01. இலங்கை அதிபர் சேவையில் ஆட்சேர்ப்பது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இலக்கங்கள்; SC 93/2021(F/R),SC 40/2022(F/R), SC 26/2022(F/R), SC 476/2019(F) சமரச வழக்குத் தீர்வு தொடர்பான 12.12.2022 திகதியிட்ட தீர்வுத் தீர்ப்பின்படி, 2019.02.10 அன்று நடத்தப்பட்ட பரிட்சையில் சித்தியடைந்த விண்ணப்பதாரர்கள் இலங்கை அதிபர் சேவையின் தரம் III, II, I ஆகியவற்றில் 4718 மொத்த வெற்றிடங்களை நிரப்ப இலங்கை அதிபர் சேவை பிரமாணக்குறிப்பு ரீதியாக அதிபர் சேவையின் தரம் III க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக பொது மற்றும் கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வுக்கு 6316 விண்ணப்பதாரர்கள் 2023 மே 22 முதல் ஜூன் 10 வரை அழைக்கப்பட்டனர்.
02. இந்த நேர்முகப்பரீட்சைக்கு மேலும் 1093 விண்ணப்பதாரர்கள அழைக்கப்பட உள்ளதோடு நேர்முகப்பரீட்சைகள் 2023 செப்டெம்பர் 20, 21, 22, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் பத்தரமுல்ல, இசுருபாய, கல்வி அமைச்சின் 4 வது மாடி கேட்போர் கூடத்தில் நடைபெறும். அதற்காக 10.02.2019 அன்று நடைபெற்ற வரையறுக்கப்பட்ட போட்டிப் பரீட்சையில் தோற்றி அதில் சித்தி பெற்ற மேற்குறிப்பிட்ட விண்ணப்பதாரிகள் 1093 பேரின் பெயர் பட்டியலுடன் அட்டவணை (இணைப்பு 01) அமைச்சின் இணையதளத்தில் (www.moe.gov) வெளியிடப்பட்டுள்ளது.
03. மேலும், நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதமும், அது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட வேண்டிய வலயக் கல்விப் பணிப்பாளரின் அறிக்கைப் படிவமும் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களின் தனிப்பட்ட முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பிவைக்கப்பட்டு, மென் பிரதிகள் (இணைப்பு 02) அமைச்சின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் 1093 பேரின் பெயர்பட்டியலுடன் அட்டவணை (இணைப்பு 01)
நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் மற்றும் அது தொடர்பான இணைப்பு (இணைப்பு 02)