-கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்
சுகாதாரப் பிரிவினரின் உடன்பாடுகளுக்கமைவாக படிமுறை படிமுறையாக கூடியளவு சீக்கிரம் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது எனவும் அதன் முதற் கட்ட நடவடிக்கைகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் தெரிவித்தார்.
2021/07/12 ஆம் திகதி ‘நாட்டின் சகல ஆசிரியர்களுக்குமான தடுப்பூசி வழங்கும் நாடு தழுவிய வேலைத்திட்ட’ ஆரம்ப நிகழ்வில் இணைந்து கொண்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆசிரியருடன் வகுப்பறையில் பெற்றுக்கொள்கின்ற கல்விக்கு பதிலாக மகழ்ச்சிகரமான மாற்று வழியாக தொலைக்கல்வி/ இணையவழிக் கல்வியை ஒருபோதும் கருத முடியாது என்பதோடு அதில் சிற் சில குறைபாடுகளும் நிலவுகின்றதன. எனவே ஆசிரியர்களுக்காக இன்றைய தினம் ஆரம்பிக்கப்படுகின்ற தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் மிக முக்கிய நோக்கமாக அமைவது கூடியளவு சீக்கிரம் பாடசாலைக் கட்டமைப்பினை ஆரம்பிப்பதாகும்.
இன்றைய தினம் கொழும்பு வலயத்தின் ஆசியர்களுக்கு தடுப்பூசி வழங்கி ஆரம்பிக்கப்படுகின்ற இந்த வேலைத்திட்டமானது நாளைய தினத்தின் போது ஒட்டுமொத்த கொழும்பு மாவட்டத்திலுள்ள சகல ஆசிரியர்களுக்கும் தடுப்பூசியை வழங்கி நிறைவு செய்யக்கூடியதாக இருக்கும். இந்த செயற்பாடானது நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும். நாட்டில் இருக்கின்ற சுமார் 242,000 ஆசிரியர்களுக்கும் இத்தடுப்பூசி வழங்கப்படவுள்ள அதேவேளை, ஏற்கனவே குறிப்பிட்ட சதவிகிதமான ஆசிரியர்கள் மேற்படி தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளனர். ஆசிரியர்களுக்கு எதுவிதமான அசௌகரியங்களும் ஏற்படாத வகையிலும் அவர்களது கௌரவம் பாதுகாக்கப்படும் வகையிலும் இந்த தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிள்ளைகளுக்கு ஒரு வருடக் கல்வி கிடைக்காது செல்கின்ற நிலைமையானது அதனை வாழ்நாளில் ஒருபோதும் அவர்களால் ஈடு செய்து கொள்ள முடியாது எனவும் அது அவர்களது வாழ்க்கையில் நிரந்தர பிரச்சினையாகி விடும் எனவும் இந்த வேலைத்திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொள்வதற்கு நேரடியாக பங்களிப்பு தமது ஆர்வத்தினை செலுத்திய கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கும், சுகாதாரத் துறையினருக்கும் மற்றும் இராணுவத் தளபதி உட்பட முப்படையினருக்கும் தமது நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிகழ்விற்கு இராஜாங்க அமைச்சர்களாகிய சுசில் பிரேமஜயந்த, பியல் நிஷாந்த, வைத்தியர் சீதா அரம்பேபொல ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய பிரதீப் உந்துகொட, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் உட்பட பலர் பங்குபற்றியிருந்தனர்.