இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி (Mizukoshi Hideaki) மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த ஆகியொருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று (24) இசுறுபாய, கல்வி அமைச்சில் இடம்பெற்றது.
ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான சர்வதேச உறவுகள், நமது நாட்டின் தற்போதைய கல்வித் துறை மற்றும் கல்வித் துறையில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து இந்தக் கலந்துரையாடலின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் கல்வி கற்கும் மாணவர்கள் ஜப்பான் மொழியைக் கற்பதன் முக்கியத்துவம் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. புதிய கல்வி அமைச்சருக்கு தூதுவர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் கல்வித் துறையின் முன்னேற்றத்திற்கு எந்தவொரு நேரத்திலும் தனது ஆதரவை வழங்குவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.