கம்பஹா வலயத்திலுள்ள பாடசாலையொன்றின் பரீட்சை மண்டபத்தில்
நேற்று (2022.05.31) க.பொ.த சாதாரண தர மாணவர்கள் சிரமங்களுக்கு
மத்தியில் பரீட்சைக்குத் தோற்றியதாக சமூக வலைத்தளங்களிலும் நாளிதழ்
ஒன்றில் வெளியான புகைப்படம் ஒன்றிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பரீட்சைகள் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற
தகவல்களின் அடிப்படையில் இந்த மண்டபத்தை பரீட்சை மண்டபமாக
தெரிவு செய்தமையும் மழையுடனான காலப்பகுதியில் மண்டபத்தை
மாற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்காமையும் இந்த நிலைமையை
பரீட்சைகள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தி உரிய ஆலோசனைகளைப்
பெற்றுக்கொள்ளாமை ஆகிய காரணிகள் தொடர்பில் பரீட்சைகள்
திணைக்களத்தினால் விசாரணைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கை
எடுப்பதற்கும் எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைகள்
ஏற்படாதிருப்பதற்காக பொருத்தமான நடவடிக்கைகளை
மேற்கொள்வதற்கும் கல்வி அமைச்சினால் பரீட்சைகள் ஆணையாளருக்கு
அவசியமான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பரீட்சைகள் திணைக்களத்தின் உரிய அறிக்கையின் பிரகாரம்
சிரமங்களை எதிர்கொண்ட பரீட்சார்த்திகளுக்கு அந்த நேரத்திலேயே
நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Ministry
- Circulars
- Ministry Structure
- Static Reports
- Procurement Notices
- Special Projects
- Divisions
- Academics