விசேட அறிவித்தல்
புதன்கிழமை, 31 மே 2023
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் எந்தவொரு பாடசாலைக்கும் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியினுள் வெளித்தரப்பினர் உள்நுழைவது தடையென்பதுடன், பரீட்சைக்குரிய ஆவணங்களைத் தவிர வேறெந்தவொரு ஆவணத்தையும்/ பத்திரத்தையும் மாணவர்களிடத்தில் பகிர்ந்தளித்தல் செய்யப்படலாகாது எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அவர்கள் அறிவித்துள்ளார்.
- Published in Academics Special Notices, Ministry News, Ministry Special Notices, Parents Special Notices, Special Notices, Students Special Notices, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
No Comments
7,800 கல்வியியற் கல்லூரி ஆசிரியர்கள் எதிர்வரும் ஜுன் 15 ஆம் திகதி தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு
புதன்கிழமை, 31 மே 2023
2024 ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சை ஆகிய இரண்டையும் ஒரே வருடத்தினுள் நடாத்தி பரீட்சை கால அட்டவணையை இற்றைப்படுத்துவோம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அடுத்த வருடம் சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய இரண்டு பரீட்சைகளையும் ஒரே வருடத்திற்குள் நடாத்தக்கூடிய வகையில் நடவடிக்கைகளை படிப்படியாக யதார்த்த நிலைக்கு இட்டுச் சென்று பரீட்சை கால அட்டவணையை இற்றைப்படுத்துவதாகவும் 7,800 கல்வியியற் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஜுன் 15 ஆம் திகதி நியமனங்களை
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
கலாநிதி சுசில் பிரேமஜயந்த மற்றும் உலக வங்கியின் உலகளாவிய கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இலன்டன் நகரில் இடம்பெற்றுள்ளது.
செவ்வாய்க்கிழமை, 23 மே 2023
உலக நாடுகளின் கல்வி அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதி அதிகாரிகளின் பங்கேற்புடன் லண்டன் நகரில் இடம்பெறுகின்ற உலக கல்வி மாநாட்டில் (2023) பங்கேற்றுள்ள கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் உலக வங்கியின் உலகளாவிய கல்விப் பணிப்பாளர் ஜெமி சாவேத்ரா (Jaime Saavedra) அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது உலகளாவிய ரீதியில் ஏனைய நாடுகளில் காணப்படுகின்ற புதிய கல்விக்கான சந்தர்ப்பங்கள் தொடர்பிலும் அத்துடன் இந்நாட்டின் கல்வித் துறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பிலும் மிகக்
மீபே தெற்காசிய பயிற்சி அபிவிருத்தி நிறுவனத்தில் இருநூறு மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட விடுதிக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது
செவ்வாய்க்கிழமை, 23 மே 2023
மீபே தெற்காசிய பயிற்சி அபிவிருத்தி நிறுவனத்தில் இருநூறு மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட விடுதிக் கட்டிடம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் ஆகியோரின் தலைமையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது. மேற்படிக் கட்டிடத்தில் 52 அறைகள் காணப்படுவதுடன் சர்வதேச தரங்களுக்கமைவாக சகல வசதிகளையும் கொண்டதாக இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்விற்கு போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே
தொழிலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களின் கனவை நனவாக்கும் ‘Sri Lanka Skills Expo 2023’ கண்காட்சி சிறிமாவோ பண்டாரநாயக்க கண்காட்சி வளாகத்தில் நாளை ஆரம்பமாகும்.
வியாழக்கிழமை, 11 மே 2023
தொழிலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களின் கனவை நனவாக்கும் ‘Sri Lanka Skills Expo 2023’ கண்காட்சி 2023 மே மாதம் 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தின் சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி வளாகத்தில் நடைபெறுவதோடு அதன் ஆரம்ப நிகழ்வு நாளை முற்பகல் 9.00 மணிக்கு மேன்மைதங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த ஆகியோரின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. மேற்படிக் கண்காட்சி
- Published in 690, 691, 695, 697, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
நாட்டில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரிய வெற்றிடங்கள் தொடர்பாக கல்விமானி பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச்செய்தல.
வியாழக்கிழமை, 06 ஏப்ரல் 2023
2023 ஆம் ஆண்டு தொடர்பாக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டு வரம்பிற்குள் நிர்வகிப்பதற்குரியவாறு சப்ரகமுவ, வடமத்திய, வடமேல்,மேல், தென் மற்றும் வடமாகாண சபைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பாக கல்விமானி பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதுமேலும் 2023 ஆம் ஆண்டு தொடர்பில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் போதாமையினால் மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்காக கல்விமானி பட்டதாரிகளை இலங்கை ஆசிரிய சேவையில் ஆசிரிய வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்புச் செய்வதற்காக அனுமதி வழங்கப்படவில்லை.
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
இந்நாட்டின் பாடசாலை மதிய உணவு நிகழ்ச்சித்திட்டத்தினை கண்காணிப்பதற்கு அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் கல்வி அமைச்சர் சுசில் ஆகியோர் எம்பிலிபிட்டிய குருஆரகம வித்தியாலயத்திற்கு விஜயம்
புதன்கிழமை, 22 மார்ச் 2023
வகுப்பறையினுள் முறையான கல்வியைக் கொண்டதாக மிகச் சிறந்த கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் பாடசாலை போசாக்கு நிகழ்ச்சித் திட்டத்தின் பயன்களை கூடுதல் எண்ணிக்கையிலான பாடசாலை பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு அமெரிக்க அரசு அனுசரணை வழங்கியுள்ள அதேவேளை, மேற்படி பாடசாலை மதிய உணவு நிகழ்ச்சித் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்க் (Julie Chung) அவர்கள் எம்பிலிபிட்டிய, கல்வங்குவ, குருஆரகம வித்தியாலயத்திற்கான கண்காணிப்பு
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
Cut-off marks determined by schools for Grades 2023-6 based on the results of the Grades-5 scholarship test
புதன்கிழமை, 22 மார்ச் 2023
Cut-off marks determined by schools for Grades 2023-6 based on the results of the Grades-5 scholarship test
விசேட அறிவித்தல்.
புதன்கிழமை, 22 மார்ச் 2023
நாட்டிலுள்ள அனைத்து தேசிய பாடசாலைகளிலும் பத்து வருட மற்றும் வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின்படி, கீழ்வரும் காரணங்களுக்கமைவாக விசேட மேன்முறையீடுகளுக்கு உட்பட்ட ஆசிரியர்களைத் தவிர ஏனைய இடமாற்றங்கள் 2023.04.17 தொடக்கம் நடைமுறைக்கு வரும். க.பொ.த (சா/த) மற்றும் (உ/த) வகுப்புக்களில் கற்பிக்கும் ஆசிரியர்களின் இடமாற்றம் காரணமாக பிள்ளைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமாயின் அது தொடர்பில் அதிபரினூடாக முன்வைக்கப்படும் மேன்முறையீடுகள் விசேட மேன்முறையீட்டுக் குழுவினூடாக மீள ஆராயப்படும். இதுவரையில் வழங்கப்பட்டுள்ள சகல தற்காலிக இணைப்புகள் 2023.06.30
பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்தித்து பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டற்கு வாருங்கள
செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2023
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டாளர்களிடம் கோரிக்கை – உயர் தர விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் காலதாமதம் அடைவதால் சாதாரண தரப் பரீட்சையும் தாமதமடையலாம் 40 இலட்சம் மாணவர்களின் உரிமைகளைப் பற்றி யாரும் கதைப்பதில்லை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உயர்தரப் பரீட்சையை வெற்றிகரமாக நடாத்தி முடித்த போதிலும் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இரண்டு வாரங்கள் தாமதமாகியுள்ள காரணத்தினால் பொதுவாக இரண்டு பரீட்சைகளுக்கிடையில் காணப்பட வேண்டிய சுமார் மூன்று மாத கால இடைவெளி
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்