இலங்கை – கொரிய தேசிய தொழில் பயிற்சி நிறுவனத்தின்
மொழி ஆய்வுகூடம் திறக்கப்பட்டது.
கடந்த காலப்பகுதி முழுவதிலும் பாரிய வரவு செலவுத் திட்ட இடைவெளியை வைத்துக் கொண்டு அதனை ஈடு செய்வதற்காக தொடர்ச்சியாக கடன்களைப் பெற்றதன் காரணமாகவும் அக்கடன்கள் உற்பத்திப் பொருளாதாரத்தில் சேர்க்கப்படாமையின் காரணமாகவும் தற்போதைய பொருளாதார நெருக்கடி தோற்றம் பெற்றதென கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் தெரிவித்தார். உற்பத்திப் பொருளாதாரம் என்பது மண்வெட்டியையும் கத்தியையும் கையிற் கொண்டு வயலுக்கு இறங்குவதே என்ற குறுகிய வட்டத்திற்குள் சிந்திக்காது தொழில்நுட்பத்துடன் இணைந்த உற்பத்திச் செயற்பாடாக அதனைப் பயன்படுத்தி தீர்வுகளைக் காண்பதே எனவும் மேலும் அவர் தெரிவித்தார். இலங்கை – கொரிய தேசிய தொழில்பயிற்சி நிறுவனத்தின் மொழி ஆய்வுகூட திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதற்கு இணையாக ஜப்பான் மொழிக் கற்றலுக்கான பயிலுநர் மாணவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் இலங்கைத் தொழில் பயிற்சி அதிகார சபையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு மற்றும் வளநிலையமும் அமைச்சரின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை எதிர்பார்க்கின்ற தரப்பினருக்கு திறன்விருத்தியை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலான முதியோர் பராமரிப்பு பாடநெறியும் இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்கள், ஒட்டுமொத்த கல்வி முறைமையும் மாற்றியமைக்கப்பட வேண்டும். சாதாரண கல்வி, தொழில் கல்வி மற்றும் உயர் கல்வி ஆகிய மூன்று துறைகளும் ஒன்றிணைக்கப்பட்டு புதிய கல்விமாற்ற செயற்பாட்டினூடாக தொழில் பயிற்சி அதிகார சபை போன்ற நிறுவனங்களுடன் இணைந்து மேற்படி சவால்களை தொழில்நுட்ப ரீதியாக வெற்றிகொள்ளும் தீர்வுகளைக் கண்டறிவதைத் தவிர பிரபல்யம்வாய்ந்த அரசியல் தீர்வுகளை மேற்கொள்வது எந்த வகையிலும் பொருத்தமற்றதெனத் தெரிவித்தார்.
உழைக்கும் தரப்பினர் வளமாக உள்ளனர் என்பதினால் மாத்திரம் திருப்தியடைந்து புதிய தொழில்நுட்பத்தினைக் கைவிட்டுவிடக் கூடாது என்றும் தொழில்நுட்பத்தினை திறன்மிக்கதாக பயன்படுத்தி 2030 நிலைபேறான உலகளாவிய அபிவிருத்தி இலக்குகளை நாம் அடைய வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்தார். அதன்போது துரிதகதியில் அறிவு இரட்டிப்பாக வளர்ச்சியடையும் இவ்வாறான தொடர்பாடல் நிலவும் இந்த யுகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு பாடத்தையும் இணைத்து நாட்டின் விவசாயத்துறையினை கட்டியெழுப்ப, ஒரு தசாப்த காலப்பகுதிக்குள் ஒட்டுமொத்த நாட்டையே முன்நோக்கி நகர்த்தி இலக்குகளை வெற்றி கொண்ட ஜப்பான் நாட்டினை நாம் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டுமெனவும் அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
இதற்குரியதான புகைப்படங்கள் மற்றும் ஒலிநாடாக்கள் மின்னஞ்சல் செய்யப்பட்டுள்ளது. வீடியோ ftp செய்யப்பட்டுள்ளது.
இதற்குரியதான புகைப்படங்கள் மற்றும் ஒலிநாடாக்கள் மின்னஞ்சல் செய்யப்பட்டுள்ளது. வீடியோ ftp செய்யப்பட்டுள்ளது.