‘வுhந வசயளெகழசஅயவழைn ழக நுனரஉயவழைn டிநபiளெ றiவா வநயஉhநசள”
“கல்வியில் நிலைமாற்றல் எனப்படுவது ஆசிரியர்களிடமிருந்தே ஆரம்பமாகின்றது”
எதிர்கால தேசத்தின் பிரஜைகளை கட்டியெழுப்பும் இலங்கையின் பாடசாலைக் கல்வியில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் என்போர் அர்ப்பணிப்புடனும் உற்சாகத்துடனும் நிறைவேற்றிய சேவைக்கு உரிய கௌரவத்தை தெரிவிக்கும் முகமாக கல்வி அமைச்சினாhல் சருவதேச ஆசிரியர் தினத்திற்கு இணைவாக வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படும் “குரு பிரதீபா பிரபா” ஆசிரியர் மற்றும் அதிபர்களைப் பாராட்டும் வைபவத்தினை இவ்வருடம் ஒக்டோபர் மாதம் 06 ஆந் திகதி கல்வி அமைச்சின் 7 வது மாடியில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏனைய பணியாளர்களின் மத்தியில் விசேட முக்கியத்துவம் வாய்ந்த பணியாளர்கள் எனும் அடிப்படையில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு இருக்கக் கூடிய சமூகம் சார் வரவேற்பினை மிகவும் கெரவமான மட்டத்திற்குக் கொண்டு வருவதும் மிகுந்த விளைதிறன் மற்றும் வினைத்திறனான சேவைக்கென ஆசிரியர்களையும் அதிபர்களையும் ஊக்குவித்தலும் உற்சாகப்படுத்துதலும் இத் தேசிய பாராட்டு வைபவத்தின் நோக்கமாகும்.
தேசிய பாராட்டு வைபவானது, கல்வி அமைச்சர் கலாநிதி கௌரவ சுசில் பிரேமஜயந்த் அவர்களின் தலைமையில் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ ஏ.அரவிந்தகுமார்;, பிரிவெனாக்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ விஜித பேருகொட மற்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி கௌரவ சுரேன் ராகவன் ஆகிய பிரபுக்களின் பங்கேற்புடன் சிறப்பான முறையில் நடாத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் என்.எம். ரணசிங்ஹ அவர்களின் பூரண மேற்பார்வை மற்றும் வழிகாட்டலின் கீழ் கல்வி பண்புத் தர அபிவிருத்தி பிரிவின் முகாமைத்துவம் மற்றும் தர உறுதிப்பாட்டுக் கிளையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இவ் வைபவத்தின் போது 9 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தி 45 அதிபர்கள் மற்றும் 90 ஆசிரியர்கள் என்போர் பாராட்டினைப் பெறுவதற்கு உரித்தாவர்.