கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்.
எதிர்வரும் புதன்கிழமை இலங்கையின் பிரதான மருத்துவர்கள், கல்விசார் புத்திஜீவிகள்
உட்பட உரிய தரப்பினரை சந்திக்க எதிர்பார்ப்பதாகவும் அதன் போது பாடசாலைகள்,
பிரிவெனாக்கள், பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பது தொடர்பிலான
ஆலோசனைகளைப் பெறவிருப்பதாகவும் அதனடிப்படையில் பாடசாலைகளை திறப்பது
தொடர்பான தீர்மானத்தினை மேற்கொள்ளவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர்
ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். 2021/05/09 ஆம் திகதி அநுராதபுரம் ஜயந்தி
விகாரை, ருவன்வெலிசாய, லங்காராமய ஆகிய முப்பீட விகாரைகளின் சங்கைக்குரிய
தலைமைத் தேரர்களை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே
அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போது நாட்டில் வாரா வாரம் சுகாதார நிலைமை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு
பாடசாலைகள், பிரிவெனாக்கள் மற்றும் பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பது தொடர்பில்
தொடர்ச்சியாக கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் மேலதிக வகுப்புகள் தொடர்பான
நிலைமையும் இதுவேயெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். கொவிட் 19 பிரச்சினை
நாட்டில் காணப்படுவதால் நாட்டின் அன்றான நடவடிக்கைகளை முடக்கி விடுவதற்கு
அரசாங்கம் எதிர்பார்க்கவில்லையெனவும் ரஷ்யாவின் மற்றும் சீனாவின் தடுப்பூசிகள்
அதேவேளை உலக சுகாதாரத் தாபனத்திடமிருந்தும் அவசியமான தடுப்பூசிகள் தற்போது
கிடைக்கப்பெற்று வருவதாகவும் அதன்படி மக்களுக்கு விரைவாக தடுப்பூசிகளை பெற்றுக்
கொடுப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் அவர் மேலும் இதன்போது
தெரிவித்தார்.
Wednesday, 12 May 2021
/
Published in Ministry News, Uncategorized @ta, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்