2020 ஆம் ஆண்டுக்குரிய 05ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை 2020-10-11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்துவதற்கும், கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையை 2020 ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் 2020 நவம்பர் மாதம் 06ஆம் திகதி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2020 ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி தொடக்கம் 2020 நவம்பர் மாதம் 08ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும்.
பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை 2020 நாம்பர் மாதம் 09ஆம் திகதி ஆரம்பமாகி , 2020 டிசம்பர் மாதம் 23ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. 2020 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணைக்கான விடுமுறை டிசம்பர் மாதம் 22ஆம் திகதி தொடக்கம் 2021ஜனவரி மாதம் 01ஆம் திகதி வரை வழங்கப்பட உள்ளது. அதன்படி 2021 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் 04ஆம் திகதி பாடசாலைகளில் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.
2020 ஆம் ஆண்டுக்குரிய க.பொ.த சாதாரண தர பரீட்சை 2021-01-18 இது தொடக்கம் 2021-01-27ஆம் திகதிவரை நடத்தப்படும். இக்காலப்பகுதியில் சகல பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக மட்டும் 2021 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் 2021 ஜனவரி 17ஆம் திகதி வரை கற்கை விடுமுறை வழங்கப்பட உள்ளது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பின்னர் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் திகதியாக 2021 பெப்ரவரி மாதம் முதலாம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.