நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கான பட்டதாரி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது. இதற்காக அரச சேவையில் எந்தப் பதவியிலும் பணிபுரியும் 40 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
இந்த நடவடிக்கையானது தற்போதைய க.பொ.த உயர்தரத்திற்காக நிலவும் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர் வெற்றிடங்களை துரிதமாக பூரணப்படுத்த வேண்டிய தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்பதுடன், அந்த ஆட்சேர்ப்பின் பின்னரும் எஞ்சியுள்ள மற்றும் ஏற்படக்கூடிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஏனைய பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்காக மாகாண சபைகளால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.