கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்திற்கு (FUTA) இடையிலான சந்திப்பொன்று, கொழும்பு வோட் பிளேஸ் உயர் கல்வி அமைச்சில் 2021.11.05 ஆம் திகதி நடைபெற்றது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களை பிரிதான சேவைத் துறையில் அமர்த்துமாறு கோருகின்ற வேண்டுகோள் ஒன்று பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் சார்பாக முன்வைக்கப்பட்ட அதேவேளை, கல்வி மறுசீரமைப்பு, உயர் கல்வி தொடர்பிலான சில சட்டங்களில் திருத்தங்களைச் செய்தல், தனியார் உயர் கல்வி நிறுவனங்களின் ஒழுங்குபடுத்தல், உயர் தர பரீட்சை பெறுபேறுகளை விரைவாக வெளியிடுதல் ஆகிய உயர் கல்வி தொடர்பிலான பல விடயங்களை உள்ளடக்கியதாக இதன்போது கலந்துரையாடல் இடம்பெற்றது.
கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் எஸ். பன்னெஹக்க உட்பட பிரதிநிதிகள் பலர் மேற்படி கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர்.