடாக இடம்பெறுகின்ற போதிலும் பல்வேறான காரணங்களால் அந்த வசதிகளைப் பெறமுடியாத மாணவர்களுக்காக “பிரதேச கற்றல் நிலையங்களை” நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். 2021/06/21 ஆம் திகதி நாராஹேன்பிட்ட அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இணைந்து கொண்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், கொவிட் –
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
பாடசாலை மாணவர்களது சுகாதார பாதுகாப்பு தொடர்பில் முன்னுரிமையளித்து மிக விரைவில் பாடசாலைகளை திறப்பதே அரசாங்கத்தின் அபிலாஷையாகும்
Thursday, 17 June 2021
அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் பாடசாலை மாணவர்களது சுகாதார பாதுகாப்பு தொடர்பில் முன்னுரிமையளித்து மிக விரைவில் பாடசாலைகளை திறப்பதே அரசாங்கத்தின் அபிலாஷையாகும் எனவும் அதன் முதன்மை நடவடிக்கையாகவே தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இடம்பெறுகின்றதெனவும் அண்ணளவாக 279,020 தடுப்பூசிகள் இதற்கென அவசியம் எனவும் அவ்வாறு பாடசாலைகளை திறக்கின்ற போது ஏற்படக் கூடிய பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்தரையாடப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான பின்னணியை படிப்படியாக உருவாக்குவது தொடர்பில் கல்வி அமைச்சில்
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
சீரற்ற காலநிலையால் பாடசலை பாடப்புத்தகங்களை இழந்த பிள்ளைகளுக்கு புதிதாக புத்தகங்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் – கல்வி அமைச்சு
Thursday, 10 June 2021
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாடப் புத்தகங்களை இழந்த பிள்ளைகளுக்கு புதிதாக புத்தகங்களை பெற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தினை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார். 2021/06/08 ஆம் திகதி கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மேற்படி பிள்ளைகள் தமது பாடசாலையின் அதிபருக்கு இது தொடர்பில் அறிவித்ததன் பின்னர் அதிபர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் அல்லது வலயக்
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
விசேட நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நுகேகொட விஜயாராம வித்தியாலயம் ஆங்கில மொழி ஊடகத்தில் கல்வி கற்பிக்கப்படும் பாடசாலையாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை.
Sunday, 06 June 2021
கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பேரேரா நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் ஆங்கில ஊடக மொழி மூலமாக கல்வியை வழங்குவதற்குரியதாக கல்வி அமைச்சினால் தற்போது நியமிக்கப்பட்டுள்ள விசேட நிபுணர் குழுவின் பரிந்துரைகளைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் மாதிரி கருத்திட்டமாக அவ்வாறான பாடசாலைகளை மாகாண மட்டத்தில் ஆரம்பிப்பதற்கும் அதன் சாதகமான நிலைமையினை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் அந்த வசதிகளை பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார். இதன்போது மேலும்
- Published in Ministry News, Uncategorized @ta, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
டிஜிட்டல் கொள்கைக்கமைவாகExams Sri Lanka-DOE (Mobile-App) செயலி செயற்படுத்தப்படும்-அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்
Wednesday, 26 May 2021
அரசாங்கத்தின் டிஜிட்டல் கொள்கைக்கமைவாக பாவனையாளருக்கு மிகச்சிறந்த கையடக்கத் தொலைபேசி செயலியை (Mobile-App) (மூன்று மொழிகளையும் கொண்டதாக) Exams Sri Lanka-DOE என்ற பெயரில் அறிமுகம் செய்வதனூடாக பரீட்சைகள் திணைக்களத்துடன் தொடர்புடைய சகல சேவைகளையும் வீட்டிலிருந்தவாறே கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டின் மூலமாக மேற்கொள்வதற்கான வசதிகளை ஒட்டுமொத்த மக்களுக்கும் பெற்றுக் கொடுப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். மேற்படி கையடக்கத் தொலைபேசி செயலியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றதோடு, அதில் பங்குபற்றிய போதே அமைச்சர்
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
புதிய மறுசீரமைப்பினூடாக 08 மாதங்களுக்கு முன்னதாக பாடசாலைக் கல்வியை நிறைவு செய்து உயர்கல்வியைப் பெறுவதற்கான சந்தர்ப்பம் இந்நாட்டுப் பிள்ளைகளுக்கு பெற்றுக்
Wednesday, 12 May 2021
கொடுக்கப்படும்கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்.கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பின்னர் பிள்ளைகள்கல்வி நடவடிக்கைகளை விட்டு விலகி வீட்டில் இருக்கின்ற 08 மாதகாலப்பகுதியையும் உயர் தரப் பரீட்சையின் பின்னர் வீட்டை விட்டு விலகிஇருக்கின்ற காலப்பகுதியையும் குறைப்பதன் மூலமாக முழுமையான 08 மாதகாலப்பகுதியை அப்பிள்ளைகளின் பெறுமதியான வாழ்க்கையில் சேமித்துகொடுக்கும் வகையில் 2022/2023 காலப்பகுதியில் உரிய திட்டங்களைநடைமுறைப்படுத்த முடியுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்அவர்கள் தெரிவித்தார். 2021/05/10 ஆம் திகதி பத்தரமுல்லை நெலும்மாவத்தையில் இடம்பெற்ற ஊடக
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று எதிர்வரும் புதன்கிழமை நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது-
Wednesday, 12 May 2021
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்.எதிர்வரும் புதன்கிழமை இலங்கையின் பிரதான மருத்துவர்கள், கல்விசார் புத்திஜீவிகள்உட்பட உரிய தரப்பினரை சந்திக்க எதிர்பார்ப்பதாகவும் அதன் போது பாடசாலைகள்,பிரிவெனாக்கள், பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பது தொடர்பிலானஆலோசனைகளைப் பெறவிருப்பதாகவும் அதனடிப்படையில் பாடசாலைகளை திறப்பதுதொடர்பான தீர்மானத்தினை மேற்கொள்ளவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர்ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். 2021/05/09 ஆம் திகதி அநுராதபுரம் ஜயந்திவிகாரை, ருவன்வெலிசாய, லங்காராமய ஆகிய முப்பீட விகாரைகளின் சங்கைக்குரியதலைமைத் தேரர்களை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதேஅமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.தற்போது நாட்டில் வாரா வாரம்
- Published in Ministry News, Uncategorized @ta, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும். கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்
Thursday, 29 April 2021
க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபெறுகளை இன்றிலிருந்து 07 நாட்களுக்குள் அதாவது ஒரு வாரத்திற்குள் வெளியிட முடியுமென கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,கடந்த வருடம் நவம்பர் மாத முதலாம் வாரத்தில் உயர்தரப் பரீட்சை நடாத்தி முடிக்கப்பட்டது. 362,000 மாணவ மாணவியர் இப்பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். கடந்த நாட்களில் பரீட்சை விடைத்தாள் திருத்துபவர்கள், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் உட்பட சகல அதிகாரிகளினது அர்ப்பணிப்பின்
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்