சமகால கொவிட் 19 பரவல் தொடர்பாக கல்வி அமைச்சு தீவிர கவனம் செலுத்துவோடு நிலவரத்தையும் சமூக உஊடகங்களில் வெளியாகும் உண்மையற்ற செய்திகளையும் அடிப்படையாக கொண்டு பெற்றோர்இ மாணவர்கள் போலவே ஆசிரியர் மற்றும் அதிபர்கள் ஒரு வித சந்தேகத்திலும் பயத்திலும் இருப்பது அவதானிக்கப்பட்டு உள்ளது. பிள்ளைகளின் பாதுகாப்பை கருதி பாடசாலை கல்வி நடவடிக்கைகளை அமுல்செய்யும் போது குழப்பமற்ற தெளிவான மனநிலையில் செயற்படவேண்டும் என்பதால்இ அத்தகு நிலைமையை உருவாக்கித்தருதல் கல்வி அமைச்சின் கடப்பாடாகும்
அதற்கமையஇ சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பின் ஆலோசனைகளை கவனத்திற்கு கொண்டு
பாடசாலை புலத்தில் ஏற்படக்கூடிய இடர் நிலைமையை அவதானிக்க வேண்டி ஓரு வார அதாவது ஜூலை 13 திங்கள் தொடக்கம் 17 வெள்ளி வரை நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் பிரிவேனாக்களுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தை அனைத்து தனியார் பாடசாலைகள்இ சர்வதேச பாடசாலைகள் மற்றும் அனுசரணை வகுப்புகள் என்பன கடைபிடிக்கும் என கல்வி அமைச்சு எதிர்பார்க்கின்றது.
என்றாலும்இ தபால் வாக்களிப்பு நிலையங்களாக பயன் படுத்தப்படும் பாடசாலைகள் உரிய தினங்களில் திறக்கப்பட்டு தபால் வாக்களிக்கும் கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றுவது அதிபர்களின் பொறு ப்பாகும்.