கல்வி அமைச்சில் நிறுவப்பட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் கல்விக்கான புதிய பிரிவினூடாக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள், டிஜிட்டல் கல்வி தொடர்பான புதுத் தகவல்களை, கட்டமைப்பிற்கு அவசியமான தகவல்களை வழங்குவதும், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், அதிகாரிகள் மற்றும் மக்களை தெளிவுபடுத்துவதும், கட்டமைப்பிலிருந்து தகவல்களைப் பெறுவதும், பாடசாலைக் கட்டமைப்பின் தகவல்கள் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் டிஜிட்டல் கல்வியை மேம்படுத்துவதும் இந்த தளத்தை உருவாக்கியதன் முக்கிய நோக்கமாகும்.
இந்தப் பிரிவின் கீழ், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பக் கல்வி, தரவு முகாமைத்துவம் மற்றும் தொலைக்கல்வி ஊக்குவிப்பு ஆகிய கிளைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும் இந்தக் கிளைகளின் கீழ் நெறிப்படுத்தப்படும் சேவைகளை தெளிவுபடுத்துவதும், ஏதேனும் விசாரணைகள் இருப்பின் அதற்கான வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதும் இந்தப் பக்கத்தினூடாக மேற்கொள்ளப்படும்.