2024 ஆம் வருடத்திற்குரியதாக அரசாங்கப் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான ஆலோசனைக் கோவை மற்றும் மாதிரி விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டுள்ளது.
மாதிரி விண்ணப்ப படிவத்திற்கமைவாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை உரிய சகல ஆவணங்களுடன் தமக்குரியதான பாடசாலைகளின் பிரதானிகளுக்கு 2023 ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதிக்கு முன்னதாக கிடைக்கக் கூடிய வகையில் பதிவுத் தபாலில் அனுப்பி வைத்தல் வேண்டும்.
சகல தகைமைகளையும் 2023 ஜூன் மாதம் 30 திகதியின் போது நிறைவு செய்திருத்தல் வேண்டும். உரிய ஆலோசனைகள் மற்றும் விண்ணப்ப படிவத்தினை என்ற இணைப்பினூடாகவோ அல்லது www.moe.gov.lk என்ற இணையதளத்தினூடாகவோ பெற்றுக்கொள்ள முடியும்.
அரசாங்க பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குதல் – 2024