தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் பிள்ளைகளின் கல்விக்கு இடையூறு ஏற்படாத வகையில் உயர் கல்வி மூலோபாயத் திட்டத்தை எதிர்வரும் காலத்திலும் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்தும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளும் ஒப்பந்தங்கள் மூலம் புதிய சர்வதேச உறவுகளை உருவாக்கி இந்நாட்டில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் தொடர்பிலும் இன்று (2022 மே 24) உயர்கல்வி அமைச்சின் அதிகாரிகளுடனான சந்திப்பைத் தொடர்ந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் இக்கருத்தினைத் தெரிவித்தார்.
பல்வேறு பேரழிவு நெருக்கடிகளுக்கு மத்தியில் கடந்த இரண்டரை வருடங்களாக நாட்டில் தொடர்ந்தும் இயங்கி வரும் பொதுச் சேவை அமைப்பாக பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி முறைமையினை அமைச்சர் இதன்போது பாராட்டினார். கல்வி அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மற்றும் ஆணைக்குழு உறுப்பினர்கள் உட்பட பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களும் கலந்துகொண்டனர்.