ஆதிகாலம் தொட்டு இலங்கைக்கிடையிலான பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக ரீதியான தொடர்புகளைப் பேணிவருகின்ற சீன மக்கள் குடியரசானது இலங்கையுடனான பரஸ்பர உறவுகளைப் பேணுகின்ற, உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியாக இலங்கை முகம்கொடுத்த பல்வேறான இக்கட்டான நிலைமைகளின் போது வழங்கிய ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் இச்சந்தர்ப்பத்தில் சீனத் தூதுவருக்கு தமது கௌரவத்தினைத் தெரிவித்துக் கொண்டார்.
இலங்கையின் கல்விசார் ஆய்வுகளுக்கு, ஆராய்ச்சிகள் மற்றும் பயிற்சியளித்தல் போன்ற துறைகளுக்கு அக்காலம் தொட்டு இன்று வரையில் பெற்றுக் கொடுக்கும் உதவிகள் மற்றும் ஒத்தாசைகள் தொடர்பிலும் அமைச்சர் இதன்போது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
தற்போது இலங்கையில் பாடசாலைகள் கால அட்டவணையின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற அதேவேளை, இதன்போது இரண்டு இலட்சத்து முப்பதுனாயிரத்தைத் தாண்டிய ஆசிரியர்களுக்கான தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டினை விரைவாக மேற்கொள்ள முடிந்தமைக்கு சீனாவினால் கிடைத்த ஒத்துழைப்பே காரணம் எனவும், அது இலங்கையின் கல்வி நடவடிக்கைகளை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதில் மாபெரும் சக்தியாக அமைந்தது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கிடையில் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அமைச்சர் எந்தத் துறையில் பணியாற்றிய போதும் சீனாவிற்கு மிக நெருக்கமான நண்பர் என சீனத் தூதவர் இதன்போது தெரிவித்தார். மேலும் அமைச்சர் இலங்கையில் கல்வி அமைச்சராக பதவியேற்றமை தொடர்பில் சீனாவின் வெளிநாட்டமைச்சர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.
சீன இலங்கை பல்கலைக்கழகங்களுக்கிடையிலான கல்விப் பரிமாற்று முறைமையொன்றினை உருவாக்குதல் அத்துடன் இலங்கையின் கிராமிய பாடசாலைகளில் தகவல் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதற்கு சீனாவிமிருந்து பெற்றுக்கொள்ளக் கூடிய ஒத்துழைப்புக்கள் தொடர்பிலும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.