மேற்படி போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதற்கான அறிவித்தல் 2023.01.27 ஆம் திகதி அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன், விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி 2023.02.10 ஆகும். இப் போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் applications.doenets.lk/exams எனும் இணையதளத்தில் பிரவேசித்து பரீட்சைக்கு விண்ணப்பித்தல் வேண்டும்.
பங்களிப்பு ஓய்வூதியம் அல்லது ஊழியர் சேமலாப நிதிக்கு / ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்துக்கு பங்களிப்புச் செய்தல் அல்லது அரச சேவையில் நிரந்தர நியமனம் அல்லாத பட்டதாரிகள் (உதாரணம்: பிரிவெனா ஆசிரியர்கள், தனியார் பாடசாலை ஆசிரியர்கள், அரை அரசாங்க சேவையில் உள்ள பட்டதாரிகள்) இப் போட்டிப் பரீட்சைக்காக விண்ணப்பிக்க முடியாது என்பதை தயவுடன் அறியத்தருகின்றேன்.