2021/2022 கல்வியாண்டின் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு பயிலுநர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்களைக் கோருவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் 2024.03.15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 2376 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை தொடரறா (Online) முறையின் மூலம் சமர்ப்பித்தல் வேண்டும் என்பதுடன் தகைமையானவர்களைத் தெரிவு செய்வதும் இம்முறை தொடரறா வழிமுறையூடாகவே நடைபெறும்.
2024.03.15 ஆம் திகதி மதியம் 12.00 மணிக்குப் பிறகு தொடரறா முறையில் இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அத்துடன் விண்ணப்பக் காலம் 2024.04.05 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.
2024.03.15 ஆம் திகதி மதியம் 12.00 மணிக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது, எனவே அந்த விண்ணப்பதாரர்கள் மீண்டும் தொடரறா முறையில் விண்ணப்பித்தல் வேண்டும்.