கொடுக்கப்படும்
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பின்னர் பிள்ளைகள்
கல்வி நடவடிக்கைகளை விட்டு விலகி வீட்டில் இருக்கின்ற 08 மாத
காலப்பகுதியையும் உயர் தரப் பரீட்சையின் பின்னர் வீட்டை விட்டு விலகி
இருக்கின்ற காலப்பகுதியையும் குறைப்பதன் மூலமாக முழுமையான 08 மாத
காலப்பகுதியை அப்பிள்ளைகளின் பெறுமதியான வாழ்க்கையில் சேமித்து
கொடுக்கும் வகையில் 2022/2023 காலப்பகுதியில் உரிய திட்டங்களை
நடைமுறைப்படுத்த முடியுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்
அவர்கள் தெரிவித்தார். 2021/05/10 ஆம் திகதி பத்தரமுல்லை நெலும்
மாவத்தையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இணைந்து கொண்ட போதே
அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு கல்வி மறுசீரமைப்பு
செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகின்ற அதேவேளை,
பரீட்சைகளின் பின்னர் பாடசாலைக் கல்வியை விட்டு விலகி வீட்டில்
இருக்கின்ற காலப்பகுதியல் சிலர் கல்வி நடவடிக்கைகளை இடையில்
கைவிட்டு செல்வதற்கு முயற்சிக்கின்ற அதேவேளை, அந்த நிலைமையினை
தவிர்த்து கொள்வதற்காகவும் இலங்கையில் பிள்ளைகளுக்கு சீக்கிரமாக
தமது உயர்கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்கான சந்தர்ப்பத்தை
ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் இதனூடாக எதிர்பார்ப்பதாக அவர்
தெரிவித்தார். உலகின் ஏனைய நாடுகளில் பிள்ளைகள் 21,22 வயதில் தமது
முதலாவது பட்டத்தினைப் பெறுகின்றன அதேவேளை, இலங்கையில்
பிள்ளைகளுக்கும் அந்த நிலைமையினை ஏற்படுத்திக் கொடுப்பதே தமது
எதிர்பார்ப்பு எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதற்கான ஒரு தீர்வாக க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை நடாத்தும்
திகதிகளில் மாற்றங்களை கொண்டு வருவதற்கும் தரம் 10 மற்றும் 11
ஆகியவற்றுக்கு இதுவரையில் காணப்பட்ட கற்றல் காலப்பகுதியை 1 ½
வருடங்களில் நடை முறைப்படுத்தி நிறைவு செய்யக்கூடிய வகையில்
பாடத்திட்டங்களை தயாரிப்பதற்கு திட்டமிடுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
அதன்படி இதுவரையில் டிசம்பர் மாதம் நடாத்தப்பட்ட சாதாரண தரப்
பரீட்சையை ஆகஸ்ட் மாதத்தில் நடாத்தவும் அதன் பெறுபேறுகளை நவம்பர்
அல்லது டிசம்பர் மாதத்தில் வெளியிடவும் உயர்தர வகுப்புகளுக்கான
ஆரம்பத்தினை அடுத்த வருடம் ஜனவரி மாதம் மேற்கொள்வதற்கும்
திட்டமிடுவதாக தெரிவித்தார். 06 கற்றல் தவணைகளில் உயர்தர
வகுப்புகளை நடைமுறைப்படுத்தியதன் பின்னர் உயர்தரப் பரீட்சையினை
டிசம்பர் மாதம் நடாத்துவதற்கு திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு
வருவதாகவும் உயர்தரக் கல்விக்கு மாணவர்களை உள்ளீர்க்கும்
காலத்தினையும் 08 மாதங்களுக்கு முன்னர் நிறைவு செய்து
அப்பிள்ளைகளுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப்
பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்
கொடுப்பதற்கு நடவடிக்கைகள் திட்டமிடப்படுவதாகவும் அதனை 2022
அல்லது 2023 ஆம் ஆண்டுகளின் போது நிறைவு செய்து அதன்
பிரதிபலன்களை பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுக்க எதிர்பார்ப்பதாகவும்
அவர் தெரிவித்தார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 பிரச்சினை தொடர்பான
தடுப்பூசி வழங்குவதற்கான நிலைமை சிக்கலாக மாறியிருப்பது, உலகின்
மாபெரும் தடுப்பூசி உற்பத்தி ஆய்வுகூடமாகிய இந்தியாவின் பூனேயில்
அமைந்துள்ள “சீரம்” நிறுவனத்தினால் அந்நாட்டின் கொவிட் தாக்கத்திற்கு
மத்தியில் எதிர்பார்த்த அளவுக்கு தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முடியாமல்
உள்ளதாகவும் இதன் காரணமாக தடுப்பூசி ஏற்றுவதும் காலதாமதமாகின்றது
எனவும் தெரிவித்தார். தற்போது நாட்டில் 03 வகையான தடுப்பூசிகள்
பயன்படுத்தப்படுவதோடு அந்த தடுப்பூசிகளை ஏற்றுவது அவசியம் என்ற
போதிலும் கிராம அலுவலர் பிரிவுகள் மற்றும் பொலிஸ் பிரிவுகள்
அவசியமான வகையில் முடக்கப்பட்டு வருவதாகவும் சில நாட்களின்
பின்னர் நிலைமை சுமுகமான நிலைக்கு திரும்பியதும் முடக்கம்
அகற்றப்படுவதாகவும் தெரிவித்த அமைச்சர், அதனிலும் மாறுபட்ட
நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசாங்கம் தயாராக உள்ளதெனவும்
தெரிவித்தார். அதேவேளை மாட்டங்களுக்கிடையிலும்
மாகாணங்களுக்கிடையிலும் அவசியமான நடமாட்டத் தடைகளை
விதிக்கவும் அரசாங்கம் தயாராக உள்ளது. அரசாங்கம் எந்தவொரு
விடயத்தினையும் முழுமையாக நிராகரிக்கவில்லை எனவும் கொவிட் 19ஐக்
கட்டுப்படுத்துவதற்கு அவசியமான சகல நடவடிக்கைகள் தொடர்பிலும்
சிந்தித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம்
எப்போதும் தயாராக உள்ளதெனவும் அவர் மேலும் தெரிவித்தார். மேற்படி
தீர்மானங்களை மேற்கொள்கையில் நாட்டின் வருமானம், அன்றாட
வருமானம் பெறும் மக்கள், மக்களது ஜீவனோபாய வழிகள் உட்பட சகல
காரணிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு சந்தர்ப்பத்திற்கேற்ற
சமயோசித தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் எப்போதும்
தயாராகவே உள்ளது. அத்துடன் அரசாங்கம் எப்போதும் நடைமுறைச்
சாத்தியமான மற்றும் நெகிழ்வுத்தன்மை மிக்க மனப்பாங்குடன் இந்த விடயம்
தொடர்பில் சிந்திப்பதாகவும் அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
அத்துடன் தற்போது பாடசாலை பிள்ளைகளுக்கென
செயற்படுத்தப்படுகின்ற இணையவழிக் கல்வியானது (Online
Education) எந்தவகையில் வகுப்பறைக் கல்விக்கான மாற்றுவழியாக
அமையாது எனவும் முழு உலகும் முகங்கொடுத்துள்ள கொவிட் 19
பிரச்சினைக்கு மத்தியில் இது நடைமுறைச் சாத்தியமான மிகச்சிறந்தவொரு
வேலைத்திட்டம் எனவும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டனார்.