புதிய கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தன அவர்கள் கல்வி அமைச்சின் கடமைகளைப் பொறுப்பேற்றதன் பின்னர் முதல் தடவையாக ஆசிரிய தொழிற்சங்கங்கள் சிலவற்றினை சந்திக்கும் நிகழ்வு இன்று (2021.08.26) கல்வி அமைச்சில் இடம்பெற்றது.
ஸ்ரீ லங்கா பொதுஜன கல்விச் சேவை சங்கத்துடனான சந்திப்பு அதன் தலைவர் வசந்த ஹந்தபான்கொட உட்பட அதன் உறுப்பினர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது. இதன்போது அமைச்சர் காமிணி லொகுகே அவர்களும் பங்குபற்றியிருந்தார்.
அதன் பின்னர் இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம், இலங்கை முன்னேற்ற ஆசிரியர் சங்கம், சுயாதீன கல்வி சேவை சங்கம், இலங்கை தொழில்முறை அதிபர்கள் சங்கம், இலங்கை தேசிய அதிபர் சங்கம் ஆகியவற்றின் பிரதானிகளை சந்தித்தார். இந்த நிகழ்விற்கு கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அவர்களும் இணைந்து கொண்டார்.