பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளின் போது வாகன பேரணியில் பங்கு கொள்ளும் பாடசாலைகளின் மாணவர்கள் தமது பாடசாலையின் கௌரவத்திற்கும் பெயருக்கும் பங்கம் ஏற்படுத்தாது வீதி போக்குவரத்து ஒழுங்குகளை சரியான முறையில் பின்பற்றுவது தொடர்பாக கிரிக்கெட் போட்டிகள் நடாத்தும் அனைத்து தேசிய பாடசாலைகளின் அதிபர்கள், பழைய மாணவ சங்கத்தினர் மற்றும் மாணவர் தலைவர்களை அறிவுறுத்தும் விசேட கலந்துரையாடல் கௌரவ கல்வி அமைச்சரின் ஆலோசனையின் பேரில் கல்வி அமைச்சில் நடைபெற்றது.
இதன்போது மேல்மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உரையாற்றுகையில்,
பொதுப் போக்குவரத்து பாதைகளில் பிக் மெச் கிரிக்கெட் களியாட்ட பேரணிகள் நடத்தப்படுவதனால் பொது மக்களின் போக்குவரத்து சார்ந்த உரிமைகள் மீறப்படுகின்றன. அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. கடந்த காலங்களில் இவ்வாறான நிலைமைகளினால் பாடசாலை மாணவர்கள் விபத்துக்குள்ளான சோகமயமான நிகழ்வுகள் பிரபல பாடசாலைகளில் இருந்து எமக்கு அறிய கிடைக்கின்றன. எனவே இவ்வாறான செயற்பாடுகளை தவிர்த்து பாடசாலைகளுக்கு இடையில் நட்புறவை வளர்த்து கொள்ளும் வகையில் கலாசார, பாரம்பரியத்திற்கு ஏற்ற சம்பிரதாயபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் பாடசாலை பிரதானிகள் அவதானம் செலுத்த வேண்டும்.
போட்டியில் கலந்து கொள்ளாத மகளிர் பாடசாலைகளின் மாணவிகளுக்கு இடையூறு விளைவித்தல், அவ்வாறான பாடசாலைகளுக்கு பலவந்தமாக உள்நுழைவதற்கு முயற்சித்தல், தன்னுடைய பாடசாலையின் நாமத்திற்கும் கௌரவத்திற்கும் இழிவு ஏற்படுத்தும் படியாக விளம்பரங்கள் காட்சிப்படுத்தல், பாதுகாப்பற்ற முறையில் வாகனங்களில் ஏறி பயணம் செய்தல், மதுபானம், சிகரெட்; மற்றும் போதை வஸ்து போன்றவைகளை பாவனைக்கு உட்படுத்தல், பாதைகளில் செல்லும் வயோதிபர்கள், பெண்களை கிண்டல் அடித்தல், வீதி பேரணிகளின் போது பொது மக்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொள்ளல் போன்ற ஒழுக்க விரோதமான,; தவறான செயற்பாடுகளில் இருந்து தவிர்ந்து சமூகத்திற்கு முன்மாதிரியான முறையில் போட்டிகளை வழிநடத்துவதற்கு பாடசாலை பிரதானிகள், பாடசாலை மாணவ தலைவர்கள் உட்பட் சம்பந்தப்பட்ட பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் உரிய அவதானம் செலுத்த வேண்டும்.
எனவே பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் போதும் அதற்கான வாகன பேரணிகளின் போதும் மாணவர் ஒருவர்; ஒழுக்க விதிமுறைகளுக்கு விரோதமான முறையில் நடந்துக்கொண்டால் அவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை முறையாக முன்னெடுக்கப்படும். தன்னுடைய உரிமை வென்றெடுப்பதற்காக மற்றவர்களின் உரிமைகளை பறிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.
இந்த கலந்துரையாடலுக்கு கல்வி அமைச்சின் சார்பாக மேலதிக செயலாளர் ஹேமந்த பிரேமதிலக, தேசிய பாடசாலை பணிப்பாளர் ரன்ஜித் சந்திரசேகர,சுகாதார மற்றும் போசனை பணிப்பாளர் ரேனுகா பீரிஸ், விளையாட்டு கல்வி பணிப்பாளர் தயா பண்டார ஆகியோரும் இலங்கை பொலிஸ் சார்பாக மேல் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், மோட்டார் வாகன கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பான பணிப்பாளர் சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர்எம்.ஏ.கே. ஏ இந்திக ஹபுகொட உட்பட சிரேஷ;ட பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.