தேசிய கல்வியியற் கல்லூரிகளில் நுழைவதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன…
Wednesday, 20 March 2024
2021/2022 கல்வியாண்டின் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு பயிலுநர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்களைக் கோருவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் 2024.03.15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 2376 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை தொடரறா (Online) முறையின் மூலம் சமர்ப்பித்தல் வேண்டும் என்பதுடன் தகைமையானவர்களைத் தெரிவு செய்வதும் இம்முறை தொடரறா வழிமுறையூடாகவே நடைபெறும். 2024.03.15 ஆம் திகதி மதியம்
- Published in 690, 697, Ministry News, செய்தி
No Comments
அதிக வெப்பமான வானிலை மேலும் அதிகரிக்கலாம் என்பதால் இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய நாட்களில் அதிக வெப்பநிலை நிலவும் வேளைகளில் பாடசாலை மாணவர்களை திறந்தவெளியில் வைத்திருப்பதை தவிர்க்கவும்.
Thursday, 29 February 2024
– கல்வி அமைச்சின் அறிவுறுத்தல்கள் இந்நாட்களில் சுற்றுச்சூழலில் நிலவுகின்ற அதிக வெப்பநிலை மேலும் அதிகரிக்க கூடும் என கிடைக்கப்பெற்றுள்ள தகவலின்படி, இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் (பெப்ரவரி 28, 29 மற்றும் மார்ச் 01) நாட்டிலுள்ள எந்தவொரு பாடசாலையிலும் மாணவர்களை வெளிப்புற விளையாட்டுப் பயிற்சி நடவடிக்கைகள், விளையாட்டு விழாக்ககள் அல்லது வேறு வெளிவாரிச் செயற்பாடுகளில் ஈடுபடவைப்பதனைத் தவிர்க்குமாறு அனைத்துப் பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பில் அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவிக்கும் வகையில் அதற்குரியதான
- Published in 690, 695, 697, Ministry News, செய்தி, மாணவர்கள் செய்திகள்
2024 ஆம் ஆண்டிற்காக 1, 5, 6 ஆம் வகுப்புகளுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கு கல்வி அமைச்சினால் கடிதங்கள் வழங்கப்பட மாட்டாது.
Monday, 19 February 2024
2024 ஆம் ஆண்டிற்காக 1, 5, 6 ஆம் வகுப்புகளுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கு கல்வி அமைச்சினால் கடிதங்கள் வழங்கப்பட மாட்டாது. பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்பதுடன் அதிபர்களால் நேர்முகப்பரீட்சைகள் நடாத்தப்பட்டு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் இடம்பெறும். பாடசாலைகளுக்கு ஆறாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையானது ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் புள்ளிகளின் அடிப்படையில் மாத்திரம் மேற்கொள்ளப்படுகிறது. 2024
- Published in 690, 697, Ministry News, செய்தி
2023 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் மேன்முறையீட்டு விண்ணப்பங்களை இணையவழியூடாக இப்போது சமர்ப்பிக்க முடியும்
Monday, 12 February 2024
கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களை 2024 ஆம் ஆண்டில் தரம் 6 இற்கு இணைத்துக் கொள்வது தொடர்பிலான மேன்முறையீகளை 2024.02.13 ஆம் திகதி தொடக்கம் 2024.02.29 ஆம் திகதி வரையில் இணையவழியூடாக (Online) இப்போது சமர்ப்பிக்க முடியும். கல்வி அமைச்சின் www.moe.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையதளத்திற்கு பிரவேசித்து ஆகக் கூடுதலாக மூன்று பாடசாலைகளுக்கான மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க முடியும் என்கின்ற அதேவேளை http://g6application.moe.gov.lk/#/ என்ற நீட்டிப்பினூடாக நேரடியாகவே
- Published in 690, 697, Ministry News, செய்தி
எதிர்வரும் ஜூன் மாதமளவில் உயர்தர வகுப்புகளைக் கொண்ட 3,000 பாடசாலைகள் டிஜிட்டல்மயப்படுத்தலுக்கு…
Friday, 09 February 2024
நாட்டிலுள்ள சகல மாணவர்களுக்கும் கல்வியில் சமமான வாய்ப்புகளை வழங்குவதே கல்வி அமைச்சின் நோக்கமாகும் எனவும், அதன் ஒரு நடவடிக்கையாக எதிர்வரும் ஜூன் மாதமளவில் நாட்டில் உயர்தர வகுப்புகளைக் கொண்ட பாடசாலைகள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் எனவும், அதன்போது புதிய தொழில்நுட்பத்துடன் நேரடியாக இணைந்து கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பினை பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுக்க முடியுமென கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் தெரிவித்தார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இன்று (05) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே
- Published in 690, 695, 697, Ministry News, செய்தி, மாணவர்கள் செய்திகள்
அதிபர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு – அமைச்சின் குழு அறிக்கை வெளியிடப்பட்டது
Monday, 29 January 2024
அதிபர் சேவையில் இதுவரையில் தீர்க்கப்படாது நிலவிவந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் மேற்படி சேவையின் தொழில்சார் தன்மையை மேம்படுத்தி கல்விச் சீர்திருத்தங்களுக்கு பொருந்தும் வகையில் அபிவிருத்திச் செய்வதற்கும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்களினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் மிக முக்கியமான ஆறு விடயங்களூடாக பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து அதற்குரியதான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதிபர் சேவையினை அங்கீகரிக்கப்பட்ட ஒரு தொழிலாக மேம்படுத்துதல், அதிபர் சேவைக்கான தேசியக் கொள்கையைத் தயாரித்தல், சேவைப் பிரமாணங்களைத் திருத்தியமைத்து
- Published in 690, 697, Ministry News, செய்தி
ஊடக அறிவித்தல்
Friday, 26 January 2024
பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தின் பிரகாரம் விண்ணப்பங்களை பாடசாலைகளுக்கு சமர்ப்பிக்க வைக்க வேண்டும் என்பதுடன் அதிபர்களினால் நேர்முகப்பரீட்சை நடாத்தப்பட்டு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் செயற்பாடுகள் இடம்பெறும். பாடசாலைகளில் ஆறாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளல் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மாத்திரமே மேற்கொள்ளப்படும். 2024 ஆம் ஆண்டில் தரம் 1, 5 மற்றும் தரம் 6 ஆகியவற்றைத் தவிர ஏனைய இடைநிலை வகுப்புகளுக்கு க.பொ.த.
- Published in 690, 697, Ministry News, செய்தி
பாடசாலை வகுப்பறையில் தங்கியிருக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் பரீட்சைக்கான புள்ளிகள் வழங்கப்பட மாட்டாது.
Friday, 13 October 2023
பெற்றோர்கள் தாங்கமுடியாத அளவிற்கு கஷ்டப்பட்டு தமது பிள்ளைகளை மேலதிக வகுப்புகளுக்கு அனுப்புவதாயின் பாடசாலைகள் இருப்பதில் எந்த பயனும் இல்லை -கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த புதிய கல்வித்திட்ட மறுசீரமைப்புச் செயல்பாட்டில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையினைப் போன்று நான்கு மற்றும் ஐந்து ஆகிய இரு தரங்களில் வகுப்பறையில் தங்கியிருந்து பெற வேண்டிய நிச்சியமான புள்ளிகளின் அளவொன்று இருப்பதால்இ எதிர்காலத்தில் பாடசாலை வகுப்பறையில் தங்கியிருப்பது அவசியமானதாகும் என்பதுடன் சகல தரங்களுக்கும் இவ்விடயம் ஏற்புடையது எனவும் மாணவர்கள் பரீட்சைகளில் சித்தி
- Published in 690, 691, 695, 697, Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்