சபை முதல்வர் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தது தனது பிறந்தநாளாக அமைந்த 02.03.2022 அன்று ஹோமாகம மற்றும் கொடகம சிறுவர் மற்றும் தாய்மார் மருத்துவ மனை மற்றும் கொடகம வடக்கு-தெற்கு சிதமு பெண்கள் அமைப்புக்கு உபகரண நன்கொடை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதாகும். அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் பாராளுமனடற உறுப்பினர் யாதாமினி குணவர்தனவின் அவர்களின் பரவலாக்கப்பட்ட நிதியிலிருந்து இந்த உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன.
பாராளுமன்ற உறுப்பினர் யாதாமினி குணவர்தனவும் கலந்துகொண்ட இவ்வைபவம் ஹோமாகம பிரதேச சபை உறுப்பினர் விக்கும் கித்சிறி தேவப்பிரிய சொய்சாவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஹோமாகம பிரதேச சபை உறுப்பினர் கமல் சந்தன, ஹோமாகம பிரதம வைத்திய அதிகாரி வைத்தியர் இந்திக்க கட்டுதம்ப, மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி ஹரித அலுத்கே மற்றும் பிரதேசவாசிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் உரையாற்றிய அமைச்சர், நாட்டில் உள்ள ஒவ்வொரு வீடாகச் சென்று மக்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் முறைமை ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார். அதற்கு உயர்கல்வி நிறுவனங்களால் ஆதரவை வழங்க முடியும் என்றும், மருத்துவம் மற்றும் தாதியர் சேவைகளுக்கு அனுசரணை வழங்க தன்னார்வ சேவைகள் தொடங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இவ்வாறும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
“உணவில் தன்னிறைவு பெற்ற நாட்டைக் கட்டியெழுப்ப தேசத்தை ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். அத்தியாவசிய உணவு பொருட்கள் சிலவற்றை எங்களால் உற்பத்தி செய்து கொள்ள இயலுமாயின் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதை இயன்றவரை குறைத்துக்கொள்ள முடியும். ஏனென்றால் உணவு வேளைகளுக்காக தமது உணவே தாமே உற்பத்தி செய்து கொள்ள வேண்டிய தருணம் இது.
அதனால்தான் வீட்டுத்தோட்ட அமைப்புகளுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம்.
வீடியோ இணைப்பு-