பாடசாலைச் சூழலுக்கு வெளியே பாரிய அளவில் மாணவர்களை ஒன்று திரட்டி நடாத்தப்படும் ஊர்வலங்கள், வாகனப் பேரணிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றினை நடாத்துதல் மற்றும் வெளி நபர்களுடன் இணைகின்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுகாதார ரீதியில் பாதிப்பினை ஏற்படுத்தும் நிகழ்வுகளுக்கு மாணவர்களை பங்குபெறச் செய்யும் நடவடிக்கைகள் கல்வி அமைச்சினால் தடை செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் பாடசாலையினுள் ஏற்பாடு செய்யப்படும் இணைப்பாடவிதான செயற்பாடுகள் (பேச்சுப் போட்டிகள், விவாதப் போட்டிகள், மர நடுகை நிகழ்வுகள் போன்ற) சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வுகள், மாணவர் மனப்பாங்கு மற்றும் திறன் விருத்தி போன்ற பாரிய அளவில் மாணவர்களை ஒன்று திரட்டாது நடாத்தும் நிகழ்வுகள், பாடசாலை அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு நடாத்தப்படும் உத்தியோகபூர்வ அரச நிகழ்வுகள் மற்றும் நபர்களுக்கிடையிலான இடைவெளியை பாதுகாத்து சுகாதார ஏற்பாடுகளுக்கமைவாக ஒழுங்கமைப்பு செய்யக்கூடிய நிகழ்வுகளுக்கு மேற்படி தடையானது ஏற்புடையதன்று.