உலக நாடுகளின் கல்வி அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதி அதிகாரிகளின் பங்கேற்புடன் லண்டன் நகரில் இடம்பெறுகின்ற உலக கல்வி மாநாட்டில் (2023) பங்கேற்றுள்ள கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் உலக வங்கியின் உலகளாவிய கல்விப் பணிப்பாளர் ஜெமி சாவேத்ரா (Jaime Saavedra) அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது உலகளாவிய ரீதியில் ஏனைய நாடுகளில் காணப்படுகின்ற புதிய கல்விக்கான சந்தர்ப்பங்கள் தொடர்பிலும் அத்துடன் இந்நாட்டின் கல்வித் துறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பிலும் மிகக் குறுகிய எதிர்காலத்தில் அடைந்துகொள்ள வேண்டிய உலகளாவிய கல்வி இலக்குகளை வெற்றி கொள்வதற்கு இந்நாட்டின் கல்விக் கட்டமைப்பினை வலுப்படுத்துவதற்குத் தேவையான செயற்பாடுகள் மற்றும் இடம்பெற வேண்டிய எண்ணக்கரு ரீதியான மாற்றங்கள் தொடர்பிலும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன. இதன்போது, இந்நாட்டின் கல்வி இயலுமையை விரிவாக்குவதில் நிலவும் தடைகள் மற்றும் சவால்கள் தொடர்பிலும் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்களினால் மேலதிக விளக்கங்கள் வழங்கப்பட்டன.