– ட்ரோன் தொழில்நுட்ப பயன்பாட்டினூடாக எதிர்காலத்தில் விவசாயத் துறையில் துரித வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது
– கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
இந்நாட்டின் முதலாவது ட்ரோன் தொழில்நுட்ப ஓட்டுநர் பாடநெறியை ஆரம்பித்து வைத்த கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள், ட்ரோன் தொழில்நுட்ப பயன்பாட்டின் மூலம் எதிர்காலத்தில் இந்நாட்டின் விவசாயத் துறையை துரித வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல முடியுமென தாம் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். பயிற்றப்பட்ட மனித உழைப்பு வளத்தின் பற்றாக்குறைக்கு தீர்வாகவும் மனித ஆற்றல்களுக்கு அப்பாற் சென்று வெற்றி கொள்ள வேண்டிய தொழிற்றுறைத் துறைகளில் நிலவும் சிரமங்களைத் தவிர்த்து செயற்றிறன் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கு இதனுடாக வாய்ப்பு கிடைக்கின்றதென அமைச்சர் தெரிவித்தார். அதனூடாக துரித தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்படுத்தி தற்போதைய உலகம் பயணிக்கும் நான்காவது தொழில்நுட்ப புரட்சியை பின்தொடர்வதற்கு, அந்த நிலையை அடைவதற்கு வெகு தொலைவில் இருக்கும் எமது நாட்டிற்கும் வாய்ப்புகள் கிடைக்குமென தாம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் கமத்தொழில் துறைசார் திறன்கள் சபையின் மற்றும் மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் தலைமையில் நாராஹேன்பிட்ட திறன்கள் வாயில் வளாகத்தில் இயங்கும் விவசாயத் தொழில்நுட்ப விரிவாக்கல் நிலையத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.