மீபே தெற்காசிய பயிற்சி அபிவிருத்தி நிறுவனத்தில் இருநூறு மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட விடுதிக் கட்டிடம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் ஆகியோரின் தலைமையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது. மேற்படிக் கட்டிடத்தில் 52 அறைகள் காணப்படுவதுடன் சர்வதேச தரங்களுக்கமைவாக சகல வசதிகளையும் கொண்டதாக இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்விற்கு போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் மொஹமட் ஆரிபுல் இஸ்லாம் ஆகியோரும் இணைந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்விற்கு இணையாக மீபே தெற்காசிய பயிற்சி அபிவிருத்தி நிறுவனத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளமும் இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டது.