கொரிய மொழியை இந்நாட்டு பாடசாலைக் கட்டமைப்பில் பிரபல்யப்படுத்தும் குறிக்கோளுடன் தேசிய கல்வி நிறுவகத்தினால் இலங்கையின் பாடசாலைகளில் பணியாற்றும் கொரிய மொழி ஆசிரியர்களுக்கான விசேட இணையவழிக் கல்விப் பாடநெறியொன்று தயார் செய்யப்பட்டுள்ளது.
கொரிய மொழியை பாடநெறியாக அறிமுகம் செய்துள்ள மேற்படி இரண்டாம் குழுவினருக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் அண்மையில் (ஜூலை 30) கொழும்பு ஷங்ரீலா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு இலங்கைக்கான கொரிய நாட்டுத் தூதுவர் ஜியோன்ங் வுன் ஜின் (Joeng Woon jin), கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுசில் ஜயந்த், தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன அவர்கள் உட்பட பல அதிதிகள் பங்குபற்றியிருந்தனர்.
கொரிய நாட்டுத் தூதுவராலயம் மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தின் வெளிநாட்டு மொழிகள் மற்றும் பாரம்பரிய மொழிகள் பிரிவின் ஒத்துழைப்புடன் இணையவழி மூலமாக மேற்படி பாடநெறி நடாத்தப்பட்ட அதேவேளை, இம்முறை 72 பயிலுநர்களுக்காக பாடநெறி நடாத்தப்பட்டது.
கல்வியின் பொருட்டு இருபத்தோராம் நூற்றாண்டில் திறன்களை ஒன்றிணைத்தல் என்பதனை தமது குறிக்கோளாகக் கொண்ட தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன அவர்களது வழிகாட்டலில் நடாத்தப்பட்ட மேற்படி நிகழ்ச்சியானது தேசிய கல்வி நிறுவகம் அத்துடன் இலங்கையில் கொரிய மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் பெற்றுக்கொண்ட மாபெரும் வெற்றியாகும்.