தற்போது நிலவும் போக்குவரத்து சிரமங்கள் காரணமாக ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்குதல் பின்வரும் நிபந்தனைகளின் கீழ் ஆசிரியர்களின் வேண்டுகோள்களை கவனத்திற் கொண்டு வசதியான பாடசாலைகளில் கற்பிப்பதற்காக தற்காலிக சேவை இணைப்பினை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த இணைப்புகள் 2022.12.31 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்பதுடன் அனைத்து வகையிலுமான இணைப்புப் பணிகளும் பாடசாலையின் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளில் பாதிப்பினை ஏற்படுத்தாத வகையில் சம்பந்தப்பட்ட இரண்டு பாடசாலைகளினதும் அதிபர்களின் எழுத்துமூலமான இணக்கப்பாட்டுடன் மாத்திரமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன் அதன்போது கீழ்வரும் நிபந்தனைகளை பின்பற்றுதல் வேண்டும்.
- ஒரே மாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலைகளுக்கு இடையில் மற்றும் தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு இடையில் ஆசிரியர்களை இணைப்புச் செய்வதற்கு உரிய மாகாண கல்விப் பணிப்பாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
- இரு மாகாணங்களுக்கிடையில் மாகாண சபை பாடசாலைகளின் ஆசிரியர்களை இணைப்புச் செய்யும் நடவடிக்கை உரிய மாகாணங்களின் அரசாங்க சேவை ஆணைக்குழுவின் செயலாளரின் அங்கீகாரத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டுமென முன்மொழியப்படுகிறது.
- மாகாணங்களுக்கிடையில் இடம்பெறும் தேசிய பாடசாலைகளுக்கான இணைப்பு நடவடிக்கை கல்வி அமைச்சின் கல்விப் பணிப்பாளரால் (ஆசிரியர் இடமாற்றம்) மேற்கொள்ளப்படும்.
- வேண்டுகோளை முன்வைக்கின்ற ஆசிரியர் சம்பந்தப்பட்ட பாடசாலையில் மிகையான/ மேலதிக ஆசிரியராக இருந்தால், அவர் சார்பாக வேறொருவரை பெற்றுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
- வேண்டுகோளை முன்வைக்கின்ற ஆசிரியர் சம்பந்தப்பட்ட பாடசாலையில் மிகையான/ மேலதிக ஆசிரியராக இல்லாத நிலையில், அவர் சார்பாக வேறொருவரை பெற்றுக்கொடுத்ததன் பின்னரே உரிய இணைப்பு செய்யப்பட வேண்டும்.
- அதிபர்களின் இணக்கப்பாட்டுடன் நட்புரீதியான இடமாற்றங்கள் செய்யப்படுவதைப் போன்றே அதே அடிப்படையில் செய்யப்படுகின்ற இணைப்புகளையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
- கர்ப்பம் மற்றும் மருத்துவ பரிந்துரைகளின் அடிப்படையில் செய்யப்படுகின்ற இணைப்புகள் தொடர்புடைய மருத்துவ சான்றிதழ்கள் மூலமான உறுதிப்படுத்தலுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். (2007/20 சுற்றறிக்கையியின் 3.4.II இன் படி)
- தேசிய பாடசாலைகள் தொடர்பாக மாகாணக் கல்விப் பணிப்பாளரால் செய்யப்படுகின்ற இணைப்புக்களின் கடிதங்களின் பிரதிகள் கல்வி அமைச்சின் கல்விப் பணிப்பாளருக்கு (ஆசிரியர் இடமாற்றங்கள் *) முன்வைப்பப்பட வேண்டும்.
சகல மாகாண அரச சேவைகள் ஆணைக்குழுக்கள் மற்றும் செயலாளர்கள், சகல மாகாண கல்விச் செயலாளர்கள், சகல மாகாண கல்விப் பணிப்பாளர்கள், சகல வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் சகல தேசிய பாடசாலை அதிபர்களுக்கும் இது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் போக்குவரத்து சிரமங்கள் காரணமாக ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், பிள்ளைகளுக்கு முறையான கல்வியை வழங்குவதற்குமே இந்த செயற்பாடு மேற்கொள்ளப்படுவதுடன், இந்த இணைப்புச் செயற்பாடுகள் உரிய பாடசாலைக்கு இடமாற்றம் பெறுவதற்கான உரிமையல்ல என்பதும் அறிவிக்கப்படுகிறது.