இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கிடையிலான உயர் கல்வி ஒத்துழைப்பு மற்றும் முன்னேற்றம் தொடர்பில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன் அவர்களுக்கும் ரஷ்யாவின் உயர் கல்வி அதிகாரிகள் குழுவினருக்கும் இடையிலான கலந்தரையாடலொன்று 2022.03.03 ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் இடம்பெற்றது.
மேற்படி கலந்துரையாடலுக்கு ரஷ்யாவிற்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஜனிதா லியனகே அவர்களும் இந்நாட்டின் ரஷ்ய தூதுவராலயத்தின் முதற் செயலாளர் Anatasia Khokiova அவர்களும் இணைந்து கொண்டனர்.
ரஷ்யாவின் மக்கள் நட்புறவு பல்கலைக்கழகத்தின் (லுமும்பா பல்கலைக்கழகம்) சர்வதேச விவகாரங்களுக்கான துணைவேந்தர் Larisa Ivanovna Efrernova, அதன் மருத்துவ நிறுவனத்தின் பணிப்பாளர் Alexey Yurievich Abramov, மேற்படி மருத்துவ நிறுவனத்தின் பட்டப்பின் படிப்பு பீடத்தின் பிரதானி Maria Viadimirovna Greenbeng, பட்டதாரிகளுடன் விடயங்களைக் கையாளும் பிடத்தின் பிரதானி விசேட நிபுணர் Daria Alekseevna Vasina, சர்வதேச விவகாரங்கள், தத்துவவியல் பீடத்தின் பிரதிப் பீடாதிபதி Natalla Viadimirovna Poplavskaya, மக்கள் நட்புறவு பல்கலைக்கழகத்தின் பிரதானி Yastrebov Oleg Alexandrovich, ரஷ்யாவில் கல்வியைப் பெறுவதற்கு எதிர்பார்த்துள்ள கல்வி நுழைவிற்கான ஒத்துழைப்பு நல்குதல் மற்றும் கல்வி ஆலோசனை நிறுவனத்தின் தலைவர் Dr. Hannah Halim ஆகிய பிரதிநிதிகள் உட்பட கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, மேலதிக செயலாளர் செனவிரத்ன, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, அதன் உப தலைவர் பேராசிரியர் சந்தன பிரேமகுமார உடவத்த ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.