- இலங்கை அதிபர் சேவையின் தரம் ஐஐஐ க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக 2019.02.10 அன்று நடைபெற்ற வரையறுக்கப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து இலங்கை அதிபர் சேவையின் தரம் ஐஐஐஇ ஐஐஇ ஐ ஆகியவற்றில் ஒட்டுமொத்த 4718 வெற்றிடங்களை நிரப்ப, இலங்கை அதிபர் சேவையின் சேவை பிரமாணக்குறிப்பின் படி இலங்கையின் அதிபர் சேவை தரம் ஐஐஐ க்கு ஆட்சேர்ப்பு செய்ய பொது மற்றும் கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வுக்கு (2023 மே 22 முதல் ஜூன் 01 வரை) அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களில் க.பொ.த (சாதாரண தர) பரீட்சை கடமை ஏற்பாடுகள் காரணமாக நேர்முகத் தேர்வில் பங்கேற்க முடியாத விண்ணப்பதாரர்களுக்கு அந்த பொது மற்றும் கட்டமைக்கப்பட்ட நேர்முகத்தேர்வை ஜூன் 10ம் தேதி நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- அதன்படி, சம்மந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் தாங்கள் பரீட்சை கடமைகளில் பங்கேற்றதை உறுதிசெய்யும் ஆவணத்துடன் ஜூன் 10 ஆம் திகதி காலை 8.00 மணிக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கலந்துகொள்ளுமாறும், அந்தத் திகதியில் தாங்கள் கட்டாயம் வருவதை principalbranchnew@gmail.com பஅயடை.உழஅ பஅயடை.உழஅ எனும் மின்னஞ்சலுக்கு செய்தியை அனுப்பி உறுதிசெய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- மேலும், ஜூன் 10க்குப் பிறகு இந்த நேர்முகத் தேர்வுக்காக மறு திகதிகள் வழங்கப்பட மாட்டாது என்பதை மேலும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Wednesday, 31 May 2023
/
Published in Academics Special Notices, Ministry Special Notices, Parents Special Notices, Special Notices, Students Special Notices