தனது 71 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் தர்ஸ்டன் கல்லூரியின் பழுதடைந்த நிலையில் இருந்த கட்டிடங்கள் முழுமையாக மறுசீரமைக்கப்பட்டதனைத் தொடர்ந்து அப்பாடசாலையின் பழைய மாணவராகிய இலங்கையின் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களது கரங்களால் மாணவர்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்வு 2021/01/11 ஆம் திகதி இடம்பெற்றது.
இந்நாட்டின் பிரதான தேசிய பாடசாலைகளுள் ஒன்றாக விளங்கும் தர்ஸ்டன் கல்லூரி 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் திகதி அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த ஈ ஏ நுகவெல அவர்களது தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. பல்வேறு துறைகளைச் சார்ந்த உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் புகழ்பெற்ற புத்திஜீவிகள்> இராணுவ அதிகாரிகள்> கலைஞர்கள்> ஊடகவியலாளர்கள்> வர்த்தகர்கள் என பலரையும் உருவாக்கிய தர்ஸ்டன் கல்லூரியின் கட்டிடங்களை முழுமையாக மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கைகள் 2020 ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலையில் தற்போது 3000 இற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
மேற்படி நிகழ்விற்கு கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ்> வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன> பழைய மாணவராகிய பாதுகாப்பு செயலாளர் (ஓய்வு பெற்ற) ஜெனரல் கமல் குணரத்ன> பாடசாலையின் அதிபர் பிரமுதித்த விக்கிரமசிங்ஹ ஆகியோர் உட்பட பலரும் பங்குபற்றியிருந்தனர்.