• 04.09.2020 ஆம் திகதி வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி அறிவித்தலின்படி, 2020 ஆம் ஆண்டிற்காக தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு 25.09.2020 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தொடரறா முறையியல் (ழுடெiநெ ளுலளவநஅ) ஊடாக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு திருத்தங்களைச் செய்துகொள்வதற்காக மட்டுமே 26.09.2020 ஆம் திகதி தொடக்கம் 30.09.2020 ஆம் திகதி வரை 05 நாட்கள் வழங்கப்படுகின்றது.
• அதன்படி, உரிய விண்ணப்பதாரர்களால் தற்போது வரை கணினியில் சேர்க்கப்பட்டுள்ள க.பொ.த. (உ.தர) பரீட்சை சுட்டெண்ணை திருத்துவதைத் தவிர ஏனைய பிழைகள்ஃ குறைபாடுகளை சரிசெய்துகொள்ளஃ திருத்திக்கொள்ள முடியும்.
• தங்களுடைய தரவுகளை சரிசெய்யஃ திருத்திக்கொள்ள வேண்டிய விண்ணப்பதாரிகள் முன்னர் வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில் சமர்ப்பித்த தமது க.பொ.த. (உ.தர) பரீட்சை சுட்டெண்ணை உள்ளிட்டு தமது தரவுக்குள் நுழையலாம்.
• இது தமது பிழைகள்ஃ குறைபாடுகளை திருத்திக்கொள்வதற்கு தேவையுடைய விண்ணப்பதாரர்களுக்காக மட்டுமே வழங்கப்படும் ஒரு சந்தர்ப்பமாகும். எனவே, அத்தகைய தேவைகள் இல்லாமல் தமது தரவுகளில் செய்யப்படும் எந்தவொரு மாற்றங்கள் தொடர்பிலும் கல்வி அமைச்சு எவ்வித பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளாது.
• இக்காலப்பகுதிக்குள் புதிதாக விண்ணப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது.