பெற்றோர்கள் தாங்கமுடியாத அளவிற்கு கஷ்டப்பட்டு தமது பிள்ளைகளை மேலதிக வகுப்புகளுக்கு அனுப்புவதாயின் பாடசாலைகள் இருப்பதில் எந்த பயனும் இல்லை
-கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
புதிய கல்வித்திட்ட மறுசீரமைப்புச் செயல்பாட்டில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையினைப் போன்று நான்கு மற்றும் ஐந்து ஆகிய இரு தரங்களில் வகுப்பறையில் தங்கியிருந்து பெற வேண்டிய நிச்சியமான புள்ளிகளின் அளவொன்று இருப்பதால்இ எதிர்காலத்தில் பாடசாலை வகுப்பறையில் தங்கியிருப்பது அவசியமானதாகும் என்பதுடன் சகல தரங்களுக்கும் இவ்விடயம் ஏற்புடையது எனவும் மாணவர்கள் பரீட்சைகளில் சித்தி அடைவதற்கு அவ்வாறு தினமும் பாடசாலைக்கு வருகை தருதல் அவசியமானதொரு விடயமெனவும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் தெரிவித்தார். சங்கைக்குரிய நிவித்திகல தம்மானந்த தேரர் நினைவுப் புலமைப்பரிசில் அறக்கட்டளையின் அயகம பிரிவில் 2022 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை பாராட்டும் நிகழ்வில் கலந்து கொண்ட போது அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
கல்வி என்பது சுமார் ஆயிரத்து ஐநூறு பிள்ளைகளை ஒரு மண்டபத்திற்குள் ஒன்றுதிரட்டி விரிவுரைகளை நடாத்துவதன் மூலம் அடையக்கூடிய ஒரு செயல்முறையல்ல எனவும்இ அது பிள்ளைகளின் ஒழுக்க மேம்பாடுஇ பன்மைத்துவ திறன்கள் மற்றும் ஆற்றல்களை வளர்ப்பதற்கு முன்னுரிமையளிக்கப்பட வேண்டிய ஒரு சிக்கலான செயல்முறையாகும் எனத் தெரிவித்த அமைச்சர் ஆரம்பு வகுப்புகளிலுள்ள மாணவர்களுக்கு அவ்வாறான விரிவுரைகளை நடாத்தும் மேலதிக வகுப்பு முறைமையை ஒத்த முறைமையானது எந்தவகையிலும் நடைமுறைச் சாத்தியமில்லை எனவும் தெரிவித்தார்.
கற்றல் கற்பித்தல் செயற்பாட்டிற்கு தேவையான உதவிகளைப் பெறுவதில் தவறேதுமில்லை என்றபோதிலும் அது வர்த்தகம் சார்ந்த தொழிற்றுறையாக பரிணமித்திருப்பது பொருத்தமற்றதொரு நிலை எனத் தெரிவித்த அமைச்சர்இ தற்போதைய பொருளாதார மற்றும் சமூக சவால்களுக்கு மத்தியில் பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ள பெற்றோர் தமது பிள்ளைகளின் கல்விக்காக பாரிய நிதியை செலவு செய்யகின்ற துரதிஷ்ட நிலைமையை உடனடியாக தடுக்க வேண்டுமெனவும்இ அவ்வாறில்லையெனில் ஆசிரியர் பயிற்சி அமர்வுகளை நடாத்தி அதிக பணத்தை செலவு செய்து ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கி பௌதீக மற்றும் மனித வளங்களை அபிவிருத்தி செய்து பாடசாலைகளை நடாத்திச் செல்வதென்பது இலவசக் கல்வியின் நோக்கங்களை அழித்துவிடும் எனவும் தெரிவித்தார். இவ்வாறானதொரு நிலைமை உலகில் எந்த நாட்டிலும் காண்பதற்கில்லை எனவும் இந்த நாட்டில் முன்பிள்ளைபருவக் கல்வி தொடர்பில் தற்போதுள்ள எண்ணக்கருக்கள் மற்றும் அளவுகோல்களும் முமுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டி மட்டத்தில் காணப்படுகின்றது எனவும் அதுவும் முழுமையான மாற்றத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் இங்கு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்கள்இ புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைவதென்பது வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெறுவது என்பதல்ல என்றும் மேற்படி வெட்டுப்புள்ளி தீர்மானிக்கப்படுவது மாணவர்களுக்கு அரசாங்கம் வருடாந்தம் வழங்கக்கூடிய புலமைப்பரிசில் நிதியின் அளவைப் பொறுத்தே என்பதால் இதனைவிட நிதி ஒதுக்கீட்டினை அதிகரிக்க முடிந்தால் புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளி இன்னும் குறைவடையும் எனவும் தெரிவித்தார். எனவே பெறுகின்ற புள்ளிகளின் அடிப்படையில் பிள்ளைகளை மதிப்பிடுவது நியாயமற்றது என்பதனைச் சுட்டிக்காட்டிய அமைச்சர்இ பிரபல பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்ப்பதற்கான வாய்ப்பினை வழங்கும் பொருட்டு நடத்தப்படும் இந்த புலமைப்பரிசில் பரீட்சைக்கு தற்போது அப்பிரபல பாடசாலைகளில் கல்வி பயிலும் பிள்ளைகளை பரீட்சைக்கு தோற்ற வைப்பது பயனற்ற நடவடிக்கை எபைதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அத்துடன் தற்போது நிலவும் அநாவசிய பரீட்சைக்கான போட்டித்தன்மையை இது மேலும் தீவிரப்படுத்தும் எனவும் தெரிவித்தார்.
மேலும்இ எதிர்காலத்தில் உயர்தரப் பரீட்சை நடத்தப்பட்டாலும்இ 2024 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் ஆரம்ப வகுப்புகளை பாடசாலைகளில் நடத்திச்செல்ல எதிர்பார்ப்பதோடு கைவிடப்பட்ட சகல பாடங்களுக்குமான நடவடிக்கைகளும் அடுத்த வருடத்தில் பூர்த்தியாக்கப்படும் என்றும் அதற்கமைய விடுமுறைக்காலம் குறைவடையும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். அத்துடன் நாட்டின் இளைஞர் சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் முதியோர் சனத்தொகை எண்ணிக்கையானது அதிகரிப்பதால் அது நாட்டுக்கு அதிக சுமையாக அமையும் எனவும்இ இவ்வனைத்து பிரச்சினைகளையும் வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு முறையான பொருளாதாரம் மற்றும் கொள்கைகளை உள்ளடக்கிய சிறந்த நிர்வாக முகாமைத்துவம் இருக்க வேண்டுமெனவும் அதன்போது அனைத்தையும் செய்வதற்கு பணம் அவசியமில்லை எனவும்இ மனப்பாங்கிலான மாற்றங்களே போதுமானதாக இருக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.