இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட FM விஷன் அலைவரிசை இந்நாட்டின் கவ்வியின் எதிர்காலத்திற்காக எடுத்து வைக்கப்பட்ட மாபெரும் அடித்தளமாகும் எனவும் அதன் உச்ச பயனை பெற்றுக் கொள்ளுமாறு பிள்ளைகளிடமும் பெற்றோரிடமும் வேண்டிக்கொள்வதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார்.
இன்றைய தினம் ஆரம்பிக்கப்படுகின்ற இந்த கருத்திட்டமானது எமது ஒட்டுமொத்த கல்விக் கட்டமைப்பில் தீர்மானமிக்க அழுத்தத்தினை ஏற்படுத்தும் காரணியாக அமையும். 1931 இல் முதற் தடவையாக கல்வி நிகழ்ச்சியொன்று வானொலி சேவையினூடாக வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்ட போதிலும் கல்வி நடவடிக்கைகளுக்காகவே தனியாக ஒதுக்கப்பட்ட முழுநேர அலைவரிசையொன்று இந்நாட்டில் ஆரம்பிக்கப்படுவது இன்றைய தினமாகும்.
இன்று நாட்டில் நிலவும் முன்னுரிமையின் அடிப்படையில் பார்க்கின்ற போது இந்த நிகழ்ச்சித்திட்டம் காலத்திற்கு பொருத்தமான ஒரு வேலைத்திட்டமாகும். நாட்டில் நிலவுகின்ற கொவிட் 19 தொற்றுநோய் நிலைமை மற்றும் ஏனைய பல்வேறான பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த வானொலி அலைவரிசையானது ஒட்டுமொத்த பிள்ளைகளுக்கு மிகவும் முக்கியமானதொன்றாக விளங்குகின்றது. இது முறைப்படி திட்டமிட்டதாகவும் முறையாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் படி இதன் உள்ளடக்கமானது 65% நேரடியாக விடயங்களுடன் தொடர்புபடும் விதமாகவும் 35% இணைப் பாடவிதானமாகவும் பிள்ளைகளின் கல்விக்கு பயன்படும் வகையிலான விடயங்களையும் உள்ளடக்கியதாகவும் தயாரிக்ப்பட்டுள்ளது.
FM விஷன் அலைவரிசை என்பது இந்நாட்டின் கல்வியின் எதிர்காலத்திற்கான மாபெரும் அடித்தளமாகும். அதன் பிரதிபலன் எல்லையில்லாத வகையில் எமது பிள்ளைகளுக்கு கிடைக்கும். இதனை ஆரம்பிப்பதற்கு ஒத்துழைப்பு நல்கிய சகலருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இரவு பகல் பாராது இந்த பணிக்காக அர்ப்பணிப்பு செய்த அதிகாரிகளை பாராட்டுகிறேன். அந்த சகல தரப்பினரதும் கூட்டு முயற்சிக்கான பிரதிபலனை உச்ச அளவில் பெற்றுக்கொள்ளுமாறு பிள்ளைகளிடம் கேட்டுக்கொள்கிறேன், எனவும் அமைச்சர் தெரிவித்தார்.