பாடசாலைகளில் மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டத்தினைத் தொடர்ச்சியாக மேற்கொள்வதற்காக சீன் மக்கள் குடியரசு பத்தாயிரம் மெட்ரிக் தொன் அரிசியை நன்கொடையாக வழங்கியுள்ளது.
சுமார் 30 வருடங்களாக இந்நாட்டின் 7,925 பாடசாலைகளிலுள்ள பத்து இலட்சத்து எண்பதினாயிரம் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட பாடசாலை உணவுத் திட்டம், நாட்டில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் காரணமாக தற்போது உரியவகையில் செயற்படுத்தப்படாதிருப்பதுடன், அதற்கான உதவியாக சீன மக்கள் குடியரசினூடாக இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கும் 10,000 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடையை மேற்படி உணவுத்திட்டத்திற்கு பயன்படுத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, சீன மக்கள் குடியரசின் இரண்டாவது நன்கொடைத் தொகையான 1,000 மெட்ரிக் தொன் அரிசி, இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென்ஹொங் (Qi Zhenhong) அவர்களினால் கல்விச் செயலாளர் எம். என். ரணசிங்க அவர்களிடம் உத்தியோகபூர்வ கையளிக்கும் நிகழ்வு அண்மையில் கல்வி அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்றது.
வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகிய காரணிகளைக் கருத்திற் கொண்டு பாடசாலை உணவுத் திட்டத்திற்கு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, அவற்றுள் பெரும்பாலான பாடசாலைகள் நூறுக்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளாக இருப்பதாலும், ஒரு வேளை உணவுக்காக இதுவரையில் ஒதுக்கப்பட்டிருந்த 30/- ரூபா தொகையினை தற்போது 60/- ரூபாவாக அதிகரித்திருப்பதால், அதன்படி பாடசாலை உணவுத் திட்டத்தினை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சின் சுகாதாரம் மற்றும் போசாக்கு பிரிவானது நடவடிக்கை எடுப்பதோடு எதிர்காலத்தில் கிடைக்கப்பெறவுள்ள அரிசி தொகையினையும் பாடசாலைகளுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேவேளை அதற்கு இணையாக பாடசாலை வளாகங்களிலும், அதேபோல் வீட்டுத் தோட்டங்களிலும் பயிர்ச்செய்கைத் திட்டங்களை செயற்படுத்துவதனூடாக இந்த பாடசாலை உணவு திட்டத்தினை வெற்றிகரமாக தொடர்ந்து மேற்கொள்வதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது