நாட்டிலுள்ள அனைத்து தேசிய பாடசாலைகளிலும் பத்து வருட மற்றும் வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின்படி, கீழ்வரும் காரணங்களுக்கமைவாக விசேட மேன்முறையீடுகளுக்கு உட்பட்ட ஆசிரியர்களைத் தவிர ஏனைய இடமாற்றங்கள் 2023.04.17 தொடக்கம் நடைமுறைக்கு வரும்.
க.பொ.த (சா/த) மற்றும் (உ/த) வகுப்புக்களில் கற்பிக்கும் ஆசிரியர்களின் இடமாற்றம் காரணமாக பிள்ளைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமாயின் அது தொடர்பில் அதிபரினூடாக முன்வைக்கப்படும் மேன்முறையீடுகள் விசேட மேன்முறையீட்டுக் குழுவினூடாக மீள ஆராயப்படும்.
இதுவரையில் வழங்கப்பட்டுள்ள சகல தற்காலிக இணைப்புகள் 2023.06.30 வரையில் நீடிக்கப்பட்டுள்ளன. எனினும் 2023.06.30 இற்கு முன்னர் இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் இடமாற்றக் கடிதம் கிடைத்தவுடன் அதற்கமைவாக செயற்படுதல் வேண்டும்.