கல்விச் செயலாளரின் ED/09/Ads (SA)/7 இலக்கமுடைய 2022.08.12 ஆம் திகதிய கடிதம் மூலமாக 2022 ஆம் ஆண்டில் க.பொ.த. (உயர் தரம்) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு மாத்திரம் பாடசாலை வருகை 80% ஆக உறுதிப்படுத்துதல் கட்டாயமல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேற்படி விடுவிப்பானது 2022 ஆம் ஆண்டில் க.பொ.த. (உயர் தரம்) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு மாத்திரம் ஏற்புடையது என்பதால் 2023 ஆம் ஆண்டு தொடக்கம் அதற்குப் பிறகு வரும் க.பொ.த. (உயர் தரம்) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு 80% பாடசாலை வருகை கட்டாயமாகும் என இவ்வண்ணம் அறிவிக்கிறேன்.