கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களை 2024 ஆம் ஆண்டில் தரம் 6 இற்கு இணைத்துக் கொள்வது தொடர்பிலான மேன்முறையீகளை 2024.02.13 ஆம் திகதி தொடக்கம் 2024.02.29 ஆம் திகதி வரையில் இணையவழியூடாக (Online) இப்போது சமர்ப்பிக்க முடியும்.
கல்வி அமைச்சின் www.moe.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையதளத்திற்கு பிரவேசித்து ஆகக் கூடுதலாக மூன்று பாடசாலைகளுக்கான மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க முடியும் என்கின்ற அதேவேளை http://g6application.moe.gov.lk/#/ என்ற நீட்டிப்பினூடாக நேரடியாகவே மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பமும் காணப்படுகின்றது.