ஒழுக்கவிழுமியங்களைக் கொண்ட சமூகத்தினைக் கட்டியெழுப்பும் குறிக்கோளுடன் சுபீட்சத்திற்கான நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கமைவாக தற்போதைய அரசாங்கம் சட்ட திட்டங்களை உருவாக்கியுள்ள போதிலும் நாட்டில் நிலவும் பாரதூரமான பிரச்சினைகளை வெறுமனே சட்ட திட்டங்களை திருத்துவதனூடாக மாத்திரம் தீர்க்க முடியாது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார்.
ஜனாதிபதி அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற “பிரிவென் வருண” தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைவாக அடிப்படை பிரிவெனா இறுதிப் பரீட்சை மற்றும் பண்டைய (கீழைத்தேய) தொடக்கம் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற 20 பிக்கு மாணவர்களுக்கு வெளிநாட்டு புலமைப்பரிசில் வழங்குதல், அறநெறிப் பாடசாலைகள், பிரிவெனாக்கள் மற்றும் பிக்குமார் கல்வி இராஜாங்க அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தை ஆரம்பித்து வைத்தல் மற்றும் கற்றல் உபகரணங்களைக் கையளிக்கும் நிகழ்வில் இணைந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சிறுவர்களை வீட்டுப் பணிகளுக்கு அமர்த்துதல், கொடூரமான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்குதல், பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல்கள், சிறுவர் துஷ்பிரயோகங்கள் போன்றவை தற்போது நாளுக்கு நாள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. அதற்கு மேலதிகமாக 2021 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க கட்டளைச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும் சட்டக் கட்டமைப்பினை மறுசீரமைப்பதனால் மாத்திரம் எமது நாட்டில் நிலவும் பாரதூரமான பிரச்சினைகளை தீர்ப்பதென்பது எந்தவகையிலும் இலகுவான விடயமாக அமையாது. அதற்காக சங்கைக்குரிய மகாசங்கத்தினரின் முழுமையான வழிகாட்டல் மற்றும் செயற்பணி மிகவும் அவசியமான ஒரு காரணியாக உள்ளது. அதற்கு அவசியமான ஒத்துழைப்பு, வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலை உருவாக்கித் தருவதற்கு கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி அவர்களது அரசாங்கம் எப்போதும் தயாராக உள்ளது. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி அவர்களது ஆட்சியின் போதும் இவ்வாறானதொரு நிகழ்ச்சியை அநுராதபுரம் சாந்தி விகாரையில் ஆரம்பித்த விடயத்தினை இங்கு நினைவு கூற முடியும்.
இந்த நிகழ்விற்கு பிரிவெனாக்கள் பணிப்பாளர் சங்கைக்குரிய வடினாபஹ சோமாந்ந்த தேரர், சங்கைகுரிய பலாங்கொடை சோபித்த தேரர், சங்கைக்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரர், கலாநிதி சங்கைக்குரிய போதாகம சந்திம தேரர் உட்பட மகாசங்கத்தினரும் இராஜாங்க அமைச்சர்களாகிய விஜித்த பேருகொட, சுசில் பிரேமஜயந்த், பியல் நிஷாந்த, விதுர விக்கிரமநாயக்க மற்றும் சீதா அரம்பேபொல ஆகியோரும் நிரல் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட பலரும் பங்குபற்றியிருந்தனர்.