2022 ஜனவரி 22 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள பிள்ளைகளின் மன ஆற்றலை அதிகரிப்பதற்காகவும் அவர்களை பாராட்டும் நோக்கிலும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்கள் கொழும்பு மாவட்டத்திலுள்ள பல பாடசாலைகளுக்கு விஜயம் செய்தார்.
நாட்டில் நிலவிய கொவிட் தொற்றுநோய் நிலைமைக்கு மத்தியில் நடாத்த முடியாமல் பிற்போடப்பட்ட 2021 ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையானது ஜனவரி மாதம் 22 ஆம் நடாத்தப்படவுள்ளது. இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்காக 2943 பரீட்சை நிலையங்களில் 340,508 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
அமைச்சர், தலங்கம எம்.டி.எச். ஜயவர்தன வித்தியாலயத்தின் மாணவர்களை சந்தித்து அவர்களது மன வலிமையை மேம்படுத்துவதற்காக வாழ்த்துக்களைத் தெரிவித்த சந்தர்ப்பம். இதற்குரியதான புகைப்படங்கள் மின்னஞ்சல் செய்யப்பட்டுள்ளது. காட்சிகள் FTP செய்யப்பட்டுள்ளது.