2022 ஜூன் 27 முதல் ஜூலை 01 வரையிலான வாரத்தில் பாடசாலைகளை நடாத்துவது தொடர்பான திருத்தப்பட்ட அறிவிப்பு
Monday, 27 June 2022
மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் நகர்ப்புற தேசிய பாடசாலைகளின் அதிபர்களுடன் நடாத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து 2022 ஜூன் 27 முதல் ஜூலை 01 வரையிலான வாரத்தில் பாடசாலைகளை நடாத்துவது பற்றிய தகவல் 2022 ஜூன் 25 ஆம் திகதி கல்வி அமைச்சினால் ஊடக அறிவிப்பினூடாக வெளியிடப்பட்டது. அவ்வாறு இருந்தபோதிலும் அதற்கு பின்னர் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு 2022 ஜூன் 27 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் வாரத்தினுள் நாட்டில் எரிபொருள் விநியோகத்தினை
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
No Comments
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவருக்கும் கல்வி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு.
Monday, 27 June 2022
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி (Mizukoshi Hideaki) மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த ஆகியொருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று (24) இசுறுபாய, கல்வி அமைச்சில் இடம்பெற்றது. ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான சர்வதேச உறவுகள், நமது நாட்டின் தற்போதைய கல்வித் துறை மற்றும் கல்வித் துறையில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து இந்தக் கலந்துரையாடலின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் கல்வி கற்கும் மாணவர்கள் ஜப்பான் மொழியைக் கற்பதன் முக்கியத்துவம் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. புதிய
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் பாடசாலை விடுமுறைகளைக் குறைத்து மாணவர்களுக்கு அவர்கள் இழக்கும் கல்விப் பருவங்களை உள்ளடக்குவதற்காக விசேட திட்டம் …
Wednesday, 22 June 2022
– கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் பாடசாலை விடுமுறைகள் குறைக்கப்பட்டு, பாடசாலைகள் நடைபெறும் நாட்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அவ்வாறு அதிகரிக்கும் மேலதிக தினங்களில் இந்த காலப்பகுதியில் விடுபட்ட அனைத்து பாடத்திட்டங்களையும் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் தெரிவித்தார். இன்று (2021.06.21) அனுஷ்டிக்கப்படுகின்ற சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் உரையாற்றும் போதே
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
தற்போது நிலவும் போக்குவரத்து சிரமங்கள் காரணமாக ஆசிரியர்களுக்கு நிவாரணங்களை வழங்குதல்
Tuesday, 21 June 2022
தற்போது நிலவும் போக்குவரத்து சிரமங்கள் காரணமாக ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்குதல் பின்வரும் நிபந்தனைகளின் கீழ் ஆசிரியர்களின் வேண்டுகோள்களை கவனத்திற் கொண்டு வசதியான பாடசாலைகளில் கற்பிப்பதற்காக தற்காலிக சேவை இணைப்பினை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இந்த இணைப்புகள் 2022.12.31 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்பதுடன் அனைத்து வகையிலுமான இணைப்புப் பணிகளும் பாடசாலையின் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளில் பாதிப்பினை ஏற்படுத்தாத வகையில் சம்பந்தப்பட்ட இரண்டு பாடசாலைகளினதும் அதிபர்களின் எழுத்துமூலமான இணக்கப்பாட்டுடன் மாத்திரமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன் அதன்போது கீழ்வரும் நிபந்தனைகளை
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
2022 ஜூன் 20-24 வாரத்தினுள் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளல் தொடர்பாக
Tuesday, 21 June 2022
கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாகாண கல்வி அதிகாரிகளுடன் 2022.06.18 ஆம் திகதி நிகழ்நிலை தொழில்நுட்பத்தினூடாக நடாத்தப்பட்ட கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 2022.06.20 ஆம் திகதி முதல் 2022.06.24 ஆம் திகதி வரையான வாரத்தினுள் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை கீழ் குறிப்பிடப்படும் வகையில் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் மூலமாக மாகாணங்களின் வலயக் கல்வி மற்றும் கோட்டக் கல்விப் பணிப்பாளர்களிடமிருந்தும் அதிபர்களிடமிருந்தும் பெறப்பட்ட கருத்துக்கள் இத்தீர்மானங்களை மேற்கொள்ளும் போது கவனத்தில் கொள்ளப்பட்டன. 1.
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
2023 அரசாங்க பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர் அனுமதித்தல் விண்ணப்பங்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Monday, 20 June 2022
2023 ஆம் ஆண்டுக்காக மாணவர்களை முதலாம் தரத்திற்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள்மற்றும் ஏற்பாடுகள் உள்ளடங்கிய அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கல்வி அமைச்சின்உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk எனும் இணையத்தளத்திற்குச் பிரவேசித்துமேற்படி தகவல்களையும் விண்ணப்பங்களையும் பெற்றுக்கொள்ள முடியும். இதற்குரியதான அறிவுறுத்தல் படிவம் மற்றும் விண்ணப்பப் படிவம் இத்துடன்அனுப்பப்பட்டுள்ளது.
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் பிள்ளைகளின் கல்விக்கு இடையூறு ஏற்படாத வகையில் உயர் கல்வி மூலோபாயத் திட்டத்தை எதிர்வரும் காலத்திலும் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்தும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளும் ஒப்பந்தங்கள் மூலம் புதிய சர்வதேச உறவுகளை உருவாக்கி இந்நாட்டில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் தொடர்பிலும் இன்று (2022 மே 24) உயர்கல்வி அமைச்சின் அதிகாரிகளுடனான சந்திப்பைத் தொடர்ந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே கல்வி அமைச்சர் கலாநிதி
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த,
Monday, 06 June 2022
கல்வியானது முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டிய அதேவேளை, முன்பள்ளியில் இருந்தே அந்த முழுமையான மாற்றத்தினை ஏற்படுத்தி மாணவர்களுள் ஒரு தரப்பினர் உயர்கல்வித் துறையிலும், திறமையான மற்றும் ஆற்றல்மிக்க மற்றொரு தரப்பினர் தொழிற்கல்வியிலும் நுழையும் வகையில் கல்வி முறைமையே மாற்றியமைக்கப்பட வேண்டுமென கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் தெரிவிக்கின்றார். மாணவர்களைத் இவ்விரண்டு பிரிவுகளுக்கும் தெரிவு செய்கின்ற போது தொழில்சார் திறன்களை வெளிப்படுத்தும் மாணவர்களை தரம் 09 இலிருந்தே தெரிவு செய்து தொழிற்கல்வித் துறையில் நுழைய வைப்பதன்
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
கல்வித்துறையில் அவசரமாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் எதிர்வரும் டிசெம்பர் மாதமளவில் நிவர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Monday, 06 June 2022
கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தபரீட்சைகளை நடாத்துதல், பெறுபேறுகளை வெளியிடுதல், பாடப்புத்தகங்களை விநியோகித்தல், பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களைஅனுமதித்தல் போன்ற உரிய காலத்திற்கு இடம்பெறவேண்டியகல்வித்துறையின் செயற்பாடுகளை எதிர்வரும் டிசெம்பர் மாதமளவில்மீளமைக்கப்பதற்கு எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில்பிரேமஜயந்த அவர்கள் தெரிவித்தார். இன்றைய தினம் (25) கல்விச்செயலாளராக எம். நிஹால் ரணசிங்க அவர்கள் தமது கடமைகளைப்பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வில் இணைந்துகொண்ட போதே அமைச்சர்இதனைத் தெரிவித்தார்.அங்கு மேலும் உரையாற்றிய அமைச்சர், இவ்வாறான இக்கட்டானபொருளாதார சூழ்நிலையில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவதுடன்பிரிவேனா பிரிவின் பணிகளை
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
2022.05.31 நேற்று மழையுடன் கூடிய வானிலையில் க.பொ.த சா/த பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களைப் பற்றி சமூக வலைத்தளங்களிலும் நாளிதழ் ஒன்றிலும் வெளியான புகைப்படம் தொடர்பில்
Monday, 06 June 2022
கம்பஹா வலயத்திலுள்ள பாடசாலையொன்றின் பரீட்சை மண்டபத்தில்நேற்று (2022.05.31) க.பொ.த சாதாரண தர மாணவர்கள் சிரமங்களுக்குமத்தியில் பரீட்சைக்குத் தோற்றியதாக சமூக வலைத்தளங்களிலும் நாளிதழ்ஒன்றில் வெளியான புகைப்படம் ஒன்றிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக பரீட்சைகள் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்றதகவல்களின் அடிப்படையில் இந்த மண்டபத்தை பரீட்சை மண்டபமாகதெரிவு செய்தமையும் மழையுடனான காலப்பகுதியில் மண்டபத்தைமாற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்காமையும் இந்த நிலைமையைபரீட்சைகள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தி உரிய ஆலோசனைகளைப்பெற்றுக்கொள்ளாமை ஆகிய காரணிகள் தொடர்பில் பரீட்சைகள்திணைக்களத்தினால் விசாரணைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கைஎடுப்பதற்கும் எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைகள்ஏற்படாதிருப்பதற்காக பொருத்தமான நடவடிக்கைகளைமேற்கொள்வதற்கும்
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்