பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தின் பிரகாரம் விண்ணப்பங்களை பாடசாலைகளுக்கு சமர்ப்பிக்க வைக்க வேண்டும் என்பதுடன் அதிபர்களினால் நேர்முகப்பரீட்சை நடாத்தப்பட்டு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் செயற்பாடுகள் இடம்பெறும்.
பாடசாலைகளில் ஆறாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளல் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மாத்திரமே மேற்கொள்ளப்படும்.
2024 ஆம் ஆண்டில் தரம் 1, 5 மற்றும் தரம் 6 ஆகியவற்றைத் தவிர ஏனைய இடைநிலை வகுப்புகளுக்கு க.பொ.த. (உயர்தரம் உட்பட) மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கும் குறித்த விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதுடன், அப்பாடசாலைகளில் வெற்றிடங்கள் காணப்படுமாயின், கல்வி அமைச்சின் சுற்று நிருபத்தின் பிரகாரம் அதிபர்கள் நேர்முகப்பரீட்சையை நடாத்தி, தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியலை அங்கீகாரத்திற்காக கல்வி அமைச்சிற்கு அனுப்பி வைப்பார்கள்.
அத்துடன் 2023 ஆம் ஆண்டிற்கான வகுப்புகள் தொடர்பாக மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சிற்கோ அல்லது பாடசாலைகளுக்கோ அனுப்ப வேண்டாம் என்று தெரிவிக்கின்ற அதேவேளை, பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான கடிதங்கள் கல்வி அமைச்சினால் வழங்கப்படமாட்டாது என்பதையும் அறிவிக்கிறோம்.